வாழ்வியல்

கஞ்சியில் அடங்கியுள்ள பல மருத்துவ குணங்கள்!

இந்திய முறைகளில் மட்டுமல்ல, பண்டைய காலத்து கிரேக்க முறைகளிலும் கூட கஞ்சி ஒரு மிக முக்கியமான உணவு பொருளாக இருந்துள்ளது. விவசாயிகளின் ஆரோக்கியத்தின் ஆணிவேர் கஞ்சி. கஞ்சிக் குடித்து ஏர்கலப்பை பிடித்து உழுதவன் யாரும் டிரெட்மில் கண்டதில்லை. ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி மிக முக்கியமான பானம் ஆகும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் பெருமளவு உதவுகிறது. இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் இருந்தவன் கூட ஒரு டம்ளர் கம்மங்கஞ்சி குடித்தால் சுறுசுறுப்பாகி விடுவான். பருவமடைந்த […]

வாழ்வியல்

நட்சத்திரங்கள் விட்டு விட்டு ஒளிர்வது ஏனென தெரியுமா?

ஒவ்வொரு நட்சத்திரமும் ஏன் விட்டு விட்டு ஒளிர்கிறது என்பதற்குப் பின்னால் உள்ள ரகசியத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கக் கூடும். முன்னர் அருகிலுள்ள இரு கோள்கள் மோதுவதால் உண்டாகும் சிதைவுகளை நட்சத்திரமானது விழுங்குவதால் அவை அவ்வாறு தோன்றுகின்றன என விஞ்ஞானிகள் நம்பியிருந்தனர். இக் கருத்து நீண்ட காலமாகவே விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு புதிராகவே இருந்து வந்துள்ளது. இது சிறிய நட்சத்திரம், 430 ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ளது. ‘RW Aur A’ என்றழைக்கப்படும் இந் நட்சத்திரம், 1937 ஆம் ஆண்டளவில் […]

வாழ்வியல்

சந்திராயன்–2 ல் உள்ள சிறப்புகள் என்னென்ன?

சந்திராயன்-2 திட்டத்திற்கான ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’, சந்திரன் குறித்து ஆய்வு செய்வதற்காக சந்திராயன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் சந்திராயன்-1 திட்டம் வெற்றியை தொடர்ந்து, தற்போது சந்திராயன்-2-வது திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இந்த விண்கலம் வரும் ஜனவரி மாதம் 3-ந்தேதி ஜி.எஸ். எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதி கட்ட […]

வாழ்வியல்

எடை குறைக்க, முடி வளர உதவும் மருத்துவ குணமுள்ள ஆளிவிதை–3

ஆளி விதை எண்ணெய் மற்றும் ஆளி விதை மாத்திரைகளை உட்கொள்ளலாமா? ஆளி விதை எண்ணெய் மற்றும் ஆளி விதைகளால் தயாரிக்கப்பட்ட மாத்திரையை இன்றைக்கு பலரும் உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதன் எண்ணெயை சாலட்டில் சேர்த்துக்கொள்ளலாமே தவிர, சமைக்கும்போது உபயோகிக்கக் கூடாது. ஆளிவிதை எண்ணெயை குறிப்பிட்ட அளவுக்கு மேல் சூடாக்கினால், அது உணவை ஊசிப்போக வைத்துவிடும். ஆளிவிதை மாத்திரையை நாள் ஒன்றுக்கு ஒரு முறைதான் உட்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் வழக்கமாகப் பருகும் நீரைவிட அதிக அளவில் குடிக்க வேண்டும். […]

வாழ்வியல்

மணிக்கு 1,223 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் வாகனம்!

மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்டு செயல்படும் தனது வாகனத்தின் வடிவமைப்பை ஹைப்பர்லூப்டிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதிகரிக்கும் நெரிசல், மாசு, செலவு போன்றவற்றின் காரணமாக போக்குவரத்து என்பது எரிச்சல் மிக்கதாகவும், நேரத்தை கரைப்ப தாகவும் மாறிவரும் சூழ்நிலையில் பேருந்து, கார், ரயில், விமானம் போன்றவற்றிற்கு அடுத்து மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்ட அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வாகனத்தை உருவாக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹைப்பர்லூப்டிடி என்ற நிறுவனம் தனது முதலாவது […]

