பதவி உயர்வு பெற்ற 12 டி.ஐ.ஜி.க்கள் புதிய பணியிடங்களில் நியமனம்

பதவி உயர்வு பெற்ற 12 டி.ஐ.ஜி.க்கள் புதிய பணியிடங்களில் நியமனம்

சென்னை, பிப். 22– தமிழக காவல் துறையில் பதவி உயர்வு பெற்ற 12 டி.ஐ.ஜி.க்கள் புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். மேலும் 6 டி.ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 12 எஸ்.பி.க்கள் டி.ஐ.ஜி.க்களாக கடந்த வாரம் பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்களை புதிய பணியிடங்களில் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னையின் தெற்கு மண்டல இணை ஆணையர் அன்பு, […]

பிரதமர் மோடி நாளை வருகை: சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

பிரதமர் மோடி நாளை வருகை: சென்னையில் 20 ஆயிரம்  போலீசார் பாதுகாப்பு

சென்னை,பிப்.23– சென்னையில் நாளை காலை ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நாளை காலை ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி விழாவில் பங்கேற்று பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். நாளை மாலை 5.30 மணி அளவில் விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை […]

மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

* 90 ஆயிரத்து 269 ஊழியர்களுக்கு பலன் * ஆண்டொன்றுக்கு ரூ.1317.87 கோடி கூடுதல் செலவு * பல்வேறு நிலைகளில் 2,654 பதவிகள் உருவாக்கம் சென்னை, பிப். 23– தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய மற்றும் பணிசுமை குறித்து ஒப்பந்தம் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் நிர்வாகத்திக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய கூட்டமைப்பு(சி.ஐ.டி.யு.), தமிழ்நாடு […]

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை கடும் கட்டுப்பாடு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு  தேர்வுத்துறை  கடும் கட்டுப்பாடு

சென்னை, பிப்.23– எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். பிளஸ்–2 தேர்வு அடுத்த மாதம் 1–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 […]

குன்றத்தூர் ஒன்றியம் எழிச்சூர் ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்கள்

குன்றத்தூர் ஒன்றியம் எழிச்சூர் ஊராட்சியில்  50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்கள்

காஞ்சீபுரம், பிப்.23– காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் எழிச்சூர் ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் விலையில்லா கறவை பசுக்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார். காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், எழிச்சூர் ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு விலையில்லா கறவைப்பசுக்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு செயலாளர் மற்றும் பால்வளம், மீன்வளத்துறை செயலாளர் […]

கலசபாக்கம் தொகுதியில் ஒவ்வொரு கிராமத்திலும் அன்னதானம் வழங்கி உற்சாகமாக கொண்டாட வேண்டும்

கலசபாக்கம் தொகுதியில் ஒவ்வொரு கிராமத்திலும்  அன்னதானம் வழங்கி உற்சாகமாக கொண்டாட வேண்டும்

போளூர், பிப். 22– மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளில் ஒவ்வொரு கிராமத்திலும் அன்னதானம் வழங்கி உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்று கலசபாக்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்ந்திரன் பேசினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கலசபாக்கம் தொகுதியில் அடங்கிய புதுப்பாளையம், கலசபாக்கம், போளூர், ஜமுனாமரத்துர் ஒன்றியம் ஊராட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கலசபாக்கத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் எம்.திருநாவுக்கரசு, எல்.புருஷோத்தமன், என்.வெள்ளையன் ஆகியோர் […]

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் அமெரிக்காவில் திருவள்ளுவர் சிலை

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் அமெரிக்காவில் திருவள்ளுவர் சிலை

சென்னை, பிப். 22– விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் ‘‘உலகைத் தமிழால் உயர்த்துவோம்’’ என்ற உன்னத நோக்குடன் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் 30 திருவள்ளுவர் சிலைகளை அமைத்துள்ளது. திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டும் வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை விஜிபி நிறுவனத் தலைவரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனருமான வி.ஜி.சந்தோசம் செய்து வருகிறார். இதுவரை இந்தியாவில் ரிஷிகேஷ், நவிமும்பை, அந்தமான், விசாகப்பட்டினம், சென்னை ராணுவ பயிற்சி முகாம், சிவானந்தா குருகுலம், அமெரிக்கா, மலேசியா, தென்னாப்பிரிக்கா, பாரீஸ், ஆஸ்திரேலியா மற்றும் […]

‘தமிழக மரக்களஞ்சியம்’ செயலி: திண்டுக்கல் சீனிவாசன் அறிமுகம்

‘தமிழக மரக்களஞ்சியம்’ செயலி:  திண்டுக்கல் சீனிவாசன் அறிமுகம்

சென்னை, பிப். 23– தமிழக வனத்துறையின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழக மரக்களஞ்சியம் என்னும் செயலி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் வனத்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இக்கூட்டத்தில் வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் எச்.பசவராஜு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் டி.பி. ரகுநாத் மற்றும் வனத்துறையிலுள்ள மூத்த அதிகாரிகளும் பங்கு பெற்றனர். தமிழகத்தின் மொத்த வன மற்றும் மரப்பரப்பு 24.16 விழுக்காடு ஆகும். தேசிய வன கொள்கையின்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் 33 விழுக்காடு மரப்பரப்பு அவசியமாகும். […]

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: தமிழகத்தில் இருந்து 2 ஆயிரம் பக்தர்கள் புறப்பட்டனர்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: தமிழகத்தில் இருந்து 2 ஆயிரம்  பக்தர்கள் புறப்பட்டனர்

ராமேசுவரம்,பிப்.23– அந்தோணியார் ஆலய திருவிழா இன்று நடைபெறுவதையொட்டி கச்சத்தீவு செல்ல 62 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கச்சத்தீவு புறப்பட்டனர். இந்திய–-இலங்கை கடல் எல்லையில் உள்ள கச்சத்தீவில் பழமைமிக்க அந்தோணியார் ஆலயம் உள்ளது. யாழ்பாண மறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்வது மரபாக உள்ளது. இந்த ஆண்டுக்கான விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 […]

காவிரிநீர் பிரச்சினையில் பிரதமரை நேரில் சந்திக்க திட்டம்

காவிரிநீர் பிரச்சினையில் பிரதமரை நேரில் சந்திக்க திட்டம்

சென்னை, பிப்.23– காவிரிநீர் பிரச்சினையில் பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாயசங்கத் தலைவர்கள், தமிழக எம்.பி.க்கள் குழு நேரில் சந்திக்க சென்னையில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காவேரி பிரச்சினையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்டவும், காவேரி நதி நீரைக் கொண்டு விவசாயம் செய்து வரும் தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின் நலனைப் பேணிக்காக்கவும், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று பிறப்பித்துள்ள தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய மேல் […]

1 2 3 412