சினிமா

‘சிண்ட்ரல்லா’ : லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம்

உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட் ரல்லா. இப்பாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட் ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. லட்சுமி ராய் பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர் எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவின் மாணவர் வினோ வெங்கடேஷ். படத்தைத் தயாரிப்பது எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் . இவர்கள் திரையரங்கு நடத்துவதிலும், திரைப்பட […]

சினிமா

‘சண்டக்கோழி – 2’–ல் உடன் உழைத்த 150 கலைஞர்களுக்கும் கீர்த்தி சுரேஷ் ‘தங்கக்காசு’!

சென்னை, ஆக.13– ‘சண்டக்கோழி – 2’ படக்குழுவில் 150 பேருக்கும் 1 கிராம் தங்கக்காசு பரிசளித்தார் கீர்த்தி சுரேஷ். விஷாலின் சண்டக்கோழி –2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீளமான வசனம் , நடிக்க மிகச்சிறந்த வாய்ப்பு என்று கீர்த்தி சுரேஷுக்கு இப்படம் அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. பல்வேறு லொகேஷன் , இரவு , பகல் பாராது விடாமல் உழைக்கும் இயக்குனர் , நடிகர்கள் , படக்குழு என்று […]

சினிமா

‘‘பாக்யராஜ் நடித்து – இயக்கிய படங்களை எந்த ஹீரோவைப் போட்டும் ‘ரீமேக்’ செய்ய முடியாது….!’’

சென்னை, ஆக.13– ‘‘வித்தகக் கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது’’ என்று இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள் விடுத்தார். அதே நேரம் அவருக்கு நன்றி சொல்லி பேசிய பா.விஜய், ‘‘பாக்யராஜ் நடித்து இயக்கிய எந்த ஒரு படத்தை யாரும் எந்த ஹீரோவைப் போட்டும் ‘ரீமேக்’ செய்ய முடியாது….’’ என்று அழுத்தந்திருத்தமாக கூறினார். வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் […]

சினிமா

அருமையான நடிப்பு: ‘கட்… கட்…’ சொல்லி முடித்ததும் நடிகை ரம்யாவுக்கு பணமுடிப்பு தந்த டைரக்டர்

அறிமுக கதாநாயகியாக தான் நடித்த ‘ஜோக்கர் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். இந்தநிலையில் ஆண் தேவதை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்.. “ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி தான், ‘ஆண் தேவதை’ படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிராவும் படத்தின் கதையையும் கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப்படத்திற்குள் […]

சினிமா

கமல் – புரியாத புதிர்: யானை படுத்தாலும் குதிரை மட்டம்!

‘‘ஒரு நாட்டை பழிவாங்க வேண்டும் என்பதற்காக பெற்ற குழந்தைகளை படிக்க வைக்காமல் ஆயுதங்கொடுத்து தீவிரவாதியாக்காதே…!’’ ‘‘பிரச்சனைகளுக்கு பரிகாரம் சுமூக பேச்சு வார்த்தையே தவிர ஆயுதக் கலச்சாரமல்ல…!’’ தீவிரவாதத்தைக் கையில் எடுத்து தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி கமல், விவேகம், விஷய ஞானி! சர்வதேச தீவிரவாதி உமரின் 2 மகன்களையும் அமெரிக்கா அனுப்பி ஒருவனை டாக்டராகவும், இன்னொருவனை என்ஜினியராகவும் ஆக்கி, உமருக்கு கமல் புத்திமதி. நெஞ்சு நெகிழும் காட்சி. * மின்னல் வேகத்தில் பறக்கும் திரைக்கதை– காட்சிகள், * அளந்து அளந்து […]

சினிமா

கோத்தகிரி குட்டஞ்சாமி கோவிலுக்கு மேலே ‘ஹெலிகாம் காமிரா’ பறக்காமல் போனது ஏன்?

சென்னை, ஆக 9– கஸ்தூரிராஜா இயக்கத்தில்  உருவாகும் “பாண்டிமுனி”   படப்பிடிப்பில் நடந்த அதிசயம் புரியாத புதிராக உள்ளது. கோத்தகிரி பனகுடி சோலையில் அந்த குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்க வில்லை என்பது அதிசயமான ஒன்று.கோயிலை சுற்றி உள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம் கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சர்யமானது. இதற்கான காரணம் புரியாமல் குழப்பத்தில் இருந்தோம் என்றார் கஸ்தூரிராஜா. தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம் […]

சினிமா

வெந்தசோறு, சுட்டகறி, பட்ட சாராயத்துக்காக வாழும் வஞ்சகக் கூட்டத்தின் யதார்த்த கதை!

வந்தனம் வந்தனம்.. நாங்களும் இந்த சினிமாவுக்கு வந்தனம் கூறி வர்றோங்க …காடு மல மேடு கடந்து காடோடியா வாழ்ந்த வாழ்க்கைய படமா உங்க முன்ன கொண்டு வரோம்… தொரட்டிங்க எங்க படத்து பேரு பட்டுன்னு புரியலன்னா சொல்றோங்க விளக்கம் கிடை போடும் கீதாரி கிடை காவல் காக்கும் ஆயுதம் தாங்க தொரட்டி வெட்டவெளி வாழ்க்கை வெள்ளந்தியான கூட்டம் ஆட்டோட ஆடா அலையும் அந்த அப்பாவி கூட்டம் கூட்டத்துல இளமறி ஒன்னு துள்ளிக்கிட்டு திசை மாறுது கண்ணு வெந்த […]

சினிமா

5 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி படத்துக்கு பூஜை போட்ட அதிபர்!

சென்னை, ஆக 6– ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் கயல் சந்திரன் நடிக்கும் படம் ‘நான் செய்த குறும்பு’. இப்படத்தின் பூஜை, துவக்க விழா சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடந்தது. இது வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு வித்தியாசமானதாக இருந்தது. விழா மேடையில் 5 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்பெண்மணிகள் 5 பேரையும் மேடையில் அமர வைத்தனர். மங்கல இசை ஒலித்தது. வேத மந்திரம் முழங்கியது. மாலையிட்டு […]

சினிமா

“எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்” படத்தை பார்த்து வியந்து வினியோகஸ்தராக மாறும் நடிகர்!

இன்று சினிமாத்துறைக்குத் தேவை வினியோகஸ்தர்கள் என்கிற “ஆக்சிஜன்” தான்… நல்ல படம் என்று பாராட்டப் பட்ட பல படங்கள் நல்ல விநியோகஸ்தர்கள் இல்லாமல் தோல்வியை தழுவிய சோகங்கள் உண்டு. தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் விஜய்சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன் கோலிசோடா 2போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது “எச்சரிக்கை” இது மனிதர்கள் நடமாடும் இடம்” படத்தை வாங்கி வெளியிடுகிறார். டைம்லைன் […]

சினிமா

‘சென்சார் சர்டிபிகேட்’ வழங்க நடிகை கவுதமி பாரபட்சம் காட்டுவதா?

சென்னை, ஆக 9– ‘சிவா மனசுல புஷ்பா’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க கவுதமி நிபந்தனை விதிக்கிறார். கதையையும் நிஜத்தையும் ஒன்றாக குழப்பி சான்றிதழ் வழங்க தடைபோடுகிறார். சென்சார் சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதா கவுதமி என்று இயக்குனர் வாராகி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’. இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பியது. ஆனால் இந்தப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டியபோது படத்தை பார்த்துவிட்டு […]