அமானுஷ்ய சக்தி பீதியில் உறையும் குடும்பத்தின் கதை ‘கண்மணி பாப்பா’!

அமானுஷ்ய சக்தி பீதியில் உறையும்  குடும்பத்தின் கதை ‘கண்மணி பாப்பா’!

நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் – மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் “கண்மணி பாப்பா” திரைப்படம். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவி தான் அவருக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை தந்து வருகிறார். ஒருகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய தொகை முழுதும் […]

கேன்னஸ் பட விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு ‘டைடான் ஐகான்’ விருது

கேன்னஸ் பட விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு ‘டைடான்  ஐகான்’ விருது

மும்பை, மே. 18– கேன்னஸ் சர்வதேச பட விழாவில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு ‘டைடான் ரெஜினல்டு எஃப் லெவிஸ் திரைப்பட ஐகான் விருது’ வழங்கப்பட்டது. சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நடிகைகளின் அளப்பரிய சேவையைப் பாராட்டி கவுரவிக்கும் விதத்தில் உலகளவில் இந்த விருது வழங்கப்படுகிறது. ஸ்ரீதேவி குடும்பத்தின் சார்பில் பிரபல இயக்குனர் சுபாஷ் கெய்யும், தயாரிப்பாளர் நம்ரதா கோயலும் பெற்றுக் கொண்டார்கள். ‘நானும் என் இரு மகள்களும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். இவ்விருது கிடைத்ததில் எல்லையில்லா ஆனந்தம் அடைகிறோம். […]

‘பேய் பசி’ த்ரில்லர் சினிமாவில் டான்ஸ் ஆடியிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

‘பேய் பசி’ த்ரில்லர் சினிமாவில் டான்ஸ்  ஆடியிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

சென்னை, மே. 18– ‘பேய் பசி’ என்னும் படத்தில் தன் சகோதரனுக்காக நடனம் ஆடியிருக்கிறார் இளம் யுவன் ஷங்கர். தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பதை நிரூபித்து இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் “பியார் பிரேமா காதல்”படத்தில் இடம் பெற்று உள்ள ‘ஹை ஆன் லவ்’ பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் விஸ்தரித்துக் கொண்ட யுவன் தன்னுடைய சகோதரர் ஹரி […]

சமரசம்; ‘சாமி’ 2ம் பாகத்தில் த்ரிஷா: டைரக்டர் ஹரியிடம் சரண்

சமரசம்; ‘சாமி’ 2ம் பாகத்தில்  த்ரிஷா: டைரக்டர் ஹரியிடம் சரண்

சென்னை, மே. 18– இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா ஆகியோர் நடிக்க 2003-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சாமி’. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் (பாகம் 2) உருவாகி வருகிறது.   விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு கேரக்டர் திருப்தியாக இல்லை என்ற காரணம் காட்டி படத்திலிருந்து விலகிய த்ரிஷா, தயாரிப்பாளர் சங்கத்தில் விளக்கம் கேட்கப்பட்டு, தற்போது பிரச்சனை […]

‘‘இரும்புத்திரை வெளிவர எனக்காக காரையும், பங்கு முதலீடுகளையும் விற்ற நண்பர்கள் : விஷால் உருக்கமான பேச்சு

‘‘இரும்புத்திரை வெளிவர எனக்காக காரையும், பங்கு முதலீடுகளையும் விற்ற நண்பர்கள் : விஷால் உருக்கமான பேச்சு

சென்னை, மே. 18– ‘‘இரும்புத்திரை’’ படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். பணத்தின் அருமை அப்போது தான் எனக்கு தெரிந்தது. என்னுடைய நண்பன் வெங்கட் காரை விற்று எனக்கு பணம் கொடுத்தார். இன்னொரு நண்பன் பத்திரத்தை விற்று பணம் கொடுத்தார். ஏன் என்னுடைய படத்தை வெளிவராமல் தடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று உருக்கமாகப் பேசினார் நடிகர் விஷால். இதுவரை எனக்கு இது போல் நடந்தது இல்லை. தயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தையே இவர்கள் வெளிவராமல் தடுக்கிறார்கள் […]

தமிழ் சினிமாவில் ‘நிர்வாணமாக’ நடித்திருக்கும் புதுமுக நடிகை தன்யாவுக்கு கொலை மிரட்டல்

தமிழ் சினிமாவில் ‘நிர்வாணமாக’ நடித்திருக்கும்  புதுமுக நடிகை தன்யாவுக்கு கொலை மிரட்டல்

சென்னை, மே.18- சென்னை வடபழனி திருநகரை சேர்ந்தவர் தன்யா என்கிற ரவீயா பானு (வயது 26). புதுமுக சினிமா நடிகையான இவர் நேற்று, தனக்கு வந்த ஒரு கொலை மிரட்டலை அடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- ‘‘நான் இயக்குனர் கணேசன் இயக்கிய 18.5.2009 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன். இலங்கையில் இசைப்பிரியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் […]

ஜூன் 29ந் தேதி முதல் 3 நாள் ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை வெற்றி விழா கொண்டாட்டம்

ஜூன் 29ந் தேதி முதல் 3 நாள்  ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை  வெற்றி விழா கொண்டாட்டம்

சென்னை,மே.16 – அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் ஜூன் 29ந் தேதி முதல் ஜூலை 1ந் தேதி வரை ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவையொட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரெஹானா இசையில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்காக‘‘தமிழுக்கு பெருமை’’ சேர்க்கும் புதிய இசை ஆல்பம் வெளியிடப்படவிருக்கிறது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 31 வது ஆண்டு விழா அமெரிக்காவில் டெல்லாஸ் மாகாண டெக்சாஸ் நகரில் […]

மண்ணுக்கு 6 அடி கீழே புதையுண்டு தவிக்கும் இளைஞனின் மரண பீதி

மண்ணுக்கு 6 அடி கீழே புதையுண்டு தவிக்கும் இளைஞனின் மரண பீதி

இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘‘ஆண்டனி’’. இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஏ.சந்திரசேகர், மூத்த நடிகை ஜெயசித்ரா கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர். சண்டக்கோழி புகழ் “லால் ” நிஷாந்த், வைசாலி, நடிகை ரேகா, சம்பத் ராம், ‘வெப்பம் ‘ ராஜா.சேரன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் – பாலாஜி. நாயகன்: நிஷாந்த். ஆண்டனி ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்தின் […]

பர்மா பஜார் பின்னணியில் ‘சைனா’

பர்மா பஜார் பின்னணியில் ‘சைனா’

‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பிரபலமானவர் கலையரசன். அடுத்து ‘டார்லிங்–2’, ராஜா மந்திரி, ஆகிய படங்களில் நடித்தார். இந்த 2 படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. குறிப்பாக கலையரசன் ஹீரோவாக நடித்த ராஜா மந்திரி படம் வசூல் ரீதியில் தோல்வியடைந்ததால் ‘அப்செட்’டில் இருந்த கலையரசனுக்கு தற்போதைய ஆறுதல் ரஜினியின் கபாலி படம் தான். ‘கபாலி’ படத்தை தொடர்ந்து கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சைனா’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக இருந்த ஹர்ஷவர்தனா இயக்கியுள்ளார். இவர் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் […]

‘‘பணம் இல்லாவிட்டாலும் நேர்மையாக வாழ்ந்தாலும் குடும்பத்துக்கு நிம்மதி…!’’

‘‘பணம் இல்லாவிட்டாலும் நேர்மையாக  வாழ்ந்தாலும் குடும்பத்துக்கு நிம்மதி…!’’

‘திருப்பதிசாமி குடும்பம்’ – ஒரு குடும்பத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப் பட்ட திரைக்கதை. நிறைய பணம் இருந்தால் மட்டும் வாழ்க்கை நிம்மதியா வாழலாம் என்று நினைகிறார்கள். அனால் பணம் இல்லா விட்டாலும் நேர்மையாக வாழ்ந்தாலும் குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்ற கருத்தை உள்ளடக்கிய கதை. அப்படி வாழும் ஒரு குடும்பத்திற்கு சில சமூக விரோதிகளால் நிறைய பிரச்னைகள் உருவாகிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் புத்திசாலி தனமாக பிரச்னைகளை சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறார்கள் […]

1 2 3 47