திஸ்பூர், ஜூலை 1–
அசாமில் திருமணம் செய்து கொள்ள காதலனுடன் சென்ற 17 வயது சிறுமியை நிர்வாணப்படுத்திய இன்ஸ்பெக்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது காதலனை திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதில் காதலர்கள் இருவரும் கோக்ராபர் காவல் நிலைய போலீசார் பிடித்து கைது செய்தனர்.
அதன் பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அன்று இரவு லாக்கப்பில் அடைத்து வைத்துள்ளனர். அப்போதே அன்று இரவு பதினேழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.
போக்சோ வழக்கு
அந்த வகையில் அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் ஒருவர் சிறுமியை மிரட்டி ஆடைகளை கழட்ட சொல்லி நிர்வாணப்படுத்தியுள்ளார். மேலும் அதனை புகைப்படமாக எடுத்துக் கொண்ட காவல் ஆய்வாளர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை புகார் கடிதம் எழுதி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். அதனைத் தொடர்ந்து, டிஐஜி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமுறைவாகியுள்ள காவல் ஆய்வாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.