வாழ்வியல்

அச்சத்தையும் கவலையையும் தூக்கி எறியுங்கள்: எந்த நோயும் வராது ; எந்த மருந்தும் வேண்டாம்

எந்தவிதமான நோய் தாக்கியிருந்தாலும் தாக்கும் என்று பயந்தாலும் முதலில் செய்ய வேண்டியது – அச்சத்தையும் கவலையையும் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

அச்சத்தையும் கவலையையும் தூக்கி எறிந்து விட்டு சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை தொடர்ந்து செய்யுங்கள். எந்த நோயும் வராது ; எந்த மருந்தும் வேண்டாம்

உணவே மருந்து என்று முன்னோர் கருத்துக்கு இணங்க என்ன உணவு சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும் என்ன உடற்பயிற்சி செய்தால் நலம் கிடைக்கும் என்று சொல்லும் பயனுள்ள அறிவுரைகள் வருமாறு:–

* பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைக்கோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

*இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

* சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

* உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.

* நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *