செய்திகள்

அ­ரசு ஊழி­யர்­க­ளுக்­கு பழைய ஓய்வூதிய திட்டம்: பா.ம.க. வலி­யு­றுத்­தும்

சென்னை, மார்.15

அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இப்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும் என்று தேர்தல் அறிக்கையை வெளியிட்­டு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி­னார்.

வரும் மக்களவைத் தேர்தலையொட்­டடி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறு­வ­னனர் டாக்டர் ராமதாஸ், இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் வரு­மாறு:

* இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்குடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,000 வழங்கும் குறைந்தபட்ச அடிப்படை வருமானத் திட்டத்தை செயல்படுத்தும்படி, மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.

* கொடிய வறுமை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்குப் போதுமான உணவை வழங்கிப் பாதுகாப்பு அளிப்பது அரசின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.

* மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம், ஆதரவற்றோருக்கான உதவித் தொகை ஆகிய திட்டங்களின்படி வழங்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

வேளாண்மை துறை­க்­கு தனி பட்­ஜெட்

* வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மாநில அரசுகள், உழவர் அமைப்புகளின் ஆலோசனை பெற்று இந்த அறிக்கை தயாரிக்கப்படும்.

* இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டுக்கு ரூ.6,000 மானியம் போதுமானதல்ல என்பதால், இதை ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமாக உயர்த்த பா.ம.க. வலியுறுத்தும். அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்படும்.

* வேளாண் தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50% இலாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். இதற்காக வேளாண் விளை பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.

* வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்வதில் உள்ள சிக்கல்களை களையும் நோக்குடன், வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம் அமைக்கப்படும்.

* 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக உழவர்கள் வருங்கால வைப்புநிதி ஆணையம் அமைக்கப்படும்.

பயிர்க்கடன் தள்ளுபடி

* இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஒரு லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான பயிர்க்கடன்களில் ரூ.1 லட்சம் தள்ளுபடி செய்யப்படும். மீதமுள்ள தொகையை உழவர்கள் குறிப்பிட்ட காலத்தில் செலுத்தினால் அதன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

* கூட்டுறவு சங்கங்கள் மூலம் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொள்ளும். அவ்வாறு தள்ளுபடி செய்யும் தொகையில் ஒரு பகுதியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.

பயிர்க்­க­டன்­க­ளுக்­கு இனி வட்­டி­வசூல் இல்­லை

* பொதுத்துறை வங்கிகள் மூலம் இனிவரும் காலங்களில் வழங்கப்படும் பயிர்க் கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படாது. குறிப்பிட்ட தவணை காலத்திற்கு முன்பாகவே செலுத்தப்படும் தொகைக்கு 10% வட்டிமானியம் வழங்கப்படும்.

* தென்னை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் நீரா பானம் உழவர்க ளுக்கு அதிக இலாபம் கொடுக்கும் என்பதால், அனைத்து மாநிலங்களிலும் நீரா பானம் எடுக்க அனுமதி வழங்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொள்ளும்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதை 100 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மைக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும். * தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்.

நீர்ப்பாசனம்

* தமிழ்நாட்டின் நலனுக்காக கோதாவரி & காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.

* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பா.ம.க. வலியுறுத்தும்.

* ஆறுகள் தேசிய மயமாக்கப்படவேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். நதிகள் இணைப்புக்கு இதுதான் அடிப்படை ஆகும். எனவே, மாநிலங்களுக்கு இடையே பாயும் அனைத்து ஆறுகளையும் தேசிய மயமாக்குவதற்காக பா.ம.க. பாடுபடும்.

* அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப்பெற பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

சுற்றுச்சூழல்

* காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்க பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்ய பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

மாநில சுயாட்சி

* மத்திய & மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து, இன்றைய சூழலில் ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய ஆணையம் அமைக்க பா.ம.க. வலியுறுத்தும். ஓராண்டிற்குள் ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டு, உடனடியாக அதன் பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* நெருக்கடி நிலை காலத்தின்போது, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவ மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50% இடங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.

* மத்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் அளவு தற்போதுள்ள 44 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்படவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும். சமூகநீதி

* 2021 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படுவதற்கு பா.ம.க. பாடுபடும்.

இடஒதுக்கீட்டு உச்சவரம்பு நீக்­கம்

* இந்தியாவில் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு அகற்றப்படும். தேசிய அளவிலான இடஒதுக்கீட்டின் அளவு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். இதற்கு வசதியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்.

* தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க பா.ம.க. பாடுபடும்.

* அரசுத் துறை மற்றும் பொதுத்துறை பணிகளில் பதவி உயர்விலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்டம் இயற்ற பா.ம.க. பாடுபடும்.

* உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு அறிமுகம் செய்ய பா.ம.க. வலியுறுத்தும்.

* ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் போன்ற மருத்துவ உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீடு உரிமை பெறுவதற்கு உள்ள தடைகளை நீக்க பா.ம.க. பாடுபடும்.

மாநில முன்னுரிமை

* மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் கடைநிலை பணியிடங்கள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்படும். அதாவது, கடைநிலைப் பணிகளில் 100% மாநில இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் அந்தந்த மாநில இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டும் என்பதை கட்டாயமாக்கி, புதிய சட்டம் இயற்றப்படும்.

வருமான வரி விலக்­கு ரூ.7 லட்­சம்

* தனிநபர்களின் வருமான வரி விலக்கு வரம்பை தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்த பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு இப்போது 20% வருமான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இனி ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வருமான வரி வசூலிக்கப்படவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலான ஆண்டு வருமானத்திற்கு தற்போது 30% வருமான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20% வருமான வரி வசூலிக்கப்படும்.

* ரூ-.15 லட்சத்திற்கும் கூடுதலான ஆண்டு வருமானத்திற்கு இனி 30% வருமான வரி வசூலிக்கப்படும்.

* தனிநபர்களின் சேமிப்பை ஊக்-குவிக்கும் வகையில், அரசுப் பத்திரங்களில் செய்யப்படும் ரூ.2 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.

ஜி.எஸ்.டி. வரி

* ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக மாற்றப்படும்.

* ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 10%, 25% என்ற அளவில் இருக்கும்.

* இன்றைய நிலையில் 5% ஜி.எஸ்.டி. விகிதத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.

* 12% மற்றும் 18% வரி விகிதத்தில் உள்ள பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி 10 விழுக்காடாக குறைக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துமே 10% வரி விதிப்பு அல்லது முழுமையான வரி விலக்குப் பிரிவில்தான் இருக்கும்.

* இப்போது 28% வரி விகிதத்தில் உள்ள பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி 25 விழுக்காடாக குறைக்கப்படும். மகிழுந்துகள், ஆடம்பரப் பொருட்கள் உள்ளிட்டவை மட்டுமே இந்த வரி விதிப்புப் பிரிவில் இருக்கும்.

* தங்கம் மீதான 10% இறக்குமதி வரி ரத்து செய்யப்படும். இதனால் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,000 வரை குறையும்.

மது – புகையிலை ஒழிப்பு

* புகையிலைப் பொருட்களின் விலையை அதிகரித்து, விற்பனையை குறைக்கும் நோக்குடன் 100% தீமை வரி விதிக்கப்படும்.

* பள்ளிகள், கல்லூரிகளுக்கு 100 மீட்டர் சுற்றளவில் புகை யிலைப் பொருட்கள் விற்கக் கூடாது என்ற விதியும், 18 வயது நிறைவடையாத வர்களுக்கு புகையிலைப் பொருட்கள் விற்கக் கூடாது என்ற விதியும் கட்டாயமாக செயலாக்கப்படும்.

கல்வி

* கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.

* உலகத்தரம் வாய்ந்த கல்வியை, முழுக்க முழுக்க அரசின் செலவில் இலவசமாக வழங்க பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும். இதற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் குறிப்பிட்ட விகிதாச்சார அளவில் பகிர்ந்து கொள்ள வகை செய்யப்படும். உயர் கல்வி

* உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இதனால் ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டும்.

* மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவிலும், மாநில அளவிலும் மாணவர் ஆணையங்கள் அமைக்கப்படும். நலவாழ்வு

* சென்னையில் ரூ.1,000 கோடி செலவில் தேசிய புற்றுநோய் மையம் அமைக்கப்படும்.

* இந்தியாவில் மருத்துவக் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் 2 மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

தொழில்துறை வளர்ச்சி

* இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டை இரட்டிப்பாக்கும் வகையில் புதிய கொள்கை தயாரித்து வெளியிடப்படும். பட்டாசு ஆலைகள்

* பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துரை பெற்று இச்சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு ஆலைகள், அவற்றின் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன்களும் பாதுகாக்கப்படும்.

பழைய ஓய்­வூ­திய திட்­டம்

* அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இப்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.

* அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்புசார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு 10% ஆண்டு வட்டி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும். மாதம் ரூ.4000 நிதியுதவி

* இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியு-தவி வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

* சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 45ஆம் எண் தேசிய நெடுஞ்சாலையை எட்டுவழிச் சாலையாக விரிவுபடுத்த மத்திய அரசை பா.ம.க. கோரும்.

* திண்டிவனம் & கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை விரைந்து முடிக்க பா.ம.க. பாடுபடும். * தமிழ்நாட்டில் 17 ஆயிரம் மெகாவாட் அளவுக்கான அனல்மின் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன. அவற்றுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றைக் களைந்து, மின் திட்டங்களைச் செயல்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

உள்ளாட்சி & கிராமப்புற வளர்ச்சி

* ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை மத்திய அரசும், மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும். தமிழ் ஆட்சிமொழி

* எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும்.

வழக்காடு மொழியாக தமிழ்

* சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க பா.ம.க. பாடுபடும்.

* ராஜீவ் கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுவாழ் தமிழ் நலன்

* அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* வளைகுடா நாடுகளில் கடைபிடிக்கப்படும் புதிய கொள்கை காரணமாக, வேலை இழக்கும் தமிழர்களுக்கு மாற்றுவேலை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

கச்சத்தீவு மீட்பு

* 1974ஆம் ஆண்டில் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க பா.ம.க. பாடுபடும்.

மீண்டும் வாக்­குச்­சீட்­டு

* இந்தியாவில் தேர்தல் நடைமுறையும் முடிவுகளும் ஐயத்திற்கு இடமின்றி இருப்பதை உறுதி செய்ய மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

பெண்கள் பாதுகாப்பு

* நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவை உடனடியாக நிறைவேற்ற பா.ம.க. பாடுபடும்.

* நாடு முழுவதும் காவல்துறையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கும்.

* பொதுத்துறை வங்கிகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்கு கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்.

பெண் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம்

* பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் அவர்களின் 18வது வயதில் ரூ. 10 லட்சம் கிடைக்கும் வகையில் ஒரு தொகை அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.

முத்தலாக்

* முத்தலாக் மூலம் மணமுறிவு வழங்கும் முறையை ரத்து செய்து சட்டம் இயற்றப்படும். எனினும், முத்தலாக் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படாது.

* இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும். இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது

* இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாநில அரசின் மூலமாக தஞ்சாவூரில் அவருக்கு மணி மண்டபம் அமைக்க பா.ம.க. பாடுபடும்.

* திரைத்துறை வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது போன்று, நடிப்புத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாரத் விருது பெற்ற நடிகரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் பெயரில் தேசிய விருது தோற்றுவித்து வழங்கப்பட வேண்டும் என்றும் பா.ம.க. வலியுறுத்தும்.

இளை­ய­ரா­ஜா­வுக்­கு பாரத ரத்­னா

* மக்களை மயக்கும் வகையிலான மண்ணின் இசையால் தமிழகத்தின் புகழை உலகம் முழுவதும் பரப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றுத்தர பா.ம.க. பாடுபடும்.

இவ்­வாறு அந்தத் தேர்தல் அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ள­து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *