மாடம்பாக்கம், வில்லிவாக்கத்தில் நாளை மின்தடை

மாடம்பாக்கம்,  வில்லிவாக்கத்தில்    நாளை மின்தடை

சென்னை, டிச. 14– சென்னையில் நாளை (15–ந் தேதி) வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மாடம்பாக்கம் பகுதி : மாடம்பாக்கம், கோவிலஞ்சேரி, வேங்கைவாசல், அகரம்தென், மப்பேடு, ராஜகீழ்ப்பாக்கம் ஒரு பகுதி, பதுவஞ்சேரி, கௌரிவாக்கம், சந்தோஷபுரம், கேம்ப் ரோடு, தனலஷ்மி நகர், வேளச்சேரி […]

சர்வதேச அளவில் வேலைவாய்ப்பு: இந்திய நிறுவனங்கள் 3ம் இடம்

சர்வதேச அளவில் வேலைவாய்ப்பு: இந்திய நிறுவனங்கள் 3ம் இடம்

குர்கான், டிச.14– சர்வதேச அளவில், வேலைவாய்ப்பு வழங்குதலில் இந்திய நிறுவனங்கள் மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஊழியர்  ஆலோசனை நிறுவனமான ’மேன்பவர் குரூப் இந்தியா’ நிறுவனம் சார்பாக, சர்வதேச  அளவில் 43 நாடுகளில், சுமார் 59,000 நிறுவனங்களிடையே எதிர்காலத்தில் (அடுத்த  மூன்று மாதங்களில்) வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் குறித்து கருத்துக்  கேட்கப்பட்டு, அதற்கான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு 3 வது இடம் அந்த ஆய்வில்,  இந்தியாவைச் சேர்ந்த சுமார் 4,500 நிறுவனங்களிடமும் கருத்துக்  […]

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி:

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி:

சென்னை, டிச. 14– ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் 2 மகன்களின் படிப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். துப்பாக்கி சூடு தாக்குதலில் காயமடைந்த மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் 3 போலீசாருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் […]

கச்சத்தீவு அருகே மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படை

சென்னை, டிச.14– கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த  தமிழக மீனவர்களை 7 ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கைக் கடற்படையினர் மீன்  பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். மேலும் மீனவர்களின் வலையையும்  அறுத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று  (டிசம்பர் 14) அதிகாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த  ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி கற்கள்,  பாட்டில்களை வீசி இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கைக்  கடற்படையினரின் தாக்குதலை அடுத்து 300 விசைப் படகுகளில் […]

இருதயம் வெளியே தெரியும்படி பிறந்த இங்கிலாந்து குழந்தை:

இருதயம் வெளியே தெரியும்படி பிறந்த  இங்கிலாந்து குழந்தை:

இங்கிலாந்து, டிச.14– இங்கிலாந்தில் பெண் குழந்தை ஒன்று, இருதயம் வெளியில் இருக்கும் நிலையில் பிறந்து, அபூர்வமாக உயிர் தப்பிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச்  சேர்ந்தவர்கள் டீன் விலின்ஸ் (வயது 43), நயோமி பிண்ட்லே (வயது 31) தம்பதியர். நயோமி  பிண்ட்லே கர்ப்பமாக இருந்த காலத்தில் ஸ்கேன் செய்து பார்க்கும்போது,  குழந்தைக்கு இதயம் வெளியே உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த  நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி நயோமிக்கு லியிசெஸ்டர் நகரில் உள்ள  கிளின்பீல்ட் மருத்துவமனையில் […]

இந்தியாவில் கட்டப்பட்ட கல்வாரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

இந்தியாவில் கட்டப்பட்ட கல்வாரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

மும்பை, டிச. 14: பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள, ‘கல்வாரி’ நீர்மூழ்கி கப்பல், கடற்படையில் இன்று முறைப்படி இணைந்தது. மும்பையில் நடந்த விழாவில், பிரதமர், நரேந்திர மோடி இதை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். நம் கடற்படையின் முதல் நீர்மூழ்கி கப்பலான, கல்வாரி, 1967ல் இணைக்கப்பட்டது. 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த அது, 1996ல், படையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடற்படைக்கு, ஆறு ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, […]

எச் – 1பி விசா உள்ளவர்களுக்கு அமெரிக்க அரசு புது சலுகை

எச் – 1பி விசா உள்ளவர்களுக்கு அமெரிக்க அரசு புது சலுகை

வாஷிங்டன், டிச. 14: எச் – 1பி விசா வைத்திருப்பவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றலாம்’ என, அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, எச் – 1பி விசா வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு, 65 ஆயிரம் பேருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது.உலக அளவில் இந்த விசாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், நம் நாடு முன்னணியில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:எச் – […]

குஜராத் சட்டசபை இறுதி கட்ட தேர்தல்: பிரதமர் தாயார் ஹிராபென் வாக்களித்தார்

குஜராத் சட்டசபை இறுதி கட்ட தேர்தல்: பிரதமர் தாயார் ஹிராபென் வாக்களித்தார்

அகமதாபத், டிச. 14: குஜராத்தில் இறுதி கட்டமாக 93 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காந்தி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் தனது வாக்கை பதிவு செய்தார் குஜராத் மாநிலத்தில், 182 உறுப்பினர்கள் உள்ள சட்டசபைக்கு, இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் அறிவித்தது. முதல் கட்டமாக, டிச., 9ல், 89 தொகுதிகளுக்கு, ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 68 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாயின. இந்நிலையில், இரண்டாவது மற்றும் […]

சென்னை இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக் கொலை

சென்னை இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக் கொலை

சென்னை, டிச. 13– புழல் புதிய லட்சுமிபுரம் பகுதியில் நகைக்கடையில் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி (வயது 48) இன்று அதிகாலை அங்கு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரணம் அடைந்த இன்ஸ்பெக்டரின் குடும்பத்திற்கு அமைச்சர் மாபா. பாண்டியராஜன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விசுவநாதன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள். சென்னை கொளத்தூரைச் சேர்ந்த முகேஷ்குமார் ( 37) என்பவர் கடந்த 15 வருடங்களாக […]

2001 பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: பிரதமர் மோடி, வெங்கய்யா நாயுடு, மன்மோகன் சிங் மலர் அஞ்சலி

2001 பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்:   பிரதமர் மோடி, வெங்கய்யா நாயுடு,   மன்மோகன் சிங் மலர் அஞ்சலி

புதுடெல்லி, டிச. 13 இன்று பாராளுமன்ற தாக்குதல் நடந்து, 16 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பாராளுமன்றத்தின் மீது லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் பலியானார்கள். இதில் 5 பேர் பயங்கரவாதிகள், 7 பேர் பாதுகாப்பு படையினர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதன் 16-ம் ஆண்டு நினைவு […]

1 2 3 492