முருகப்பா ஹாக்கி : பஞ்சாப் தமிழ்நாடு வெற்றி

முருகப்பா ஹாக்கி : பஞ்சாப்  தமிழ்நாடு வெற்றி

சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில்  நடைபெற்று வரும் முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் சுற்று போட்டியில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியை 3–2 என்ற கோல் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வீழ்த்தியது. 91-வது முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில்  நடைபெற்று வருகிறது.  இதில் மொத்தம் பத்து அணிகள் பங்கு பெற்றுள்ளன. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நேற்று  நடைபெற்ற ‘ஏ’ பிரிவின் லீக் போட்டியில் தமிழ்நாடு – […]

டிஎன்பிஎல்: ரூபி திருச்சி வாரியர்ஸ் ‘த்ரில்’ வெற்றி

டிஎன்பிஎல்:  ரூபி திருச்சி வாரியர்ஸ் ‘த்ரில்’ வெற்றி

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் லீக் தொடரில்  ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசதத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி  20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. அந்த அணியின் வீரர்கள் பரத் […]

கறுப்பின பெண்களுக்கு சம ஊதியத்தை வலியுறுத்தும் செரீனா வில்லியம்ஸ்

கறுப்பின பெண்களுக்கு சம ஊதியத்தை வலியுறுத்தும் செரீனா வில்லியம்ஸ்

கறுப்பினப் பெண்களுக்கு சம ஊதியம் வேண்டும் என்பதை வலியுறுத்தி புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரீனா

மொயீன் அலி ‘ஹாட்ரிக்’ சாதனை :இங்கிலாந்து அபார வெற்றி

மொயீன் அலி ‘ஹாட்ரிக்’ சாதனை :இங்கிலாந்து  அபார வெற்றி

இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்கா  இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 353 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 175 ரன்களும் எடுத்தன. 178 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 79.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 313 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் […]

நீச்சல் போட்டி: 7 தங்கம் வென்றார் அமெரிக்க வீரர் டிரஸல்

நீச்சல் போட்டி: 7 தங்கம் வென்றார் அமெரிக்க வீரர் டிரஸல்

புடாபெஸ்ட், ஜூலை 31– அமெரிக்க நீச்சல் வீரர் டிரஸல், உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 7 தங்க பதக்கம் வென்று, சகவீரர் பெல்ப்ஸ் சாதனையை சமன் செய்தார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், உலக அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதன் ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் டிரஸல் 7 தங்கப் பதக்கங்களை வென்றார். ஆண்களுக்கான தனிநபர் ‘பிரீஸ்டைல்’ 50 மீ, 100 மீ, மற்றும் ‘பட்டர்பிளை’ 100 மீ, போட்டிகளில் தங்கம் வென்ற இவர், ஆண்களுக்கான ‘ரிலே’ […]

டிஎன்பிஎல்: திருவள்ளூர் வீரன்ஸ் வெற்றி

நெல்லை: டிஎன்பிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில்  திருச்சி வாரியர்ஸ் அணியை தோற்கடித்தது. ‘டாஸ்’ வென்ற திருவள்ளூர் வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு  182 ரன்களை குவித்தது. சதுர்வேத் அதிகபட்சமாக  89 ரன்களையும்  சித்தார்த் 60 ரன்களையும் எடுத்தனர். வெற்றி இலக்கான 183 ரன்களை எடுக்க முடியாமல் திருச்சி அணியினர்  திணறினர். இதனால், 20 ஓவர்களில்  8 விக்கெட்டுகள் […]

முதல் டெஸ்ட்: இந்தியா இமாலய வெற்றி

முதல் டெஸ்ட்: இந்தியா  இமாலய வெற்றி

காலே: முதலாவது டெஸ்டில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து இமாலய வெற்றி பெற்றது. இந்தியா –இலங்கை அணிகளுக்கு இடையேயான 3  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  முதலாவது டெஸ்ட் போட்டி காலே நகரில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி  முதல் இன்னிங்சில் 600 ரன்களை குவித்தது. ஷிகர் தவான் (190 ரன்), புஜாரா (153 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் […]

டிஎன்பிஎல்: கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

டிஎன்பிஎல்: கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின்  நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி  6 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்ஸை அணியை தோற்கடித்தது. ‘டாஸ்’ வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.20 ஓவர்களின் முடிவில் லைகா கோவை கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் வீரர் சூர்ய பிரகாஷ் அதிகபட்சமாக 46 ரன்களை எடுத்தார். 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் […]

பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி நடத்தும் விளையாட்டு போட்டி துவக்க விழா

பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி நடத்தும் விளையாட்டு போட்டி துவக்க விழா

பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி நடத்தும் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளை சென்னை பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குனர் வி. மகாதேவன் துவக்கி வைத்தார். அவருக்கு விளையாட்டு வீராங்கனைகளை கல்லூரியின் முதல்வர் லில்லியன் ஜாஸ்பர், உடற்கல்வி இயக்குனர்கள் அக்னேஸ் விஜயராணி மற்றும் நவீனா பிரியா ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

பேட்மிண்டன் வீராங்கனை சிந்து துணை கலெக்டராக நியமனம்

பேட்மிண்டன் வீராங்கனை சிந்து துணை கலெக்டராக நியமனம்

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு துணை கலெக்டர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார். ரியோ ஒலிம்பிக் போட்டியில்  வெள்ளி பதக்கம் வென்ற  இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் துணை கலெக்டர் பணி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பி.வி.சிந்து நேற்று தனது பெற்றோருடன் தலைமை செயலகத்துக்கு சென்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அப்போது […]

1 2 3 23