செய்திகள்

அக். 2: தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ. 600 உயர்வு

சென்னை, அக். 2–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 448 உயர்ந்த நிலையில், இன்றும் சவரனுக்கு ரூ.152 அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி வீழ்ச்சியைக் கண்டது. சற்றும் எதிர்பாராத விதமாக தொடர்ந்து 4 நாட்கள் குறைந்து ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. பின்னர், ஏற்ற இறக்கத்தை சந்தித்து ரூ.34 ஆயிரத்திலேயே நீட்டித்து வந்த தங்கம் விலை, நேற்று காலை அதிரடியாக சவரனுக்கு ரூ.448 உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது.

ரூ.152 உயர்வு

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,368 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.34,944 க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.4,387 க்கு விற்பனையாகிறது.

அதன்படி, இன்று சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.35,096 க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,600 க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *