மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

மருதமலை முருகன் கோயிலில்  கந்த சஷ்டி விழா துவக்கம்

கோவை மருதமலை முருகன் கோயிலில், காப்பு கட்டு நிகழ்ச்சியுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது. தமிழ் கடவுள் முருகபெருமானின், திருத்தலங்களில் ஏழாம் படைவீடு என போற்றப்படும், மருதமலை முருகன் கோயிலில், காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி விழா இனிதே துவங்கியது. விழாவை முன்னிட்டு, காலை 5 மணிக்கு கோபூஜை நடைபெற்றது. 5.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு, 16 வகை திரவியங்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. 8 மணிக்கு மேல் உஷாக்கால பூஜையும், விநாயகருக்கு பூஜைகளும் நடைபெற்றது. புன்யாஹம், இறை அனுமதி […]

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர்  அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

விழுப்புரம்,அக்.20- விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிசேகம் செய்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் அங்களாம்மனுக்கு பலவித மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு 11.20 மணிக்கு மேளம் தாளம் முழங்க உற்சவர் அங்காளம்மனை கோவில் மண்டபத்திலிருந்து வடக்குவாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு சென்று […]

திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா:

திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த  சஷ்டி விழா:

திருப்பரங்குன்றம், அக். 20– மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.   ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கோவிலிலேயே விரதம் இருக்க துவங்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இன்று காலை 8 மணிக்கு அனுக்கை பூஜையுடன் தொடங்கியது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, காலையில் உற்சவர் சந்நிதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், சண்முகர் சந்நிதியில் […]

கிறிஸ்தவ ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி

கிறிஸ்தவ ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி

கொடைக்கானல், அக். 15– கொடைக்கானல் கார்மேல்புரத்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கார்மேல்புரத்தில் உள்ள கார்மேல் சபையின் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு வெளிஉலகம் தெரியாத ஏராளமான கன்னியர்கள் தங்கி நாட்டு மக்களுக்காக ஜெபம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கார்மேல் சபையின் தலைவி அபிலா தெரசாவின் திருவிழாவையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. […]

கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

கள்ளழகர் கோவிலில்  பக்தர்கள் சாமி தரிசனம்

அலங்காநல்லூர், அக்.15– மதுரை மாவட்டம் அழகர்கோவில் உள்ள கள்ளழகர் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிவாரவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்து மாலை வரை சுவாமி தரிசனம் செய்தனர். இதில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேதே கள்ளழகர் என்ற சுந்தரராச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதைபோலவே இக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம், பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் துளசி, மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வண்ண […]

ஆஞ்சநேயருக்கு பஞ்சமுக தங்க கவச சிறப்பு அலங்காரம்

ஆஞ்சநேயருக்கு பஞ்சமுக தங்க கவச சிறப்பு அலங்காரம்

சின்னாளபட்டி, அக்.14– புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சின்னாளபட்டி ஸ்ரீ அஞ்சலிவரத ஆஞ்சநேயருக்கு பஞ்சமுக தங்க கவச சிறப்பு அலங்காரம் செய்திருந்தினர். 10 மணி நேரம்செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தை கோவில் குருக்கள் ஸ்ரீசுந்தரராஜ பட்டாச்சாரியார், பிரத்யுனன் பட்டாச்சாரியார் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ளது ஸ்ரீ அஞ்சலிவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் 16அடி உயரத்தில் நின்ற நிலையில் தன்னை வணங்க வரும் பக்தர்களை வணங்குவது போல் சிலை அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்தியாவிலேயே இக் கோவிலில் […]

விருதுபெற்ற கோவில் பணியாளர்களுக்கு அமைச்சர்கள் பாராட்டு

விருதுபெற்ற கோவில் பணியாளர்களுக்கு அமைச்சர்கள் பாராட்டு

மதுரை, அக். 14– தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேசிய அளவில் விருதுபெற்றதையடுத்து கோவில் பணியாளர்களுக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமசந்திரன் ஆகியோர் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விருதுபெற்றதையடுத்து கோவில் பணியாளர்களுக்கு பாராட்டு விழா கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து […]

மயிலை ஷீரடி சாய்பாபா கோவிலில் 24 மணி நேரமும் 100 நாள் ஒலிக்கும் ‘‘ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜயஜய சாயி’’

மயிலை ஷீரடி சாய்பாபா கோவிலில் 24 மணி நேரமும்  100 நாள் ஒலிக்கும் ‘‘ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜயஜய சாயி’’

சென்னை, அக். 13– ஷீரடி சாய்பாபாவின் மகா சமாதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உலகில் முதன் முறையாக 100 நாட்கள் தொடர்ந்து ‘‘நாம சதாப்கம் யக்ஞம்’’ நிகழ்ச்சியை அகில இந்திய சாய் சமாஜம் நிர்வாகிகள் தங்கராஜ் (செயலாளர்), செல்வராஜ் (பொருளாளர்) நடத்துகிறார்கள். உலகிலேயே முதன்முறையாக 100 நாட்கள் 24 மணிநேரமும் இடைவெளியின்றி தொடர்ந்து பாபாவின் தாரக மந்திரமான ‘‘ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜயஜய சாயி’’ என்ற ஒலி ஒலித்துக் கொண்டேயிருக்கும். இம்மாதம் 15ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) […]

கள்ளழகர் பெருமாளுக்கு வர்ணக் குடை சாத்தும் விழா

கள்ளழகர் பெருமாளுக்கு  வர்ணக் குடை சாத்தும் விழா

அழகர்கோவில், அக்.10– கள்ளழகர் பெருமாளுக்கு வர்ணக் குடை சாத்தும் விழா நடைபெற்றது. அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் பெருமாளுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக மேளதாளம் முழங்க மதுரை நவநீதகண்ணன் பஜனைக் கூடம் சார்பில் வர்ணக்குடை எடுத்து வந்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதி முன்பாக கருட வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளினார். பின்னர் நூபுரகங்கை தீர்த்தம், துளசிமாலை உள்ளிட்ட மாலைகளால் சுவாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட வர்ணக்குடை பெருமாளுக்கு சாத்தப்பட்டது. ஏராளமான […]

குட்லாடம்பட்டியில் தாடகை நாச்சியம்மன் கோயில் திருவிழா;

குட்லாடம்பட்டியில் தாடகை நாச்சியம்மன் கோயில் திருவிழா;

வாடிப்பட்டி, அக்.10– வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் தாடகை நாச்சியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அம்மன் 7 உருவங்களில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குட்லாடம்பட்டி பஞ்சாயத்தில் இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலையின் மீது வனப்பகுதியில் பழமையும் பெருமையும் வாய்ந்த தாடகைநாச்சியம்மன்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத உற்சவ விழா நடப்பது வழக்கம் அது போல் இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. செம்மினிப்பட்டியிலிருந்து தாடகைநாச்சியம்மன் 7 உருவங்களில் சிகப்புகலர் பாடருடன் […]

1 2 3 18