போஸ்டர் செய்தி

எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா?

சென்னை,ஆக.14– தமிழக அரசியல் வரலாறு தெரியாமல் ரஜினி பேசியிருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது இப்படி பேசியிருப்பாரா? என்றும் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கேட்டார். திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அண்ணாதிமுக உருவாக கருணாநிதி காரணமாக இருந்தார் என்றும், அண்ணாதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த முதலமைச்சர் […]

போஸ்டர் செய்தி

எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து

சென்னை, ஆக.14– இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளம் மிக்க முன்னோடி மாநிலமாக்கவும் நாம் அனைவரும் சாதி, மத, பேதங்களை கடந்து இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் அயராது உழைப்போம் என்று சுதந்திர தின வாழ்த்து செய்தியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– நம் பாரத நாட்டிற்கு வணிகம் செய்வதற்காக வந்து, படிப்படியாக நம்மை அடிமையாக்கி ஆட்டிப் படைத்த ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து, நம் […]

போஸ்டர் செய்தி

பில்லூர் அணையிலிருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

மேட்டுப்பாளையம்,ஆக.14– பில்லூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பில்லூர் அணை உள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதி, கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. பில்லூர் அணையின் நீர் மட்டம் 100 அடியாகும். கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் […]

போஸ்டர் செய்தி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை,ஆக.14– தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22- ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தூத்துக்குடி […]

போஸ்டர் செய்தி

இமாச்சல பிரதேசத்தில் அடைமழையால் வெள்ளப்பெருக்கு; நிலச்சரிவு: 16 பேர் பலி

சிம்லா,ஆக.14– இமாச்சல பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அடைமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். வடமாநிலங்களில் தற்போது பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியான இமாச்சல பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடைவிடாத அடைமழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவால் […]

போஸ்டர் செய்தி

கேரளாவுக்கு ரூ.100 கோடி நிதி உதவி: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

திருவனந்தபுரம், ஆக.13-மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரூ.100 கோடி உடனடி நிதியுதவி அளிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக மத்திய அரசு சார்பில் கேரள அரசுக்கு வழங்க வேண்டியிருந்த ரூ.80.25 கோடியை வழங்கவும் நேற்று ஒப்புதல் அளித்ததாக அவர் கூறியுள்ளார். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று விமானம் மூலம் பார்வையிட்டார். அவருடன் […]

போஸ்டர் செய்தி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.13– ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். லட்சக்கணக்கான பக்தர்களும் தேரின் வடத்தை பிடித்து இழுத்து சென்றனர். “கோவிந்தா! கோபாலா! கிருஷ்ணா” என பக்திப் பரவசம் விண்ணைப் பிளந்தது. தேர் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்ந்து நான்கு ரத வீதிகளில் சுற்றிச்சென்று இன்று காலை 9.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. விழாவையொட்டி தேர் பல வண்ண […]

போஸ்டர் செய்தி

அமெரிக்காவில் 6.5 ரிக்டரில் நிலநடுக்கம்; சுனாமி அபாயம்

அலாஸ்கா,ஆக.13– அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6.58 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அதனால் சுவிக் ஆற்று படுகை மற்றும் பேர்பேங்க்ஸ் நகரத்துக்கு இடைப்பட்ட பகுதிகள் கடுமையாக குலுங்கின. பீதியில் வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்தபடி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இதனால் பல இடங்களில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. […]

போஸ்டர் செய்தி

கருணாநிதியின் உண்மை விசுவாசிகளும், தொண்டர்களும் என் பக்கம்

சென்னை,ஆக.13– கருணாநிதியின் உண்மையான விசுவாசிகளும், தொண்டர்களும் தன் பக்கம் இருப்பதாக கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். சென்னை மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியின் நினைவிடத்தில் அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி கூறியதாவது:– எனது மனதில் உள்ள ஆதங்கத்தை என் அப்பாவிடம் வேண்டிக் கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. கருணாநிதியின் […]

போஸ்டர் செய்தி

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

புதுடெல்லி, ஆக. 13– உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து மக்களவை முன்னாள் தலைவர் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி (வயது 89) இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார். வயது மூப்பு காரணமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி, கடந்த 40 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்தை அடுத்து, அவர் சமீபத்தில் தான் வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில், சாட்டர்ஜிக்கு நேற்று நேற்று காலையில் லேசான […]