குரு காவேரி ரமேஷின் தில்லானா; ஜுகல் பந்தியை கண்முன் கொண்டு வந்தார் சிஷ்யை ஜ்யோஸ்னா!

நிருத்யாஞ்சலி கலைப் பள்ளியின் முதல்வர் குரு காவேரி ரமேஷின் மாணவியும் கிருஷ்ணன், சசிரேகா ஆகியோரின் புதல்வியுமான ஜ்யோஸ்னாவின் அரங்கேற்றம் பாரதீய வித்யாபவன் அரங்கில் மிக விமர்சையாக நடந்தேறியது. ஜ்யோஸ்னாவின் அரங்கேற்றத்திற்கு பிரபல கர்நாடக இசை கலைஞர் கலைமாமணி பாம்பே ஜெயஸ்ரீ, குச்சுப்புடி நடனக்கலைஞர்   கலைமாமணி மாதவபேடி மூர்த்தி தலைமை தாங்கினார்கள். மிக அற்புதமாக நிருத்யம், பாவம் இரண்டிலும் பாராட்டு பெற்றாள் ஜ்யோஸ்னா. மிக அற்புதமாக நடனத்தை வடிவமைத்துள்ளார் காவேரி ரமேஷ் என்று அவர்கள் பாராட்டினார்கள். வேணுகோபாலின் பாட்டு, […]

புதுக்கோட்டையில் தழ்நாடு அரசு இசைப் பள்ளி நடத்திய கலை நிகழ்ச்சி

புதுக்கோட்டை, மார்ச் 3– புதுக்கோட்டை   நகராட்சி திலகர் திடலில்  மாவட்ட செய்தி மக்கள்  தொடர்புத்துறையின்  சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  ந.சுப்ரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர். கலெக்டர் சு.கணேஷ்   தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் ந.சுப்ரமணியன் கூறியதாவது:-– தமிழக அரசு  ஏழை, எளிய  மக்களின் நலனுக்காக  பல்வேறு நலத்திட்டங்களை  அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு   […]

மாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு: 1 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்

காஞ்சீபுரம், ஜன. 23-– மாமல்லபுரத்தில் ஒரு மாதம் நடைபெற்று வந்த நாட்டிய விழா நிறைவடைந்தது. வெளிநாட்டு பயணிகள் 2000 பேரும்,  உள்நாட்டு பயணிகள் ஒரு லட்சம் பேரும் விழாவை கண்டுகளித்தனர். காஞ்சீபுரம் மாவட்டம் சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் மத்திய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் ஒரு மாதம் நாட்டிய விழா நடந்து வருகிறது. இந்த வருட விழா கடந்த டிசம்பர் 21-ல் தொடங்கி ஒரு மாதம்  நடைபெற்றது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகில் அமைக்கப்பட்ட திறந்தவெளி […]

பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் மாணவ–மாணவிகளுக்கு சென்னையில் 3 நாள் கலைப்போட்டிகள் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஜன. 3– சென்னை மாவட்ட மாணவ–மாணவிவிகளுக்கு 8, 9, 10–ந்தேதிகளில் பரதநாட்டியம், கிராமிய  நடனம், குரலிசை, ஓவியம் போட்டிகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்ட அளவில் நடத்தப்பட்டு பின்னர் மாநில அளவில் போட்டிகள் நடைபெறம். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் வாயிலாக,  5 முதல் 16 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு ஆக்கப்பூர்வமான கலைகளில் ஈடுபடும் வகையில் பல […]

மனஸ்வினி ஸ்ரீதரின் 100வது நாட்டிய நிகழ்ச்சி: நடிகை ஷோபனா, நந்தினி ரமணி, மதுரை முரளீதரன் வாழ்த்து

மனஸ்வினி ஸ்ரீதர் –பரதார்ப்பணா நாட்டியப்பள்ளியின் நிறுவனர் சுமா மணியின் பெருமைமிகு சிஷ்யை. 2004–ம் ஆண்டில் அரங்கேற்றம் கண்டார். கடந்த 10 ஆண்டுகளில் வெற்றிகரமாக 99 மேடைகளைக் கண்டவரின் 100வது நிகழ்ச்சி வாணிமகால் ஒபுல்ரெட்டி ஹாலில் மிகச்சிறப்பாக நடந்தது. பரதநாட்டிய விற்பன்னர்கள் நந்தினி ரமணி, மதுரை ஆர். முரளீதரன் மற்றும் மக்கள் குரல் வீ.ராம்ஜீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள். குரு சுமா மணியின்  குரு நடிகை ஷோபனா கவுரவ விருந்தினராக பங்கேற்று குரு–சிஷ்யை இருவரையும் […]

மார்கழி இசை – நாட்டிய விழா: மனசில் இடம் பிடித்த எம்.ஜி.சக்கரபாணியின் கொள்ளுப்பேத்தி வர்ஷினி

எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் லீலாவதியின் (எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் வழங்கியவர்) பேத்தி வர்ஷினியின் பரத நாட்டியம் சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. சுவாமி ஹாலில் விமர்சையாக நடந்தது. குமஸ்கட்டில் 11–ம் வகுப்பு படித்து வரும் வர்ஷினி அந்த நாட்டிலேயே பிரபல நாட்டிய கலைஞர் பத்மினி கிருஷ்ணமூர்த்தியிடம் (திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர்) முறைப்படி  பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வைத்தனர், பெற்றோர்கள் முரளி – ஹேமா. பிரபல நாட்டிய கலைஞர் கோபிகாவர்மா நடத்தி வரும் ‘தாஸ்யம்’ என்ற அமைப்பின் சார்பில் […]

பிரதிக்ஷா தர்ஷினி நாட்டியமாடி சாதனை

சென்னை, ஜூன்.25- இடைவெளியின்றி தொடர்ந்து 3 மணி நேரம் பரத நாட்டியம் ஆடி 10ம் வகுப்பு மாணவி பிரதிக்ஷா தர்ஷினி சாதனை புரிந்தார். இவர் செயின்ட் ஜான் பள்ளி மாணவி அடையார் கலாஷேத்ரா பரத நாட்டிய பள்ளியின் பகுதி நேர மாணவி இவர் 3 மணி நேர பரத நாட்டிய நிகழ்ச்சியை பெருமளவில் இவரது ரசிகர்கள் கண்டு களித்தனர். ரிதாஞ்சலி, பரதக் கல்லூரியின் ரதிஷ் கிருஷ்ணா சோபியா ரதிஷ் ஆகியோர் பிரதிக்ஷாவின் குருவாக, பரதம், குச்சுப்புடி பயிற்றுவிக்கின்றனர். […]

மாமல்லபுரம் நாட்டிய விழா

32 நாளும் தவறாமல் வந்து ரசித்த லண்டன் சுற்றுலா பயணிக்கு அமைச்சர் கோகுல இந்திரா பரிசு சென்னை, ஜன. 27- மாமல்லபுரம் நாட்டிய விழாவை 32 நாட்களும் தவறாமல் வந்து ரசித்து பார்த்த லண்டன் சுற்றுலா பயணிக்கு அமைச்சர் கோகுல இந்திரா பரிசு வழங்கினார். உலகளவில் தமிழ்நாட்டை ஒரு சிறந்த சுற்றுலா மாநிலமாக உருவாக்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகப்படுத்திட வேண்டும் என்றும், முதலமைச்சர் ஆணையிட்டு தமிழகத்தின் பாரம்பரிய பெருமையை […]