செய்திகள்

டெல்லியில் இருந்து மேகாலயா ஆளப்படுகிறது: ராகுல் குற்றச்சாட்டு

சில்லாங், ஜன. 23– மேகாலயா மாநிலம் டெல்லியில் இருந்து ஆளப்படுகிறது என, ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ கடந்த ஜனவரி14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்தப் பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணம் மார்ச் 20-ம் […]

Loading

செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏ மாதிரி ஒத்துப்போகவில்லை

சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் மீண்டும் பின்னடைவு புதுக்கோட்டை, ஜன. 23– வேங்கைவயல் விவகாரத்தில் 31 பேரின் டிஎன்ஏ மாதிரி ஒத்துப்போகவில்லை என்று தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து போலீஸ் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. தனிப்படை […]

Loading

செய்திகள்

392 தூண்கள், 44 கதவுகள், 5 மண்டபங்கள் அயோத்தி ராமர் கோவில் கட்டமைப்பின் சிறப்பம்சங்கள்

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே ஜொலித்தது. இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:–அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலானது பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதன் நீளம் 380 அடி (கிழக்கு–மேற்கு), உயரம் 161 அடி கொண்டதாகும். ராமர் கோயிலானது மூன்று அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம். இதில் மொத்தம் 392 தூண்களும், 44 […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள்: பட்டியலை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்

சென்னை, ஜன. 22– நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் ஆகும். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள […]

Loading

செய்திகள்

தூத்துக்குடியில் எலி மருந்து பாக்கெட் கிடந்த தண்ணீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு

தூத்துக்குடி, ஜன. 22– எலி மருந்து பாக்கெட் கிடந்த தண்ணீரை குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பு வடக்கு ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜன். கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் 2-வது மகன் விக்னேஷ் (வயது 13), பக்கத்து ஊரான விஜயராமபுரம் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு மாலையில் […]

Loading

செய்திகள்

கும்பாபிஷேக நேரலைக்கு போலீஸ் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட்

சென்னை, ஜன. 22– அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின் நீதிபதி கூறியதாவது:- ராமர்கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தனியார் கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை. அறநிலையத்துறையின் கீழ் உள்ள […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்

வெற்றியை உங்கள் காலடியில் சமர்ப்பிப்போம்: மாநாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை சேலம், ஜன.22- நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள். வெற்றியை உங்கள் காலடியில் சமர்பிப்போம் என்று சேலம் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். சேலத்தில் நேற்று நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- ராமேசுவரத்தில் ஒருவர் (பிரதமர் மோடி) இருக்கிறார். 22 கிணறுகளில் நீராடிவிட்டு ராமநாதசுவாமியை நோக்கி பார்க்க போய்க்கொண்டு இருக்கிறார். […]

Loading

செய்திகள்

ஜன.22–தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னை, ஜன.22– தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.46 ஆயிரத்து 640–-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.40 உயர்ந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

‘பெரிய வளையம்’: பிரபஞ்சத்தின் புது சவால்

தலையங்கம் விஞ்ஞானம் வளர புரிதல் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் முழுமையாக தெளிதல் ஏற்படுகிறதா? இதற்கான விடைத் தேடல் மனிதகுலத்திற்கு இறுதி நொடி வரை தொடரும் என்பது தான் உண்மை! அறிவியல் என்பது இயற்கையை அறிந்து தெளிவு ஏற்படுத்துவது என்று புரிந்தாலும், அறிவியல் வரையறுக்கப்பட்ட உண்மை அதாவது மாறாதது, மாறக்கூடாது என்றும் தோன்றுகிறது. அதற்கு நல்ல உதாரணம் புவிஈர்ப்பு சக்தி. அண்டசரசாரத்தில் எல்லா நிலப்பரப்புகளிலும், Mass அதாவது நிறை துகள்கள் இருந்தால் அதற்குள் மின் சக்தியும் இருக்கும். அப்படி என்றால் […]

Loading

செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல்: சென்னை ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை

டெல்லி, ஜன. 20– ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான உயர்மட்டக்குழுவின் தலைவரான முன்னாள் குடியரசு தலைவலர் ராம்நாத் கோவிந்த், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்றம் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஒன்றிய பா.ஜ.க. அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் எந்தளவுக்கு சாத்தியம் என்பது குறித்து ஆராய்வதற்காக, முன்னாள் குடியரசுத் […]

Loading