செய்திகள்

அசாமில் மீண்டும் நிலநடுக்கம்

கவுகாத்தி, மே 10-

அசாமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.

அசாமில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுவருகிறது. இன்று காலை 7.05 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவானது. நாகோன் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்ததை உணர முடிந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் இந்த மாதத்தில் மட்டும் 6-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக நேற்று அதிகாலை சோனித்பூர் பகுதியில் 3.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள் அம்மாநில மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *