சீனாவின் யூவான், அமெரிக்க டாலர் போட்டா போட்டி!

சீனாவின் யூவான், அமெரிக்க  டாலர் போட்டா போட்டி!

நமது பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் போவதாக வந்து கொண்டிருக்கும் செய்திகள் நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும், அப்படியொரு நிலை வருமா? என்ற சந்தேகக் கேள்வியும் எழத்தான் செய்கிறது. உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் தெரிந்தது தான், அதை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருப்பது ஈரோ பணமாகும். ஒரு கட்டத்தில் ஈரோ பணம் டாலரின் உபயோகத்தையும் மிஞ்சிவிடும் என்று கூறியவர்கள் பலர் உண்டு. ஆனால், ஐரோப்பிய யூனியனில் நிலவும் சிக்கல்கள் அவர்களை ஒருங்கிணைந்து செயல்பட முடியாமல் இருக்கிறது. உலக […]

வாழ்வியல் மாற்றங்களை உருவாக்கி வரும் ‘Big Data’

  முன்பெல்லாம் படிப்பு என்றால் பள்ளி, கல்லூரி நாட்களில் புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்வது. வளரும் வயதில் மாணவன் பெரும் போதனையே ஞானமாக இருக்கிறது! படிப்பது, கற்பது, புரிந்து கொள்வது எல்லாம் தெரிந்து கொண்டு மனதில் நிறுத்தி வாழ்க்கையை வாழத்தான். இனி அந்த வேலைகளை Artificial Intelligence, செயற்கை நுண்ணறிவு செய்யப் போகிறது! தகவல் சேகரிப்பு அதாவது Collecting data என்பது போய் Big Data அதாவது பெரிய தரவு என்ற சொற்தொடர் தற்போது கணினி உலகில் […]

உப்பு நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தின் பயிற்சிகள்!

உப்பு நீர் மீன் வளர்ப்புக்கு, இந்திய அரசு தன் பயிற்சி மைய தலைமையகத்தை தமிழ்நாட்டில் சென்னையிலும், பயிற்சி மையத்தை முட்டுக்காடு (காஞ்சிபுரம்) என்னும் இடத்திலும், மேற்கு வங்காளம் காக்விப் (24 பர்கானா) என்னும் இடத்திலும் அமைத்துள்ளது. 1) மீன் வளம் (2) சத்துணவு, இனப் பெருக்கம் 3) நோய் வராமல் தடுப்பு 5) சமூக விஞ்ஞானம் 5) சுற்றுச்சூழல் என, பல துறைகளுடன் பயிற்சி, ஆலோசனை, ஆராய்ச்சி செய்து மீன், இறால் குஞ்சு வளர்ப்புக்கு உதவி என, […]

பிற்பட்டோர், மிகப்பிற்பட்டோர் அறிய வேண்டிய அரசின் திட்டங்கள்!

இன்று தமிழ்நாட்டில் பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர், சிறுபான்மையினருக்குப் பல இட ஒதுக்கீடுகள், கல்வியில் இடம், வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு, தொழில் பயிற்சி பெற உதவி, தொழில் கடன், மானியம், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது அனைவரும் அறிந்ததே. எதற்கு யாரை அணுக வேண்டும், என்ன உதவிகள் கிடைக்கின்றன எனப் பார்க்கலாம். உயர்நிலைப் பள்ளி முதல், பல்கலைக்கழகம் வரை பிற்பட்ட, மிகப்பிற்பட்ட, சிறுபான்மை மாணவர்களுக்கு, தங்கும் வசதி, உணவு வசதி, ஆலோசனை கூற, ஆசிரியர் உதவியுடன் நடத்தப்படுகிறது. […]

தேன் கலந்த சீரகத் தண்ணீர் குடிப்பதால் வரும் நன்மை!

சமையலறையில் உள்ள பொருட்கள் சமையலுக்கு மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். அங்குள்ள ஒவ்வொரு பொருட்களிலும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சொல்லப்போனால், மருத்துவருக்கும் மருந்துகளுக்கும் செலவழிப்பதற்கு பதிலாக, சமையலறைப் பொருட்களுக்கு பணத்தை செலவு செய்தால், நோய்கள் ஆரோக்கியமான முறையில் குணமாவதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, அடிக்கடி ஆரோக்கிய பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். அப்படி ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது தான் சீரகம். இந்த சீரகத்தைக் கொண்டு ஒரு பானம் தயாரித்து […]

விண்ணில் சாதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2014

நிறைவுக்கு வந்து கடந்து சென்று விட்ட 2014–ம் ஆண்டைத் திரும்பிப் பார்க்கையில் பல துறைகளில் சாதித்து வரலாறு படைத்தாலும்  பல சோதனைகளையும்  சவால்களையும் சந்தித்ததை மறக்கமுடியாது. தொலைத் தொடர்பின் வசமாக இருக்கும் யுகத்தில் இந்தியாவும் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி சாதனை செய்து விட்டோம். அதில் நமது தொலைத் தொடர்பின் மேன்மை ஆச்சரியமானது. சுமார் நான்கு மீட்டர் நீண்ட ராக்கெட்டை பல கோடி லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பறக்க, அதை மிக துல்லியமாக பூமியிலிருந்து இயக்கிட […]

ஊழல் பணம் முதலீட்டுக்கு வராது: ஸ்பைஸ் ஜெட் பிரச்சினை புரிகிறதா?

ஸ்பைஸ்ஜெட்விவகாரம்  இந்திய விமானத்துறையின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை உலகிற்கு காட்டிக் கொடுக்கும் நடப்பாக இருப்பதை மத்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும். விமானத்துறை என்னும் யானைக்கு மத்திய அரசு தான் தீனிபோட்டு வளர்த்து வருவதால் நாட்டிற்கு என்ன லாபம்? ஏர் இந்தியாவை மூழ்காமல் பார்த்துக்கொள்ள நஷ்டத்தில் இயங்கினாலும் அதன் ஊழியர்கள் சம்பளத்தையும் தந்து உதவியதை அறிவோம். ஏர் இந்தியா மத்திய அரசு நிறுவனம் என்பதால் அது சரிதான் என்று நம்மை நாமே சமாதானப்படுத்தி கொள்ளலாம். ஆனால் அது […]

வலுவான உளவுத்துறை

நாட்டின் பாதுகாப்பு ஆயுதங்களை மட்டும் சார்ந்ததில்லை.  உளவுத்துறையும் வலுவாக இருக்கவேண்டும் என்பதன் அவசியத்தை பிரதமர் மோடி காவல்துறை தலைவர்கள் தேசிய மாநாட்டில் சுட்டிக்காட்டி உள்ளார். ‘கத்தியை தீட்டாதே, புத்தியை தீட்டு’ என்பது போல் ஆயுதப் படையை விட உளவுத்துறை சக்திவாய்ந்தாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். சமீபமாக உலகெங்கும் நன்கு படித்த இளைஞர்கள் தவறான பாதைகளில் திசை மாறி போய்விடுவதை கண்டு வருகிறோம். பல பொறியியல் நிபுணர்கள் திருட்டுக்  குற்றங்களில், பாலியல் குற்றங்களில் எல்லாம் சிக்கி […]

நெருக்கடிகளை சமாளிப்பாரா ஒபாமா?

அமெரிக்காவில் ஜனாதிபதிக்கு தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் போட்டியிடும் வாய்ப்பு கிடையாது என்று சட்டம் உள்ளது. ஆகவே தொடர்ந்து இரண்டாவது முறை ஜனாதிபதியான கிளின்டன், அவரை தொடர்ந்து புஷ் தற்பொழுது ஒபாமா  மூவருக்கும் இரண்டாவது முறை வென்ற பிறகு ஏதோ ஓய்வு காலம் நெருங்கி விட்டதை போல் அவர்கள் அரசியல் வாழ்வு மாறி விடுகிறது. கிளிண்டனுக்கு பொருளாதார நெருக்கடிகள், புஷ்சுக்கு தீவிரவாத நெருக்கடிகள் இருந்ததை அறிவோம். தற்பொழுது அதே பரிதாப நிலை தற்பொழுதைய ஜனாதிபதி ஒபாமாவுக்கும் துவங்கிவிட்டது. […]

சுத்தம் – சுகாதாரம் – நல் வாழ்வு

அக்டோபர் 15 இன்று உலக கை கழுவும் நாள். 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த கை கழுவும் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதன் முக்கியத்துவம் அதிகம். தமிழில்  சுத்தம் சுகம் தரும்; சுத்தம் சோறு போடும் என்று சுத்தத்தைப் பற்றி விதம் விதமாக பழமொழிகள் வைத்திருக்கிறோமே தவிர அவற்றைக் கடைப்பிடிக்கிறோமா என்றால் இல்லை என்றே தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வரும் நோய்கள் பெரும்பாலானவை கை […]

1 2 3 11