சிறுகதை

இயற்கை விளைச்சல் | நஞ்சன்

அரசாங்கம் கொடுத்துள்ள இலவச ஆடுகளை வைத்து காப்பாற்ற அரை ஏக்கர் வானம் பார்த்த பரம்பரை பூமியும் அதில் உள்ள ஓட்டு வீடும் தான் ரங்கசாமியின் சொத்து. ரங்கசாமியும் அவரது மனைவியும் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தனர். பூமியில் இருபத்திரண்டு தென்னை மரங்கள் உள்ளன என்றாலும் தண்ணீர் இல்லாததால் தேங்காய் விளைச்சல் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. தற்போது ஆடுகளை மேய்ப்பதும் ஒரு வேலையாக மாறிவிட்டதால் இருவருமே வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ” […]

சிறுகதை

பிரிவு உபச்சாரம்

கல்வித் துறை அலுவலகத்தின் தலைமை அதிகாரி பரந்தாமன். தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அந்த துறையின் அலுவலர்கள் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் அவரை சந்திக்க வந்தனர். சார் வணக்கம். வாங்க… எல்லோரும் உட்காருங்க என்ற பரந்தாமன்… சங்க நிர்வாகிகள் எல்லோரும் மொத்தமா வந்து இருக்கீங்க… என்ன ஏதாவது பிரச்சனையா… அல்லது ஏதாவது விஷசேமா… உங்க எல்லாத்தையும் மொத்தமா பார்த்தாலே என்னமோ…. ஏதோன்னு.. நினைக்க தோனுது என்று கேட்டார். அது ஒண்ணும் இல்லை சார்… விசேஷம் தான் என்று […]

சிறுகதை

இப்படியும் ஒரு காதல் | நன்னிலம் இளங்கோவன்

‘‘ஏன்….ணா அப்பாவ அவசரப்பட்டு முதியோர் இல்லத்தில சேர்த்தீங்க? என்கிட்ட கொண்டாந்து விட்டுருக்கலாம்ல?’’ ‘‘என்னம்மா இப்படி சொல்லிட்ட. நான் ஒன்னும் அப்பாவ முதியோர் இல்லத்தில கொண்டு போய் விடல . உன்னோட அண்ணிகிட்ட, கோபிச்சுக்கிட்டு என்கிட்டக்கூட சொல்லிக்காம அவரா போய் சேர்ந்துகிட்டாரும்மா. நீ என்னை தப்பா நினைக்காத . அப்பாவோட குணம் தான் உனக்கு தெரியுமே. தொட்டதுக்கும் கோபப்படுவார்னு. தாமோதரன் முதியோர் இல்லத்துக்கு வந்து இன்றோடு ஒரு மாதம் முடிந்துவிட்டது. இருதய நோய்க்கு மனைவியை பறிகொடுத்தவர். மருமகளிடம் இருக்க […]

சிறுகதை

தள்ளி உட்காருங்க…. | ராஜா செல்லமுத்து

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. வேலை நாட்களை விட்டு விட்டு விடுமுறை நாட்களில் வேலை அதிகம் இருக்கும். அந்த ஒரு வார அழுக்கை ஒரே நாளில் துவைக்க வேண்டிய கட்டாயம். இல்லையென்றால் வரும் நாள் எல்லாம் அழுக்காகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்ற ஆதங்கத்தில் ஒவ்வொரு ஞாயிறும் எனக்கு துணி துவைக்கும் நாளாகவே தோன்றும். அந்த ஞாயிறும் துணியைத் துவைத்து போட்டுவிட்டு “உஷ்” என உட்கார்ந்தேன். ஒருநாளும் வீட்டில் இருந்ததில்லை. விடியும்போது வெளியே போனால் இருள் கவிழும் […]

சிறுகதை

வயதுக்கு மரியாதை | துரை. சக்திவேல்

சென்னையில் உள்ள அரசு அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர் சுந்தரம். அவரது மனைவி ரஞ்சனி வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார். அவர்களது ஒரே மகன் சஞ்சய். தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். கணவன் மனைவி இரண்டு பேரும் உயர்ந்த பதவியில் இருப்பதால் சென்னையில் சொந்தமாக பங்களா வீடு கட்டி நல்ல வசதியாக வாழ்ந்தனர். வீட்டில் சமையல் வேலை மற்றும் துணி துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை பார்த்துக் கொள்ள வேலைக்கு ஆட்கள் வைத்துக் […]

சிறுகதை

கல்லூரி முதல்வர் அறிவுரை | கோவிந்தராம்

அன்று கல்லூரி முதல்வர் இரண்டாம் ஆண்டு மாணவ –மாணவிகளை அழைத்து சில கட்டுப்பாடுளைக் கடைப்பிடித்தால் இந்தாண்டு அனைத்து பாடத்திலும் முழுமையாக தேர்ச்சி பெற முடியும் ; முதல் ஆண்டு பாக்கி உள்ள பாடத்திலும் தேர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என்றார் கல்லூரி முதல்வர் . உடனே மாணவிகள் அனைவரும் கூட்டமாக எழுந்து நின்று முதல்வர் சொல்லும் அனைத்தையும் முழுமையாகக் கடைப்பிடிப்போம் என்று கூறி அமர்ந்தனர். உடனே முதல்வர் இனிவரும் நாட்களில் வகுப்பில் பேராசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவ […]

சிறுகதை

முதல் தெய்வம் | நன்னிலம் இளங்கோவன்

அம்மாவ பத்தி நானே சொல்லக்கூடாது. ஆனாலும் எங்க அம்மாவ எனக்குதான நல்லாத் தெரியும். என்னோட ஒவ்வோரு அசைவிலயும் எங்கம்மா எனக்குள்ள இருக்கறதுதான் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். நான் பிறந்த முப்பதாவது நாள் – எங்கப்பா ஒரு விபத்துல இறந்துட்டாரு… அதுக்காக எங்கம்மா மத்தவங்கள மாதிரி அப்பன முழுங்கனவ ; பெத்த அப்பனையே சாகடிச்சவ; அப்படி இப்படின்னு திட்டாம இன்னைக்கு வரயிலயும் என்ன பொத்திப் பொத்தி வளக்குறாங்க…. அப்படி இருக்குற அம்மா இல்லாம நான் எப்பிடி நல்லா இருக்க […]

சிறுகதை

படத்தலைப்பு | ராஜா செல்லமுத்து

“என்ன டைட்டில் வச்சிருக்கீங்க ஆனந்த்” “ம்…. நல்ல டைட்டில் தான் ராஜூ’’ “சொல்ல மாட்டீங்களா?” இப்பவெல்லாம் யாரயும் நம்ப முடியாது ராஜூ. கேட்டுட்டு போய் அப்படியே வச்சுட்டுப் போயிறாங்க . அதான் பயமா இருக்கு” “அப்ப சொல்ல மாட்டீங்க” “என்னங்க ராஜூ சங்கடப்படுத்திட்டீங்க புளிய மரம்”தான் என்னோட தலைப்பு’’ “புளிய மரம்” ரொம்ப நல்லாயிருக்குங்க “நன்றி” “ஆனா … ஒரு பிரச்சினை இருக்கே “என்ன ராஜ்” சுந்தர ராமசாமின்னு ஒரு எழுத்தாளர் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ […]

சிறுகதை

பழைய போனக் கொடு (அ.வேளாங்கண்ணி)

பழைய பட்டன் போனிலிருந்து டச் ஸ்கிரீனுக்கு தாத்தாவும் மாறவேண்டும் என பேத்தி அடம்பித்த காரணத்தால் தாத்தா கில்பர்ட்டிற்கு புதிய போன் கிடைத்தது. ஆனால் தாத்தாவால் தனது புதிய போனை எப்படி உபயோகிப்பது எனத் தெரியவில்லை. எல்லாவற்றையும் ஆறு வயது பேத்தி சுருதி தான் சொல்லிக் கொடுத்தாள். தினமும் பள்ளி விட்டு வந்ததும் தாத்தாவுக்கு செல்போன் பாடம் நடத்துவது சுருதிக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. அம்மாவோ அப்பாவோ.. சாப்பிட இல்லை படிக்க கூப்பிடும் வரை செல்போன் கிளாஸ் தொடரும் […]

சிறுகதை

ஆச்சரியம் | கோவிந்தராம்

அன்று சுதந்திர தினவிழா. மாவட்ட ஆட்சித் தலைவர் முறைப்படி தேசியக்கொடி ஏற்றிய பின் சாதனையாளர்களுக்கு சிறப்புச் செய்து பரிசுகள் வழங்கினார். கல்வி அலுவலருக்கு அரசு உயர் நிலைப்பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் நூறு சதம் தேர்ச்சி பெற்றதற்கும் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு பரிசும் பதக்கமும் வழங்கப்பட்டன. இதேபோல் சுகாதாரத்துறை அலுவலருக்கு பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக சுத்தம் செய்த வார்டு சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு சிறப்பு பரிசும் பணமுடிப்பும் வழங்கப்பட்டன. அடுத்து முன்னாள் குடியரசுத்தலைவரின் திட்டதின் […]