நம்பியூரில் புதிய கல்லூரி

நம்பியூரில் புதிய கல்லூரி

கோபி தொகுதிக்கு உட்பட்ட திட்டமலையில், புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி துவக்கி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், நம்பியூர் பேரூராட்சி, திட்டமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை, கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொிவித்ததாவது:– நம்பியூர்ப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நம்பியூர் பகுதி மக்களின் கோரிக்கையான, அவிநாசி-அத்திக்கடவு திட்டம், […]

ஜெயலலிதா முதல்வராக கரூரில் 1 லட்சத்து 8 தீபம் ஏற்றி சிறப்பு பிரார்த்தனை

சென்னை, மே 10– ஜெயலலிதா நீடூழி வாழவும், விரைவில் முதல்வராக வேண்டியும் தமிழகம் முழுவதும் இன்று கோவில் களில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகங்கள், பாலாபிஷேகம், அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதா முதல்வராக வேண்டி, கரூர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் கரூர்  கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அலங்காரவள்ளி சௌந்திரநாயகி அம்பாள்  சன்னதியில் லலிதா திருட்சதை ஹோமம் மற்றும் லட்சத்து எட்டு தீபம் ஏற்றி  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் […]

பிரதமரின் விபத்துக் காப்பீடுத் திட்டம்: சென்னையில் கவர்னர் ரோசய்யா துவக்கினார்

சென்னை, மே 10– பிரதமரின் விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை கவர்னர் ரோசய்யா சென்னையில்   தொடங்கி வைத்தார். மாநில வங்கியாளர் குழுமம் சார்பில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், “பிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா’ ஆயுள் காப்பீடுத் திட்டம், “பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ விபத்துக் காப்பீட்டுத் திட்டம், “அடல் பென்ஷன் யோஜனா’ முதியோர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று புதிய திட்டங்களைத் […]

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற ரூ.616 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, மார்ச். 25 சென்னை மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வசதியாக 615 கோடியே 78 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழகத்தில் நகர்ப்புர ஏழைகள்   அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கும் குறிக்கோளை எய்திட பெரும் முதலீடு  தேவைப்படுகிறது.  பல்வேறு திட்டங்களின் மூலம் கிடைக்கப்பெறும் நிதி  ஆதாரங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கிடைக்கச்  செய்வதற்காக மாநில அரசு தொடர்ந்து […]

கால்நடை மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு துவங்கியது

சென்னை, ஜூலை.31- கால்நடை மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான  கலந்தாய்வில்  மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியில்  சேர்வதற்கான சான்றிதழை மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு தலைவர் டாக்டர்  திருநாவுக்கரசு வழங்கினார். இன்று (வியாழக்கிழமை) பொதுப்பிரிவினருக்கு  கலந்தாய்வு. மொத்தம் 238 இடங்கள் உள்ளன. இதற்காக  982 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், அரசு கால்நடை மருத்துவ படிப்பில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வை வருடந்தோறும் நடத்தி வருகிறது. […]

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணிடம் சேட்டிலைட் செல்போன்

தாம்பரம், ஜூலை 21– அமெரிக்காவில் இருந்து ஒரு வாரகால சுற்றுலாவாக, இந்தியா வந்த பெண்ணிடம், ராணுவத்தினர் பயன்படுத்தும் சேட்டிலைட் செல்போன் இருந்ததை அடுத்து, உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்தவர் மார்க்கரெட் எலிசபெத் (வயது 26). இவர் இந்தியாவை சுற்றிப் பார்ப்பதற்காக, ஒரு வாரம் முன்பு, சுற்றுலா விசாவில் வந்தார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப் பார்த்தவர், நேற்று இரவு 8.30 மணி அளவில், ஏர் இந்தியா விமானம் மூலம், டெல்லிக்கு […]

போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஜூலை 18– கொடுங்கையூர் காவல் நிலையத்தில் போலீஸ்  காவலில் இருந்தபோது கோபால் என்பவர் மரணமடைந்த சம்பவத்தில் கைதியை  கையாளுவதில் கவனக் குறைவாக இருந்ததற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர்,  சப்–இன்ஸ்பெக்டர் ஆகியோர் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். கடந்த 2  ஆண்டுகளில் போலீஸ் பாதுகாப்பிலிருந்தபோது 20 மரணமடைந்த சம்பவங்கள்  நடைபெற்று இருக்கின்றன. பெரும்பாலான வழக்குகளில் மரணத்திற்கு போலீஸ்  காரணமல்ல என்று நீதித்துறை நடுவர்கள் தங்களது அறிக்கையில்  தெரிவித்திருக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஜெயலலிதா […]

ரூ. 28 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை: ஜெயலலிதா திறந்தார்

சென்னை, ஜூலை. 10– முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தை திறந்து வைத்து, தலைமைச் செயலக பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 50 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடங்களையும் திறந்து வைத்தார். சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் பொதுப் பணித்துறையால் தரைத் தளத்துடன் கூடிய 10 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடமாக […]

சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு ‘அமெரிக்க விருது’

சென்னை, ஜூலை 9– கல்வி கற்பித்தலில் புதுமையான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி திறமையாக மாணவர்களுக்கு கல்வி கற்று தந்த சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு அமெரிக்க விருது கிடைத்துள்ளது. இதனை மேயர்  சைதை துரைசாமி வழங்கி பாராட்டினார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, 2011ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சியில் 46 பள்ளிகளின் 54 ஆசிரியர்களுக்கு ஈஸிவித்யா நிறுவனத்தின் மூலம் கற்றல் கற்பித்தலில் புதுமையான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேயர்  சைதை துரைசாமி ரிப்பன் […]

எலியட்ஸ் பீச்சில் இளம்பெண் கொலையில் காதலன் கைது

சென்னை, ஜுலை 8– சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், இளம்பெண்ணை கழுத்தை  நெரித்து கொலை செய்து விட்டு  தப்பி ஓடிய காதலனை போலீசார் இன்று காலை கைது செய்தனர். சென்னை எலியட்ஸ் கடற்கரையில்  22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக சீனிவாசன் என்பவர் சாஸ்திரி நகர் காவல்நிலையத்திற்கு  தகவல் கொடுத்தார்.  அடையாறு துணை கமிஷனர் கண்ணன், உதவி கமிஷனர் முருகேசன், சாஸ்திரிநகர் போலீஸ்  இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசில் ஆகியோர் போலீஸ் படையுடன் எலியட்ஸ்  […]

1 2 3 10