பெண்கள் வளர்ச்சியே சமுதாயத்தின் மகிழ்ச்சி

பெண்கள் வளர்ச்சியே சமுதாயத்தின் மகிழ்ச்சி

இன்று உலக மகளிர் தினம். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்! இது ஒரு நாள் அனுஷ்டிக்கப்படும் தினம் இல்லை. இது இந்த மார்ச் மாதம் முழுவதும் கொண்டாடப்படும் தினமாக இருக்கிறது, நடைபோட்டு முன்னேற அதாவது March ahead என்பதற்காக கூட இருக்கலாம். இன்றைய தினத்தின் உண்மையான பெயர் ‘சர்வதேச உழைக்கும் மகளிர்’ தினமாகும். ஐரோப்பாவில் 18–ம் நூற்றாண்டில் தொழில் புரட்சி ஏற்பட்ட காலக் கட்டத்தில் அதிக வேலை, குறைந்த கூலி என்ற நிலை இருந்தது. இந்த கட்டத்தில் […]

தொலைநோக்குப் பார்வையுடன் காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா

தொலைநோக்குப் பார்வையுடன் காமராஜர்,  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா

இந்தியர்களின் வல்லரசு கனவு நனவாகுமா? அதுவும் 2020–ல் சாதித்து விட முடியுமா? மூன்று ஆண்டுகளில் செய்ய வேண்டியது என்ன? அது பற்றி நிபுணர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில் இந்தியாவில் நகரியம் பற்றி இந்த வாரம் வெளிவந்துள்ள இரண்டு ஆய்வு அறிவிக்கைகள் வெளிவந்திருப்பதை உற்றுப்பார்த்தாக வேண்டும். நைட் பிராங்க் வெல்த் அறிக்கையின்படி மும்பாய் மிக பணக்கார நகர உலக பட்டியலில் 21 வது இடத்தில் இருக்கிறதாம். தலைநகர் டெல்லியும் 35 வது இடத்தில் இருக்கிறது. இரண்டாவதாக வெளிவந்துள்ள மற்றொரு அறிக்கையானது […]

இடர்பாடுகள் எனும் முட்பாதையில் முதலமைச்சராய் பயணிக்கும் பழனிசாமி

இடர்பாடுகள் எனும் முட்பாதையில்  முதலமைச்சராய் பயணிக்கும் பழனிசாமி

மாபெரும் தலைவர் இறந்துவிட்டால், அவர் இடத்தை நிரப்ப அடுத்த தலைவர் வரும் வரை குழப்பமான சூழ்நிலை நிலவத்தான் செய்யும். தமிழகத்தில் முன்பு எம்.ஜி.ஆர். இறந்து விட்ட நிலையில்,  ஜெயலலிதா நல்ல தலைவர், அவர் தான் வர வேண்டும் என்று உடனடியாக யாரும் ஏற்றுக் கொள்ளவே இல்லை! துவக்கத்தில் எம்.ஜி.ஆர். பெயரை கூட அரசியல் செய்திகளில் போடாமல், ‘நடிகர் கட்சி தலைவர்’ என்று ஏளனமாக செய்திகளை போட்ட நாட்களும் உண்டு! பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் அமர்ந்தவுடன் அவர் செய்த […]

ஆசியாவின் பொருளாதார லட்சியத்தை உருவாக்குவோம்!

ஆசியாவின் பொருளாதார லட்சியத்தை உருவாக்குவோம்!

ஆசிய கண்டத்தின் அதிமுக்கிய வளரும் பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவின் நிதிநிலை அறிக்கை சமர்பிக்கப்பட்டு விட்டது. விவசாயத் துறைக்கு உத்வேகம் தரும் அம்சங்களும், தொழில் கட்டுமானத்திற்கு போதிய முதலீடுகள் வரும் வழி வகைகளை கொண்டுள்ள பட்ஜெட் என்று மேலோட்டமாக பார்க்கும் போது தெரிகிறது. நிபுணர்கள் மேலும் உற்று நோக்கி இதன் சிறப்பு சாதக பாதகங்களை ஆராய்ந்து தெளிவாக தரும் முன், சாமானியனுக்கு எழும் சந்தேகங்களில் பிரதானமானது பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையிலும், மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக கூறிவருவதும் […]

எல்லோருக்கும் எல்லாமும் பெற்றுத் தரும் மத்திய அரசு பட்ஜெட் வருமா?

எல்லோருக்கும் எல்லாமும் பெற்றுத் தரும் மத்திய அரசு பட்ஜெட் வருமா?

நாளை மத்திய அரசு பொது பட்ஜெட்டை சமர்பிக்க இருக்கிறது. முதல் முறையாக இந்தியாவில் பிப்ரவரி முதல் நாளில், அதாவது நான்கு வாரங்கள் முன்னதாகவே பட்ஜெட் சமர்பிப்பு இருக்கப்போகிறது. மேலும் மத்திய ரயில்வே பட்ஜெட்டும் தனியாக போடப்படாமல் பொது பட்ஜெட்டுடன் சமர்பிக்க இருக்கிறார்கள். எதற்கெல்லாம் வரி அதிகரிப்பு, இறக்குமதி கட்டுபாடுகள் வரப்போகிறது? என்ற அச்சங்களுக்கு பதில் நாளை தெரிந்துவிடும். இந்த அறிவிப்புகள் தான் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணங்கள் ஆகும். ஏழை, எளியவர்கள் மனம் குளிர சிறப்பு அம்சங்களும் […]

ஜல்லிக்கட்டை மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டு

ஜல்லிக்கட்டை மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டு

பொங்கல் விடுமுறையை தொடர்ந்து ஒரு வாரமாக தமிழர்கள் பொங்கி எழுந்து மெரீனா கடற்கரையில் மிக அமைதியாய் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து வரலாற்று சிறப்பு மிக்க ஓரு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். மாணவர்கள், இளவட்டங்கள், தமிழ் கலாச்சாரத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்று பலர் தினம்தினம் ஆயிரமாயிரம் பேர் அங்கு வந்து குவிய  அரசியல் , நட்சத்திர பிரபலங்கள் அங்கு வந்து தங்கள் முகத்தை காட்ட ஆர்வம் காட்டினர். ஆனால், குழுமி இருந்தவர்கள் யாரையும் முன்னிலைப்படுத்தவோ, […]

பள்ளிக் கல்வியில் தமிழகம் சாதனை: ஜெயலலிதாவின் புரட்சி பாரீர்

பள்ளிக் கல்வியில் தமிழகம் சாதனை:  ஜெயலலிதாவின் புரட்சி பாரீர்

பண்டைய காலம் முதலே நமது பூமியில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருவதை அறிவோம். குருகுல கல்வி முறை, நாலந்தா பல்கலைக்கழகம் என்று உலகிற்கு உன்னதமான கல்வி பயிற்சி முறைகளை கற்றுக்கொடுத்தவர்கள் நாமாகும்! நாடு சுதந்திரம் பெற்ற நேரத்தில் எல்லோருக்கும் தரமான கல்வி என்ற பரந்த நோக்கத்துடன் தான் திட்டங்கள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் ஆடம்பரமான உயர்கல்வி என்ற வகையில் நிலைமை மாறியது. பாடத்திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஒன்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றும் என்ற நிலை நாம் சுதந்திர […]

ஜெயலலிதாவிற்கு ‘பாரத ரத்னா’ விருது தந்து கவுரவிக்க வேண்டும்

ஜெயலலிதாவிற்கு ‘பாரத ரத்னா’ விருது தந்து கவுரவிக்க வேண்டும்

தமிழகத்தை பற்றி படுபரபரப்பாக உலகத்தையே பேச வைத்துவிட்டு, அமைதியாய் சந்தனப் பெட்டியில் உறங்கிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. அவருக்கு அருகாமையில் எம்.ஜி.ஆர், அண்ணா! அண்ணா துவக்கிய திராவிட புரட்சியில் ஒரு பெண் தலைமையேற்று 26 ஆண்டுகளுக்கு ஒரு மாபெரும் இயக்கத்தை வழிநடத்திச் சென்றிருப்பது மகத்தான சாதனை ஆகும். அதற்கு வழிவகுத்தவர் எம்.ஜி.ஆர். ஆவார்! எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் ஜெயலலிதா மகளீர் மேம்பாட்டிற்கும் சமுதாய சீர்திருத்தங்களுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அதுமட்டுமின்றி தமிழகம் கண்ட மற்ற தலைவர்களை எல்லாம் விட […]

கருப்பு பணத்தின் மீது யுத்தம் போர் திட்டத்தை முழுமையாக வெளியிட முடியாமல் தவிக்கும் மோடி

கருப்பு பணத்தின் மீது யுத்தம்  போர் திட்டத்தை முழுமையாக வெளியிட முடியாமல் தவிக்கும் மோடி

புழக்கத்தில் உள்ள ரூ.500, 1000 நோட்டுக்கள் கருப்பு பணத்தின் மீது ” Strategic Strike” அதாவது துல்லியமான தாக்குதல் என்று பிரதமர் மோடி அறிவித்தார். Strategic என்றால் திட்டமிட்டு என்றும் போர் திறன் வாய்ந்தது என்றெல்லாம் கூட பொருள் உண்டு. போரில் ஈடுபடும் முன், ஏதோ கிரிக்கெட் ஆட்டம் போல் என்று, எங்கெங்கு என்ற விவரங்களை எல்லாம் கூறிவிட்டா போர் தொடுக்க முடியும்? ‘சிறுபடையான் செல்லிடம் சேரின் உறு படையான் ஊக்கம் அழிந்து விடும்’ என்கிறார் திருவள்ளுவர். […]

பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் மத்திய திட்டத்தை ஏற்றார் ஜெயலலிதா

பெண்களுக்கு முக்கியத்துவம் தரும்  மத்திய திட்டத்தை ஏற்றார் ஜெயலலிதா

உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கும் உணவு பாதுகாப்பு தமிழகத்தில் இருப்பதை அறிவோம். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக ஆட்சி செய்த போது தான் இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதை மகத்தான சாதனை திட்டமாக உயர்த்தியவர், அவரை தொடர்ந்து தமிழகத்தில் முதலமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா . தமிழகம் எங்கும் ஏழைகள் அன்றாட வாழ்விற்கு உறுதி தரும் விதமாக 20 கிலோ அரிசியை இலவசமாக தரும் திட்டத்தை அமுல்படுத்தியும் உள்ளார். மேலும் 35 கிலோ அரிசியை வறுமை […]

1 2 3 28