Uncategorized

பெண்களின் பாதுகாப்புக்காக “ரவுத்திரம் செல்போன் செயலி”

சென்னை, அக். 16- பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட “ரவுத்திரம்” என்ற செல்போன் செயலியை கமல்ஹாசன் வெளியிட்டார். தாம்பரம் சாய்ராம் கல்லூரி அரங்கில், பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சுதா உருவாக்கிய “ரவுத்திரம் (RAUDRAM) எனும் செல்போன் செயலி வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டு செயலியை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:- சகோதரி சுதா பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உருவாக்கிய இந்த செல்போன் செயலியை வெளியிடுவதில் மகிழ்கிறேன். இது ஆயுதம் அல்ல, தொழில்நுட்ட கருவி […]

Uncategorized

ரத்த உறைவு நோய்: கேஎம்சிஎச் மருத்துவமனையில் நவீன சிகிச்சை

விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை இருக்கும்பட்சத்தில் ரத்தம் உறைதல் நோயில் இருந்து விடுபடலாம் என, கேஎம்சிஎச் மருத்துவர் மேத்யூ செரியன் தெரிவித்து உள்ளார். கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை தலைவர் மேத்யூ செரியன் கூறி உள்ளதாவது:– அக்டோபர் 13-ந் தேதி உலக ரத்த உறைவு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ஒரு இடத்தில் ரத்தம் உறையும்போது, ரத்த குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக செல்லாமல் அந்த பகுதியில் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தாமதமாக […]

Uncategorized

கலப்படமற்ற பருத்தி: மத்திய அரசுக்கு ‘சைமா’ கோரிக்கை

கலப்படமற்ற பருத்தி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஜவுளித்துறைக்கு சைமா அமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது. தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் நடராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– கடந்த சில ஆண்டுகளாக கழிவு பஞ்சின் விலையில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக பருத்தி சீசன் சமயத்தில் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜின்னிங் ஆலைகள் கழிவு பஞ்சை நல்ல பருத்தியுடன் கலப்படம் செய்வதே காரணம். இதனால் நூலின் தரம் பாதிக்கப்படுகிறது. இந்திய […]

Uncategorized

செம்மனஅள்ளியில் புதிய நியாய விலைக்கடை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பெலமாரஅள்ளி ஊராட்சி, செம்மனஅள்ளி கிராமத்தில் பொது விநியோகத்திட்டத்தின் புதிய பகுதிநேர நியாய விலைக்கடையை மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான் தலைமையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-– தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1056 நியாய விலைக்கடைகள் மூலம் பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள செம்மனஅள்ளி பகுதிநேர நியாயவிலைக்கடை 1057 வது நியாயவிலைக் கடையாகும். எஸ்.3577 திருமல்வாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் […]

Uncategorized

ரெட் அலர்ட் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை: வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி

சென்னை,அக்.5– தமிழகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு […]

Uncategorized

மெட்ரோ ரெயில் 2வது திட்டத்துக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடன் வழங்க ஒப்புதல்

சென்னை, செப். 24– மெட்ரோ ரெயில் 2வது திட்டமான மாதவரம் – சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் – சிறுசேரி சிப்காட் இடையே ரெயில் பாதை அமைக்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ‘ஜிகா’ கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் முதல் திட்டத்தில் விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் வரையும்; விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையும் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த முதல் திட்டத்தில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். – வண்ணாரப்பேட்டை […]

Uncategorized

கடலூரில் ரூ.550 கோடி வெள்ள பாதுகாப்பு பணிகள் 90% நிறைவு

கடலூர், செப்.22– கடலூர், கம்மியம்பேட்டை, திருவந்திபுரம் அணைக்கட்டு, பேருந்து நிலையம் அருகில் மேம்பாலம் எதிரில் உள்ள சின்ன வாய்க்கால் ஆகிய பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.350 கோடி வெள்ள நிவாரண பணிகள் குறித்து முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபால் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்தியை வெளியிட்டார். கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றுப்பகுதியில் நடைபெற்றுள்ள பணிகளையும், கோண்டூர் பகுதியிலிருந்து மழைக்காலங்களில் வடிகால் வாய்க்கால் மூலம் தண்ணீர் கெடிலம் ஆற்றுக்கு […]

Uncategorized

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு 2 வார பயிற்சி முகாம்

கோவை, செப்.11– கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கான 2 வார பயிற்சி முகாம் தொடங்கியது. பாரதியார் பல்கலைக்கழக தாவரவியல் துறை மற்றும் புதுடெல்லி இந்திய தேசிய அறிவியல் அகாடமி, அலகாபாத் தேசிய அறிவியல் அகாடமி, பெங்களூர் இந்திய அறிவியல் அகாடமி இணைந்து நடத்தும் உயிர்தொழில் நுட்பம் மூலம் பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய இரண்டு வார பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது. இம்முகாமிற்கு இந்திய அளவில் ஜம்மு-காஷ்மீர், புதுடெல்லி, உத்திரப்பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா, […]

Uncategorized

மோடி அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது: ராகுல்

டெல்லி, செப். 10– எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போது ஒன்று சேர்ந்துள்ளது. மோடி தலைமையிலான அரசை வீழ்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ராகுல் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று  வருகிறது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘பிரதமர் மோடி அனைத்து […]

Uncategorized

டிவி நடிகை தற்கொலை வழக்கில் நடிகருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு ஜெயில் ரத்து

சென்னை, செப்.6- டி.வி. நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சக டிவி நடிகர் தேவானந்துக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு டிவி தொடர்களில் நடித்தவர் வைஷ்ணவி. பாபா உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும், இன்னொரு டி.வி. நடிகரான தேவானந்த்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 2006-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் வைஷ்ணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து […]