வாழ்வியல்

அசுத்தக் காற்றை சுவாசிப்பதால் மனிதர்கள் வாழ்நாள் குறையும்–2

உலகளவில் காற்று மாசுவால் நம் வாழ்க்கையின் ஆயுட்காலம் 20 மாதங்கள் குறையலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால், தெற்காசியாவில் இது மிகவும் மோசமாக இருப்பது போல தெரிகிறது.

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் பிறக்கும் குழந்தைகள், இந்த சுத்தமற்ற காற்றால், தங்கள் வாழ்க்கையில் 30 மாதங்களை இழக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று மாசால் மட்டும், இங்கு ஆயுட்கால விகிதங்கள் குறைகிறது என்று கூறவிட முடியாது. இது போன்ற நாடுகளில் இதனை கட்டுப்படுத்த, போதிய சுகாதார அமைப்புகள் இல்லை என்பதும் உண்மையே.

காற்று மாசால் நீரிழிவு

சுத்தமற்ற காற்றை சுவாசிப்பது, டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும் மூன்றாவது பெரிய காரணியாக இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. வீரர்கள் சிலருக்கு நீரிழிவு நோய் குறித்த எந்த அறிகுறிகளும் எட்டு ஆண்டுகளாக இல்லாமல் இருக்க, சுத்தமற்ற காற்றை சுவாசித்ததற்கும், அவர்களுக்கு ஏற்பட்ட நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

ஆனால், இது எப்படி நிகழ்கிறது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும், காற்று மாசுவால் நுரையீரலில் வீக்கம் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. இது உடலின் மற்ற அமைப்புகளுக்கு பரவக்கூடும்.

இன்சுலின் உற்பத்தியில் ஈடுபடும் செல்கள் வீக்கமடைந்து, உடலில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் இன்சுலினை பாதிக்கும் என்று ஒரு கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *