செய்திகள்

அக். 23 – மீண்டும் ரூ.36 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.224 உயர்வு

சென்னை, அக். 23–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ரூ.36,120 க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்களில் திடீரென அதிகரிக்கும் தங்கம் விலை, அடுத்தடுத்த நாட்களில் குறைந்து ரூ.35 முதல் ரூ.36 ஆயிரத்தில் நீட்டித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,482 க்கும் ஒரு சவரன் ரூ.35,856 க்கும் விற்பனையானது.

சவரனுக்கு ரூ.224 உயர்வு

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,487 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.35,896 க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.36 ஆயிரத்தை எட்டியுள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ரூ.4,515 க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.36,120 க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69.90 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,900 க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *