கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

திருவள்ளூர், மே 22– திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில், பணியின் போது காலமான பணியாளரின் வாரிசுதாருக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலருக்கான பணிநியமன ஆணையை கலெக்டர் சுந்தரவல்லி வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார். மேலும், இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது […]

பிள்ளையார்நத்தம் ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா

பிள்ளையார்நத்தம் ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா

சின்னாளபட்டி, மே-.22– பிள்ளையார்நத்தம் ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோிவல் 52வது ஆண்டு திருவிழா குடகனாற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோவில். இங்கு அம்மன் நின்ற நிலையில் இருப்பதால் ஒவ்வொரு வருடமும் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம். கடந்த 15-.05-.18 அன்று செவ்வாய் கிழமை இரவு 10.30 மணி அளவில் அம்மன் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதன் பின்னர் […]

ராஜாஜி சிறுவர் பூங்கா, அம்மா உணவகத்தில் கமிஷனர் ஆய்வு

ராஜாஜி சிறுவர் பூங்கா, அம்மா உணவகத்தில் கமிஷனர் ஆய்வு

மதுரை,மே.22– மதுரை ராஜாஜி சிறுவர் பூங்கா, அம்மா உணவகம் ஆகியவற்றில் மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 க்கு உட்பட்ட பகுதிகளில் 22 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் நேரில் சென்று பார்ரவையிட்டு ஆய்வு செய்தார். மதுரை ராஜாஜி சிறுவர் பூங்காவில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கழிப்பறைகள் […]

தேவகோட்டையில் 4286 பெரியபுராணம் பாடிய மாணவர்களுக்கு சான்றிதழ்

தேவகோட்டையில் 4286 பெரியபுராணம் பாடிய மாணவர்களுக்கு சான்றிதழ்

தேவகோட்டை,மே.22– தேவகோட்டை சிவன் கோவிலில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் தொடர்ந்து மூன்று நாட்கள் பெரியபுராணத்தில் உள்ள 4 ஆயிரத்து 286 பாடல்களை பாடிய சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பங்கு கொண்டு பெரியபுராணத்தில் உள்ள 4 ஆயிரத்து 286 பாடல்களையும் பாடிய சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள் ரொக்கப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர். சேக்கிழார் விழாக் […]

மதுரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நல உதவிகள்

மதுரை மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டத்தில் நல உதவிகள்

மதுரை, மே.22– மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 125 ரூபாய் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் வழங்கினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் தலைமையில் நடைபெற்றது. இதில் 316 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பரிசீலனை செய்த மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க […]

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

திண்டுக்கல், மே.22– திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு தலைமையில் கீழ்காணும் உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும் வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும் அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி […]

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா துவக்கம்

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா துவக்கம்

பழனி,மே.22– பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி ஞான தண்டாயுதபாணி திருக்கோவிலில் நடைபெற்று வரும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. இத்திருவிழா பழனி பெரியநாயகியம்மன் கோவிலில் இன்று காலை 11 மணி அளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கொடியேற்றும் நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் […]

மேலந்தல் கிராமத்தில் நூலகக் கட்டடம்

மேலந்தல் கிராமத்தில் நூலகக் கட்டடம்

விழுப்புரம், மே 21– மேலந்தல் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட நூலகக் கட்டிடத்தை மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியம் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்ட, திருக்கோவிலூர் வட்ட, முகையூர் ஒன்றிய எல்லைகளின் கடைகோடிப் பகுதியில் அமைந்துள்ளது மேலந்தல் கிராமம். இக்கிராம மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 1995-ஆம் ஆண்டு நூலகம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறை சார்பில் தொடங்கப்பட்ட இந்நூலகம், கடந்த 23 ஆண்டுகளாக வாடகைக் கட்டடம் மற்றும் வாடகை இல்லா நன்கொடை கட்டடத்தில் செயல்பட்டு […]

மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் ரூ.4 கோடியில் தார்சாலை பணி

ஊத்தங்கரை தொகுதிக்கு உட்பட்ட மத்தூர், ஊத்தங்கரையில், ரூ.4 கோடியே 21 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில், புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில், புதிய கலையரங்கத்தை, அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரப்பட்டு ஊராட்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்க கட்டிடம், கல்லாவி ஊராட்சியில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, நடுப்பட்டி, எக்கூர், சூளகரை ஊராட்சி மற்றும் மகனூர்பட்டி ஆகிய பகுதிகளில், புதிய தார் […]

நத்தம் அருகே அய்யாபட்டியில் ஜல்லிக்கட்டு

நத்தம் அருகே அய்யாபட்டியில்  ஜல்லிக்கட்டு

நத்தம், மே.21– திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அய்யாபட்டியில் காளியம்மன், கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து 500 காளைகளும் 300 மாடுபிடிவீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடிவீரர்களுக்கு பிடியில் சிக்காமல் காளைகள் துள்ளி சென்றன. காளைகளை அடக்கிய மாடுபிடிவீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. அதே போல் பிடிபடாத […]

1 2 3 609