செய்திகள்

அங்கம்பாக்கம் ஊராட்சியில் மாட்டுவண்டி பந்தயம்

காஞ்சிபுரம், ஜன. 19–

அங்கம்பாக்கம் ஊராட்சியில் மாட்டுவண்டி பந்தயம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாலாஜாபாத் அருகே உள்ள அங்கம்பாக்கம் ஊராட்சியில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கிராம நாட்டாமை குமார், கிராம பூசாரி சேகர் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் மாட்டுவண்டி பந்தயம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மதிமுக ஒன்றிய கழக செயலாளரும், அங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான து. ஏழுமலை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி வீரர்கள் உரிமையாளர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மதிமுக துணைத்தலைவர் ஜெயசுதா முருகேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தாட்சாயினி வெங்கடேசன் , ரீட்டா சிவா, இளவரசி கண்ணப்பன், பாவலன், பிரேமா வரதராஜன், ஊராட்சி செயலர் கபாலி மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய கழக துணை செயலாளர் அங்கம்பாக்கம் வரதராஜன் , ஸ்ரீ ஈஸ்வரநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செங்குட்டுவன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை பொருளாளர் ஞானமணி உள்ளிட்ட கிராம பொதுமக்கள், கிராம பெரியோர்கள் ,விழா குழுவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 17 ஆண்டுகள் பிறகு அங்கம்பாக்கம் ஊராட்சிக்கு வந்திருந்த காஞ்சி வரதராஜா பெருமாள் என்கின்ற அத்திவரதர் சுவாமி கிராம பொதுமக்களுக்கு காட்சியளித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *