செய்திகள்

செப். 8: தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னை, செப். 8–

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து 35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த ஆண்டில் கொரோனா பெருந்தொற்று பொதுமுடக்கம் தொடங்கியதில் இருந்து, கிடுகிடுவென உயரத்தொடங்கியது. அதன் பிறகு, பொதுமுடக்கத்தில் தளர்வுகள் ஏற்பட்டவுடன் விலை குறைந்து, ரூ.33 ஆயிரம் வரையில் வந்தது. பின்னர், மீண்டும் இரண்டாம் அலையின்போது விலை உயர்ந்து ரூ.36 ஆயிரம் வரையில் வந்தது. அதன்பிறகு, அதன்பிறகு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது.

ரூ.160 குறைவு

இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து 35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூபாய் 40 குறைந்து ரூ.4,452 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.69.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.69,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *