செய்திகள்

அசாம், மேற்கு வங்கத்தில் 69 தொகுதிகளில் 2 ஆம் கட்ட தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

கொல்கத்தா, ஏப். 1–

அசாம், மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்டத் தேர்தல் நடைபெறும் 69 தொகுதிகளிலும், வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது முதலே, வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இன்று 2 ஆம் கட்டமாக 30 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

மொத்தம் 516 வேட்பாளர்கள்

இந்த 30 தொகுதிகளில் மொத்தம் 171 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 152 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவர். இந்த 30 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் வாக்குசாவடிக்கு வந்து விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.

அதேபோல், அசாம் மாநிலத்திலும் இன்று 2 ஆம் கட்டத் தேர்தல் 39 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறுகிறது. இங்கும் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர். 2 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 வாக்குசாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கு வாக்குப்பதிவு தொடங்க தாமதம் ஏற்பட்டது. இந்த 39 தொகுதிகளில் மொத்தம் 345 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 73.44 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *