செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழகத்திற்கு 2 ஆம் இடம்

சென்னை, ஆக.14- வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு 2 ஆம் இடமும் உள்நாட்டினரை ஈர்த்ததில் முதலிடமும் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு, வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு 2,68,86,638 பேர் சுற்றுலா வந்துள்ளனர். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்துள்ள முதல் மூன்று மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவுக்கு சுமார் 50,78,514 பேர் சுற்றுலா வந்து சென்றுள்ளனர். […]

செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி 15 போலீஸ் அதிகாரிகளுக்கு தங்க பதக்கம்; ரூ.25 ஆயிரம்

சென்னை, ஆக.14– 2018 ம் ஆண்டு சுதந்திரதினத்தையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தங்க பதக்கங்கள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]

செய்திகள்

ரூ.2 கோடி செலவில் வன மரபியல் வள பூங்கா; வன ஆராய்ச்சி 100வது ஆண்டு விழா

சென்னை, ஆக.14– வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில், கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வன ஆராய்ச்சி பிரிவில் 16–ந் தேதி (வியாழன்) அன்று காலை 9.30 மணியளவில் நடைபெறும் தமிழ்நாடு வன ஆராய்ச்சிப் பிரிவின் 100–வது ஆண்டு விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் பங்கேற்று வன மரபியல் வள மரப்பூங்காவினை துவங்கி வைக்கிறார். மீன்வளம் மற்றும் பணியாளர் நலன் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் பி.பென்ஜமின் ஆகியோர் விழாவில் […]

செய்திகள்

சமூக ஊடகத்தில் முதன்முறையாக மோடியின் சுதந்திர தின உரை நேரலை

டெல்லி, ஆக. 14– நாளை நடக்க உள்ள சுதந்திரதின விழாவை முதல் முறையாக சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்ப மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் 71-வது சுதந்திரதினம், நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக, சுதந்திர தின விழாவில், தீவிரவாதிகளின் தாக்குதல் இருக்கலாம் எனத் தகவல் வெளியானதை அடுத்து, டெல்லி செங்கோட்டை, காஷ்மீர் எல்லை, நாட்டின் முக்கிய இடங்கள் மற்றும் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. முதன்முறையாக நேரலை இந்த நிலையில், இந்திய […]

செய்திகள்

தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல்

சென்னை,ஆக.14– இன்று நடந்த தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மறைந்தார். இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம் தொடங்கி நடைபெற்றது. பொதுச்செயலாளர் க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு உட்பட […]

செய்திகள்

2 திருமண மண்டபங்களை விரைந்து முடிக்க அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

* ரூ. 20 கோடியில் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபம் * ரூ. 17 கோடியில் கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபம் சென்னை, ஆக.14– சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சென்னையில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் ஆகிய திருக்கோயில்களுக்கு சொந்தமான இரண்டு நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபங்கள் கட்டும் பணிகள் முன்னேற்றம் மற்றும் […]

செய்திகள்

சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்: இந்தியாவின் எல்லையில் பதற்றம்

டெல்லி, ஆக. 14– எல்லைப் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் எல்லையில், சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லைப் பகுதி அமைந்துள்ளது. இங்கு 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது. இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால், ஏற்பட்ட சிறிய மோதலில் இரு தரப்பு நாட்டு ராணுவத்தினரும் படைகளைக் குவித்ததால், பதற்றம் ஏற்பட்டது. அதன் பின், […]

செய்திகள்

அண்ணா தி.மு.க. செயற்குழு 20–ந் தேதி கூடுகிறது

சென்னை, ஆக.14– அண்ணா தி.மு.க. செயற்குழு வரும் 20–ந் தேதி (திங்கட்கிழமை) அன்று சென்னையில் நடைபெறும் என்று அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருக்கிறார்கள். அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– அண்ணா தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகின்ற 20.8.2018 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை, அவ்வை […]

செய்திகள்

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி,ஆக.14– ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 17 -ம் தேதி விசாரிக்க உள்ளது. தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள பசுமைத் […]

செய்திகள்

மெட்ரோ ரெயில் பாதை பூந்தமல்லி வரை நீட்டிப்பு

சென்னை,ஆக.14– சென்னை மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பயணிகள் பயன்பெறும் வகையில் தற்போது 2-வது கட்டமாக அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதை பூந்தமல்லி வரை நீட்டிக்கப்பட உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்திற்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை -விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்-–சென்ட்ரல், சைதாப்பேட்டை-–டி.எம்.எஸ் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. பயணிகள், பொதுமக்கள் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு பெரிதும் வரவேற்பு […]