செய்திகள் வர்த்தகம்

அக். 15: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.35 ஆயிரத்து 720க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சற்று ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தின் முதலே, அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இடையிடையே சற்று குறையவும் செய்தது.

இந்த வாரத்தில் முதல் மூன்று நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று 2வது நாளாகக் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.4,465க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.35 ஆயிரத்து 720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் குறைந்து ரூ.67.40க்கும், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.300 குறைந்து ரூ.67 ஆயிரத்து 400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *