மூன்றடுக்கு மாடிகள் வந்தது எப்படி?

கோவையில் ஆங்கிலேயர் வரும் வரைக்கும் அரண்மனைகளும், ஆலையங்களுமே உயரமாக இருந்தன. ஊரில் எல்லாம் ஓட்டுவில்லை வீடுகளாகவே இருந்தன. ஆங்கிலேயர் வந்தபிறகு முதலில் நான்கு மச்சு வீடுகள் தோன்றின. 1850–ம் ஆண்டுவரை இவைகளே மச்சு வீடுகள். பிறகே மற்ற மச்சு வீடுகள் தோன்றின. இந்நான்கு மச்சுவீடுகளும் நான்கு  புறத்தில் இருந்தன. ராஜவீதி அக்ரஹாரத்தில் ஜாகீர்தாரர் வீடு என்பது ஒன்று. இதற்குப் பின்னால் ஒரு பழத்தோட்டம் இருந்தது. கோமுட்டி வீதியின் கீழ்க்கோடியில் ஆற்காடு  தொப்பையப்ப முதலியார் வீடு மற்றொன்று. கோமுட்டி […]

எலிகள் தொல்லையால் அமைக்கப்பட்ட எழிலார்ந்த கோவையின் முக்கிய நகர்கள்

சின்னச் சின்ன பொந்துகளில் வசிக்கும் எலிகளால், ஒரு நகரத்தையே உருவாக்க முடியுமா? நிச்சயம் முடியும் என்கிறது நடந்த வரலாறு. கோவையில் ஆர்.எஸ்.புரம், ராம்நகர், டாடாபாத், கோபாலபுரம், காந்திபுரம், கிரேடவுன் போன்ற இடங்களில் மட்டும், வீடுகள் நன்கு விசாலமாகவும், காற்றோட்ட வசதியோடும் அமைந்திருக்க காண்பீர்கள். அதற்கு எலிகளே பெரும் காரணம். 1897 ம் ஆண்டு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த கப்பல் வழியாக மும்பைக்கு, பிளேக் என்னும் விஷ காய்ச்சல், தொற்று நோய் வந்தது. பிறகு அங்கிருந்து கோவைக்கு 1903–ல் பரவத் […]