ஒடிசாவில் பலத்த மழை: ரெயில்வே பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

ஒடிசாவில் பலத்த மழை: ரெயில்வே பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

ஒடிசா, குஜராத்  உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஒடிசா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ராயகாடா, நாகவலி, காலஹந்தி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாகவலி ஆற்றின் குறுக்கே ரெயில்வே பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.  பலத்த மழையால் சாலைகள் கடும் சேதம் அடைந்துள்ளன. குஜராத் மாநிலத்தில் பெய்த  48 மணி நேர மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10 […]

வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம்: விமானம், ரெயில் சேவைகள் பாதிப்பு

புதுடெல்லி, டிச. 19– வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனியும் குளிரும்  நிலவி வருகிறது. இன்று அதிகாலை டெல்லி, பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் பனி புகைமூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. அடர்ந்த புகை நீண்ட நேரம் நீடித்ததால் காலையில் வாகனப் போக்குவரத்து முடங்கியது. 5 அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு புகை மூட்டம் இருந்தது. இதனால் ரெயில், விமான சேவைகளிலும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. 24 ரெயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்பட்டன. […]

மேட்ரிமோனி.காம் நிறுவன தலைமை நிதி அலுவலராக பாலசுப்பிரமணியன் நியமனம்

சென்னை, ஆக.1– மேட்ரிமோனி.காம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக(CFO) கே.பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆகஸ்ட் 22 ந்தேதி முதல் இந்த பொறுப்பை வகிப்பார். இதற்கு முன்னர் தலைமை நிதி அதிகாரியாக பதவி வகித்து, சொந்த பணி காரணமாக வெளிநாட்டிற்கு செல்லும் எஸ். பரமேஸ்வரனின் பதவி விலகலை, மேட்ரிமோனி.காம் ஏற்றுக்கொண்டுள்ளது. புதிய தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்க உள்ள கே.பாலசுப்பிரமணியம், இதற்கு முன்னர் முருகப்பா குழுமத்தின் ‘டியூப் இன்வென்ஸ்மென்ட்ஸ் ஆப் இந்தியா’ நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பதவி […]

2016–17 திருத்தப்பட்ட பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

* பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ. 208 கோடி ஒதுக்கீடு * பண்ணை இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படும் * முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ரூ. 928 கோடி ஒதுக்கீடு * தோட்டகலைத்துறைக்கு ரூ511 கோடி ஒதுக்கீடு * பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு * உதவித் திட்டங்கள், மானியங்களுக்கு ரூ. 68,211 கோடி ஒதுக்கீடு

2016–17 க்கான திருத்தப்பட்ட பட்ஜெட் தாக்கல்

15ஆவது சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 16ம் தேதி நடைபெற்ற தேர்தலில், அதிமுக வெற்றி பெற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ளது. சட்டசபையின் முதல் கூட்டம், மே மாதம் 25ம் தேதி ஆளுனர் உரையுடன் தொடங்கி ஒரு வாரம் நடைபெற்றது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2016-17ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.

பெண்ணை தாக்கியதால் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கைது

பெங்களூர்,அக்.27– பெங்களூரில் நட்சத்திர விடுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா  தனது தோழியை தாக்கியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நட‌த்தி வந்தனர். இந்த நிலையில் அவரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா கடந்த  செப்டம்பர் 25–-ம் தேதி பெங்களூருவில் எம்.ஜி. சாலையிலுள்ள தனியார் விடுதி  ஒன்றில் தனது பெண் தோழியை சந்தித்துள்ளார். அப்போது அமித் மிஸ்ரா பெண் தோழியை தகாத வார்த்தைகளில் திட்டி, […]

முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் அதிபர்ககள் குவிந்தனர்

சென்னை, செப். 9: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று துவங்கிய உலகளாவிய தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் வௌிநாட்டு தொழில் அதிபர்களும், உள்நாட்டு தொழில் அதிபர்களும் குவிந்தனர். இந்த மாநாட்டை துவக்கி வைக்க வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழி நெடுக எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண் தொழில் அதிபர்களும் ஏராளமான அளவில் வந்திருந்தனர் இந்த மாநாட்டை பார்த்தபோது வௌிநாட்டில் ஒரு மாநாடு நடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. உலகளாவிய தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் முதன் […]

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு

சென்னை, செப். 9– சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை முதல்– அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:– வரலாற்று சிறப்புமிக்க சென்னை, முதன் முதலாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது. மாநாட்டிற்கு வருகை தந்துள்ள முதலீட்டாளர்கள், தூதர்களை வரவேற்கிறேன். 15 நாடுகளில் இருந்து ஆயிரம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் இருந்து 4 ஆயிரம் பேர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தை அனைத்து […]

ராணுவ பயிற்சி முகாமில் திடீர் வெடி விபத்து 7 வீரர்கள் கவலைக்கிடம்

புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா ராணுவ பயிற்சி முகாமில் நேற்று (சனிக்கிழமை) வழக்கம் போல் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். வெடிகுண்டுகளை வைத்து பயிற்சி மேற்கொண்ட போது, அதில் ஒரு குண்டு திடீரென வெடித்தது. இதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 18 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக […]

மெட்ரோ ரயிலிலும் அறிமுகமாகிறது சலுகை விலையில் பயண அட்டை

சென்னை :30 மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய சலுகை பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இரண்டு நிறுத்தங்களுக்கு இடையே தினமும் பயணம் செய்வோருக்கு சலுகை பயணச்சீட்டு வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், கட்டணத்திலிருந்து 20 சதவீதம் கழிவு பெற முடியும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 12 முறை, 50 முறை, 100 முறை என மூன்று சலுகை கட்டண அட்டைகள் வழங்கப்பட உள்ளது.இதில், 12 முறை பயண அட்டை […]

1 2 3 9