மதுரையில் 2 ரவுடிகள் குண்டாசில் கைது

மதுரை, நவ.15– மதுரையில் 2 ரவுடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். மதுரை வைகை வடகரை பகுதியைச் சேர்ந்தவர் சங்கையா. இவரது மகன் கார்த்திக் (வயது 20). மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்ற பாஸ்கரன் (வயது 20). இவர்கள் இருவர் மீதும் கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. எனவே, இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி […]

மதுரையில் 16–ந் தேதி ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம்

மதுரை, செப்.12– மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிமாறுதல், பணிஉயர்வு கலந்தாய்வு கூட்டம் 16–ந் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:– மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பணி உயர்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் ஆணையாளர் தலைமையில் 16–ந் தேதி (புதன்கிழமை) அன்று […]

குழந்தைகள் திருட்டை தடுக்க வசதிகள் இருக்கிறதா? மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு

  மதுரை, செப்.12– மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டை தடுப்பதற்கான வசதிகள் இருக்கிறதா ? என்பது குறித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின் பேரில் நேற்று 2 பெண் வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மனம்பட்டியை சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி மீனாட்சி. கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை அரசு மருத்துவமனையில் மீனாட்சிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மணி நேரங்களில் குழந்தை […]

இம்மானுவேல்சேகரன் நினைவிடம் செல்ல 24 நிபந்தனைகள்: ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு

  ராமநாதபுரம், செப்.4– 11–ந்தேதி இம்மானுவேல்சேகரன் நினைவிடம் செல்ல 24 நிபந்தனைகளை விதித்து ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் உத்தரவு பிறபித்துள்ளார். வருகின்ற 11–ந் தேதி பரமக்குடியில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:– 1. அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே […]

நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்பு

ராமேஸ்வரம்,செப்.3- நடுக்கடலில் படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த 8 ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்கப்பட்டு நேற்று கரை வந்து சேர்ந்தனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் 80-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சுமார் 500 மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றனர். பாம்பனில் இருந்து அலெக்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற அந்தோணி, வாஸ்கோடகாமா, சூசை, ரீடஸ், வில்வநாதன், யாகுலன், ஆட்ரின், ஜெயந்த் ஆகிய […]

பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்ப்பு: மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்

மதுரை, செப்.3- வெளிநாட்டில் உள்ள பெற்றோர்களது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது உள்ள நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்துள்ளார். மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குழந்தைக்கு அல்லது 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது, பெற்றோர்களும் பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வரவேண்டும். அப்படி வரும் போது, பெற்றோர்கள் 2 பேரும் வந்தால் இணைப்பு படிவம்-– ‘எச்’ மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். […]

முயல்வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கியுடன் கைது

நாகர்கோவில், செப்.3– குமரி மாவட்டம் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று கடுக்கரைவிலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்களில் ஒருவரிடம் நாட்டு துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார், 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களிடம் இருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை […]

விபத்து: கூலித்தொழிலாளி சாவு

நத்தம், செப்.2– மதுரை மாவட்டம் சத்திரபட்டி சரகம் சீகுபட்டியைச்சேர்ந்தவர் பரமசிவம் கூலித்தொழிலாளி. இவர் சம்பவத் தன்று நத்தம் அருகே உள்ள ஆவிச்சிபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்தார். இந்த வாகனத்தை பாண்டியராஜன் என்பவர் ஓட்டிவந்தார். மஞ்சநாயக்கன்பட்டி வளைவு ரோட்டு பகுதியில் வரும்போது அந்த வழியாக சுற்றி திரிந்த நாய் ஒன்று வண்டியின் குறுக்கே வந்துள்ளது. விபத்தை தவிர்க்க உடனடியாக பிரேக் போட்டதில் எதிர்பாரதவிதமாக இருவரும் நிலை தடுமாறி, கிழே விழுந்தனர். இதில் பரமசிவம் படுகாயமடைந்து மதுரை […]

உண்டியல் வசூல் ரூ.21½ லட்சம்

சாத்தூர், செப்.1– இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.21 லட்சத்து 45 ஆயிரத்து 586 ரொக்கமாக கிடைத்தது. சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. கோயிலின் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோயிலின் செயல் அலுவலர் (பொறுப்பு) ரோஜாலிசுமதா, மடப்புரம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, விருதுநகர் மாவட்ட இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் தேவராஜ் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் கோயில் அலுவலர்கள் உண்டியல் […]

மதுரை புத்தக கண்காட்சியில் குவிந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள்

  மதுரை செப்.1 மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் நேற்று அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களும், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் என பலரும் வந்திருந்து பார்வையிட்டனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் 2 லட்சம் தலைப்புகளில் 250 அரங்குகளில் வைக்கப்பட்டுள்ளது. தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தக கண்காட்சி நடக்கிறது. […]

1 2 3 93