வாழ்வியல்

எடை குறைக்க, முடி வளர உதவும் மருத்துவ குணமுள்ள ஆளி விதை–2

* `லிக்னன்ஸ்’ (Lignans) எனப்படும் ஒருவகை ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆளி விதையில் அதிக அளவில் உள்ளது. இது நேரடியாக உடல் எடையை குறைக்கத் துணைபுரியாவிட்டாலும், செல்களின் செயல்பாட்டை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பை எரிக்கத் துணைபுரியும். அத்துடன் உடலுக்குச் சிறந்த ஊட்டச்சத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும். * குறைந்த அளவு கார்போஹைட்ரேட், மாவுச்சத்து, சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டது. அதனால் கலோரியின் அளவும் குறைவாகவே உள்ளது. இதில் நார்ச்சத்தின் அளவுதான் அதிகம். * ஆளிவிதையில் 20 % புரதச்சத்து நிறைந்துள்ளதால், எளிதில் […]

வாழ்வியல்

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் மங்களாம்பிகை பெருமை

கும்பகோணம் அம்பாள் மங்களாம்பிகை! ஆதி கும்பேசர் கோவில் கொண்ட வளர் மங்கை! மங்கள நாயகி மந்திர பீடேஸ்வரி! மகா மகா புண்ணியத்தில் அன்னை பார்வதி! * முக்கண்ணனார் அம்மையப்பன் பாதி ஒருவம்! அது முப்பத்து ஆறாயிரம் கோடி மந்திரம்!! ஐம்பத்தொரு சக்திதல அன்னை வடிவம்! இவை அத்தனையும் கொண்டதிந்த சக்தி பீடம்! * உலகைக் காத்திடும் ஒப்பற்ற நாயகி! மனம் உவகை அடைந்திட வழிகாட்டும் தேவகி!! சத்திய ரூபினி! சாந்தஸ்வரூபினி! காவிரித் தென் கரையில் கோவில் கொண்ட […]

வாழ்வியல்

விண்கற்களின் பயணப் பாதை வரைபடம் உருவாக்க முயற்சி!

ஜப்பானின், ‘ஹயபுசா 2 விண்கலம்‘ ரியுகு விண்கல்லையும், அமெரிக்காவின் நாசா அனுப்பிய, ‘ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம்‘ பென்னு விண்கல்லையும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, விண்கற்கள் ஆராய்ச்சி, திடீரென சூடு பிடித்திருக்கிறது. இந்த சூட்டோடு, விண்கற்களின் பயணப் பாதையை கண்டறிந்து, விண்கற்களின் விண்வெளி வரைபடத்தை உருவாக்க வேண்டும் என்கின்றனர், ‘பி612 பவுண்டேசன்’ என்ற அமைப்பினர். இந்த அமைப்பு, பூமிக்கு அருகாமையில் வரும் விண்கற்களை கண்டறிந்து, அவற்றை பூமியோடு மோதாமல், நடு விண்வெளியிலேயே திசை திருப்பிவிடுவதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. இந்த […]

வாழ்வியல்

எடை குறைக்க, முடி வளர உதவும் மருத்துவ குணமுள்ள ஆளிவிதை–1

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவரிடம் சென்றவர்களுக்குத் தெரியும். அவர் பரிந்துரைத்த பத்து உணவுகளில் `ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர்’ என்ற ஆளி விதைபொடி கட்டாயம் இடம் பிடித்திருக்கும். அண்மை காலமாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர், ஆளி விதைபொடி கலந்த வெதுவெதுப்பான நீரைக் காலையில் வெறும் வயிற்றில் பருகுங்கள், தொப்பைக் குறையும்’ என்று அறிவுறுத்துகின்றனர். சிலர் சாலட்டில் தூவியும் இதை உட்கொள்கின்றனர். எங்கே கிடைக்கும் இந்த பிளாக்ஸ் சீட்ஸ் பவுடர்? எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும். `அப்படியானால், […]

வாழ்வியல்

மழைக்கால நோய்களைத் தீர்க்க உதவும் நிலவேம்பு!

நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய நோய்களையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. நிலவேம்பு இலையை அரைத்து பாலுடன் கலந்து காலையில் உட்கொள்ள உடல் வலுவாகும். பாம்புக் கடிக்கு இதன் இலையை கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுக்க கடி நஞ்சு நீங்கும். நிலவேம்பு கசாயம் அருந்தும்போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை […]