அதிர்ஷ்டம் (சின்னஞ்சிறுகோபு )

கூடையில் சுமந்து கொண்டு வீட்டுக்கு வீடு சென்று காய்கறி விற்பவள் கமலா . அவள் கீரைக் கொல்லைக்கு காலங்காத்தாலேயே வேகமாக நடந்துக் கொண்டிருந்தாள். இன்னும் விழிக்காமல் தூக்கிக் கொண்டிருக்கும் தனது குடிக்கார புருஷனிடம் விட்டு விட்டு வர முடியாமல் அவளது மூணு வயசு பிள்ளை பாலுவைக் கூட்டிக் கொண்டு போனாள். கொஞ்ச தூரம் தான்! ஆனால் அதற்குள்ளேயே சூரியன் பொன்னிறத்தில் தலைக்கு கொஞ்சம் மேமேல வந்து சுடத் தொடங்கி விட்டது. “கையிலோ ஒத்த ரூபா கூட இல்லை. […]

இப்படியும் பெண்கள் (ராஜா செல்லமுத்து)

கொட்டித் தீர்க்கும் வெப்ப வெயிலில் “நான் ஆளான தாமர ரொம்ப நாளாக தூங்கல” என்ற பாடல் கூட்டத்தின் ஊடே மிதந்து வந்தது. யார்ரா இது இந்நேரம் இப்படி பாட்டுப் போடுறது? என்ற ஆச்சர்யத்தில் திரும்பினான், ரஞ்சித் நீண்ட பெண்கள் இருக்கையின் நடுவில் ஒரு பெண் தன் கைக் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தாள். “இவகிட்ட இருந்த பாட்டுவருது இல்லையே” என்ற ரஞ்சித் எதிர்திசையைப் பார்த்தான். படியருகே இருக்கும் ஒற்றைச் சீட்டில் அமர்ந்திருந்தாள், ஊசி பாசிவிற்கும் ஒருத்தி, அவள், கையில் ஏரியல் […]

அண்ணன் என்னடா, தம்பி என்னடா… (டாக்டர் கல்யாணி)

மூாத்திக்கு மிகவும் உச்சிகுளிர்ந்தது. இரண்டு மகன்களும் நன்றாக செட்டில் ஆயாச்சு. இனிமேல் கவலையே இல்லை. “அப்பப்பா” ஓடியகாலங்களை திரும்பி பார்த்தால் எத்தனை வேகம்? மனதிற்குள் ஒரு அரை யுகம் ப்ளாஷ்பாக்கில் கிடு கிடுவென காட்டியது. அன்று அவனுடைய அறுபதாவது திருமண வைபோகம். மூத்தவன் அமெரிக்காவிலிருந்தும் இளையவன் ஆஸ்திரேலியாவிலிருற்தும் வந்திருந்தனர். ஒரே “தடபுடல்தான்”. சென்னையில் “அசோக் நகரில்” மிகப் பெரிய திருமண மண்டபத்தில் மூர்த்தியின் அறுவதாவது கல்யாணம் கலகலக்க அத்தனை சொந்த பந்தங்களும் குழுமியிருந்தது. ” மீரா என்ன? […]

அலையில் ஆடும் காகிதம் (டாக்டர் கல்யாணி)

“நித்தமும் ஒரு டான்ஸ். அதுவும் காபரே . ச்சே… என்ன பிழைப்புடா இது?’’ உலகத்தின் அத்தனை பிழைப்புகளும் ஒரு உன்னதமான அடையாளம் தர, அந்த உழைப்பின் ஒவ்வொரு சின்னமும் ஞாபகத் திரையில் “பளிச்” சென்ற வெளிச்ச சுவராய் இருக்க…, கண்டவனையும் இழுக்கும் கவர்ச்சி நடனம். இதுவும் ஒரு ஈனத் தொழில் . ‘‘ச்சே, ச்சே… என்னையே எனக்கு பிடிக்கவில்லை” நொந்து கொண்டாள் வனராணி. பேருக்கு ஏற்றாற்போல, ஆடவரைக் கவர்த்திருக்கும் அப்படி ஒரு அழகு. ஆனால் அவளுக்கு எந்த […]

மணல் வீடுகள்

“அம்மா….. நான் பெரியவனானா நிச்சயம், பெரிய…. வீடு கட்டணும். கார் வாங்கணும். பெரிய, பெரிய…. ஆசையெல்லாம் இருக்கு” என்ற அரவிந்தனின் எண்ண அலைகள், அவன் பழைய நாட்களை நினைவு படுத்தி அவனின் கண்ணில் ஈரம்… என்னதான் மனதில் கோடி கோடி ஆசைகள் இருந்தாலும் நிகழ்வில் “அரவிந்த், எங்கப்பா போனே? காய்கறி மார்கெட்டுக்கு போயிட்டு வாப்பா., காரை வேறு அலம்பணும் …. அரவிந்த்.” மிகவும் அதிகார தோரணையோடு அவன் முதலாளியின் மனைவி கூச்சலிட “அம்மா…” “என்னப்பா எங்க போனே? […]

லஞ்ச் டைம்

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது, அந்த அலுவலகம். ஆட்கள் போவதும் வருவதுமாய் இருந்தார்கள். “ஹலோ யாரப் பாக்கணும்?, வரவேற்பாளர் மகாவின் உரத்த குரல் கண்ணாடிக் கதவுகள் மூடப்பட்ட அந்த அறையில் ஒரு அதிர்வோடு கேட்டது. “ம்… ” என்றான் வந்தவன் இளக்காரமாக. இங்க ஒரு ஆள் இருக்கேன். கேக்காமப் போனா எப்படி? “இருக்கீங்களா? மேலும் வந்தவனின் இளக்காரப் பேச்சு கூடியது. “ஓ.கோ ….. ஆள் இருக்கிறது தெரியலையா? என்ற மகாவின் பேச்சில் முன்னை விட கொஞ்சம் உக்கிரம் கூடியது. […]

நெஞ்சத்தில் நீங்காத துன்பம்

இதமான தென்றல் காற்று வீசும் மாலை பொழுது, சூரியன் மறைந்து வெண்ணிலா மெல்ல மெல்ல தெரியும் நேரம். வானத்தில் முளைக்கும் வண்ண வண்ண நட்சத்திரங்களை பார்த்தவாறு வீட்டு வாசலில் திறந்த வெளியில் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள் மேனகா. வீட்டு வாசலில் உள்ள இரும்பு கேட்டை தட்டிக் கொண்டு நிற்கும் கவிதா, ‘‘ மேனகா.. மேனகா…’’ என்று அழைக்கிறாள். அவள் அழைக்கும் சத்தம் கூட காதில் விழுதா அளவுக்கு மேனகாவின் எண்ணம் சிதறி இருந்தது. ஒரு கட்டத்தில் பொருமை […]

உருவு கண்டு எள்ளாதே

உருவு கண்டு எள்ளாதே

ராஜா செல்லமுத்து செல்வம் செல்வம்…, தன் கனிவான இலக்கியக் குரலைக் கொஞ்சம் கடுமையாக்கிக் கத்திக் கொண்டே இருந்தார் ராஜேஷ். “ம்ஹுகும். அவன் காலடி மிதியைச் சுத்தம் செய்தவாறு அசைவேனா என்றிருந்தான். “டேய் செகிடா….. டேய் செல்வம், தன் மொத்த பலத்தையும் ஒன்று கூட்டிக் கூப்பிட்டும் செல்வம் செவிசாய்க்கவே இல்லை. இவனையெல்லாம் வச்சு, என்ன செய்யப்போறேனோ, எழுந்து போய் செல்வத்தை ஒரு உலுக்கு உலுக்கினார். சார் என்று காலடி மிதியைத் தூரம் போட்டு விட்டு திடுமென எழுந்து நின்றான். […]

புரிந்து கொண்டால் …

புரிந்து கொண்டால் …

கதையைத் தேடி அலைந்து கொண்டு இருக்கும் ரவிராஜ் விரைவில் இயக்குனராக உயரவிருக்கிறார். இன்று எப்படியும் ஒரு புதுத் கதையை உருவாக்கிவிடும் வேகத்தில் தனது மாருதி காரில் ஏறினார். டிரைவரை கோடம்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம் வழியாக கடற்கரை சாலை செல்லச் சொன்னார். மீண்டும் கோடம்பாக்கம் திரும்ப சொல்லி விட்டு கையில் பேனாவும் தொடையில் வெள்ளை தாள் கட்டு பேப்பரையும் வைத்துக் கொண்டார். அப்போது…. வெளியே வேகவேகமாக சென்று கொண்டு இருந்த காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தார். கார் கோடம்பாக்கம் பாலத்தை […]

1 2 3 38