திண்டுக்கல் பள்ளி மாணவர்கள் இமயமலை சிகரம் ஏறி சாதனை

திண்டுக்கல், அக்.11– தாய்திருநாட்டை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற இந்திய இராணுவத்தில் சேருங்கள் என்ற கருத்தை வலியுறுத்தி இமயமலையில் ஹம்டப்பாஸ் சிகரம் ஏறி சாதனைப்படைத்த திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கும் இரண்டாவது முறையாக இமயமலையில் சிகரம் தொட்டு சாதனை படைக்க வைத்த பள்ளி நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் வி.ஜெரோம் நிக்கோலசுக்கு பாராட்டுகள் குவிகிறது. திண்டுக்கல்லில் பழம் பெருமை வாய்ந்த பள்ளியாக தூய மரியன்னைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் சாதனைப் […]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சங்கு மாலை

கன்னியாகுமரி, செப்.28– கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் உலக சுற்றுலா தினவிழா நிகழ்ச்சி கன்னியாகுமரி பூம்புகார் படகு போக்குவரத்துக் கழகம் படகு தளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு பாறையை காணவந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி சங்கு மாலை அணிவித்து  இனிப்புகளை வழங்கி வரவேற்றார். பின்னர்  மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- ஒவ்வொரு ஆண்டும் […]

திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னையில் 21ந் தேதி தொடங்குகிறது

சென்னை, செப். 13– சென்னை பூக்கடை பகுதியில் அமைந்திருக்கும் சென்ன கேசவ பெருமாள் கோயிலில், 21ந் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீவெங்கடேசவப் பெருமாளுக்கு இந்த திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன. திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஒன்று ஸ்ரீவில்லிபுத்தார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று 150 […]

விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா சாம்பியன்

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிசில், பெண்கள் ஒற்றையர் பிரிவில்  முகுருசா சாம்பியன் பட்டம் வென்றார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடந்து வருகிறது.  நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும்,  ஸ்பெயின் நாட்டின் கார்பின் முகுருசாவும் பலப்பரீட்சை நடத்தினார்கள். 1 மணி 17 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் முகுருஜா 7-5, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை […]

சிவானந்தா குருகுலத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு : வி.ஜி. சந்தோசம் ஏற்பாடு

சென்னை, மார்ச் 11– உலகப் பொதுமறையாம் திருக்குறள், கிறிஸ்துவ வேதமான பைபிளுக்கு அடுத்தப்படியாக 85 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்ற பெருமைக்குரியதாகும். இதன் பெருமை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் உள்ள மக்கள் அனைவரும் திருக்குறளின் கொள்கைகளை அறிந்துகொள்ளவும் அக்குறள்நெறிப்படி புகழோடு வாழவேண்டுமென்ற உயர்ந்த நோக்கம் அடிப்படையில் விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவி, ‘‘உலகைத் தமிழால் உயர்த்துவோம்’– என்ற கொள்கைப்படி, திருவள்ளுவர் சிலைகளை இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, மும்பை, கங்கைக்கர […]

பழைய டயரில் உருவான அழகுச் சிலைகள்

சின்னாளபட்டி, பிப்.27– சின்னாளப்பட்டி வளம் மீட்புப் பூங்காவில் பழைய டயர்களில் உருவாக்கப்பட்ட அழகுச் சிலைகள், அனைவரையும் கவர்கிறது. கல்லிலே கலை வண்ணம் கண்டான் தமிழன் என்று கூறுப்படும். இன்று தேய்மானமான பழைய டயரிலே கலை வண்ணத்தை படைக்கிறார் திருக்கழுக்குன்றம் அசோக்குமார். சின்னாளபட்டி பேரூராட்சி வளம்மீட்பு பூங்காவை அலங்கரிக்க டயரில் உருவான சிலைகள் இச்சிலைகள் உடையாமல் மக்காமல் இருப்பதால் டயர் சிலைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. வளம் மீட்பு பூங்கா திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் இருந்து […]

Parisian Macao

http://trinitymirror.net/news/all-that-glitters-in-paris-night-now-in-in-macao/   Trendy clothes, Eiffel Tower, artificial lake and all that glitters in Paris night now in Macao   Themed water park , gaming tables   10pic13 The Parisian Macao , the latest Macau casino resort from Sands China Ltd, will open with 410 live-dealer gaming tables, said the company’s president and chief operating officer. […]

பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்ப்பு: மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்

மதுரை, செப்.3- வெளிநாட்டில் உள்ள பெற்றோர்களது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது உள்ள நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்துள்ளார். மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குழந்தைக்கு அல்லது 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது, பெற்றோர்களும் பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வரவேண்டும். அப்படி வரும் போது, பெற்றோர்கள் 2 பேரும் வந்தால் இணைப்பு படிவம்-– ‘எச்’ மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். […]

பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம்: லட்சுமி விலாஸ் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, மே 27– பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத்  திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்  நிறுவனம், லட்சுமி விலாஸ் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியால், “பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ என்கிற விபத்து காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. வங்கியில்  சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குச் சமூகப்  பாதுகாப்பு கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தைச்  செயல்படுத்தும் விதமாக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், லட்சுமி  விலாஸ் […]

விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்குவதுபோல் மீனவர்களிடமிருந்து கடலைப் பிடுங்க நினைக்கிறது மத்திய அரசு

திருச்சூர், மே 27-– விவசாயிகளிடம் இருந்த நிலத்தை பிடுங்குவதுபோல மீனவர்களிடம் இருந்து கடலை பிடுங்க மத்திய அரசு நினைப்பதாக மோடி அரசு மீது ராகுல் காந்தி கடுமையாக           குற்றம்சாட்டினார். கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல் காந்தி, இன்று திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்  மீனவர்கள் முன் உரையாற்றினார். அப்போது விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரிப்பதுபோல் மீனவர்களிடமிருந்து  கடலை அபகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ராகுல் குற்றம்சாட்டினார். அக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது;– […]

1 2 3 14