பிள்ளையார்!

பல்லவி எங்குமே இருந்திடுவார்! எதையுமே கொடுத்திடுவார்! எல்லாமே அறிந்திடுவார்! அவர்தான் பிள்ளையார்!! எங்குமே…….. அனுபல்லவி அவனிக்கே அதிபதி! அனைத்திற்கும் அந்தாதி! அருளுகின்ற குணநிதி! அவர்தான் கணபதி!! எங்குமே……. சரணங்கள் அகிலத்தின் ஈசனவன்! அன்பருக்குத் தாசனவன்! அள்ளித்தரும் ராசனவன்! அவர்தான் கணேசன்!! அம்மையப்பனே உலகம்! ஆனைமுகமே உருவம்! ஆறுமுகன் சோதரர்! அவர்தான் விநாயகர்!! எங்குமே……… காத்தருளும் கஜமுகன்! கனிவுமிக்கக் கரிமுகன்! வினைதீர்க்கும் தந்தமுகன்! வெற்றிதரும் வேழமுகன்!! கேட்டதைக் கொடுப்பவன்! கேட்டினைத் தடுப்பவன்! துணைவந்து காப்பவன்! துயர் போக்கும் தும்பிக்கையன்!! […]

அன்புக்கு வானமே எல்லை!

அன்புக்கு வானமே எல்லை! 1. அன்பு காட்டும் இதயத்திற்கு ஈடெதுவும் இல்லை! – என்றும் ஆசை கொண்ட மனிதருக்கோ வாழ்வே தொல்லை!! இன்பம் என்பது கேளிக்கையின் போலியில் இல்லை! – அது ஈடில்லாத நட்பு பாசம் அன்றி வேறில்லை!! 2. உள்ளம் என்பது உள்ள வரையில் உயர்வு தாழ்வு இல்லை! – எந்த ஊறு எங்கு தாக்கிடினும் கவலை தேவையில்லை!! எளிமை நேர்மை தூய்மைதான் இனிமையின் எல்லை! – புத்தன் ஏசு காந்தி அல்லா சொன்னது அன்பின் […]

இன்று எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு தினம்

1. இசைத்தேன் வழங்கும் அமுதசுரபி! – இசை இசைந்தே கொட்டும் இசை அருவி!! இசைவானில் பூத்திட்ட முழுமதி! – அவர் இசைவாணி எம்.எஸ். சுப்புலட்சுமி!! 2. சங்கீத உலகின் நட்சத்திரம்! – அவர் சபையேறினால் நிகழும் விசித்திரம்!! சரிகமபதநி எனும் ஏழு ஸ்வரம்!– அதில் சாகஸம் நிகழ்த்தும் பொற்சித்திரம்!! 3. பத்தாம் வயதில் எச்எம்வியில் பாடினார்!–தன் பதினேழாம் வயதில் அரங்கேற்றம் சூடினார்!! முத்தாய்மணியாய்க் கச்சேரிகள் நிகழ்த்தினார்!– இசைக் கொத்தாய் அவைகளை வழங்கினார்!! 4. கர்நாடக இசையின் மேதை!–அவர் […]

நாளை மனித உரிமைகள் தினம்

நாளை மனித உரிமைகள் தினம் 1. மனிதர்கள் அனைவரும் சமமே! அனைவருக்கும் அனைத்திலும் பங்கிருக்க வேண்டும்! அதுதான் மனித உரிமை!! எங்கே வாழ்ந்தாலும் எப்படி இருந்தாலும் எல்லோர்க்கும் உரிமை உண்டு அதுதான் மனித உரிமை!! 2. தெருவில் செல்வதற்கும் கல்வி கற்பதற்கும் பணி ஆற்றுவதற்கும் போக்குவரத்துப் பயணத்திற்கும் வாக்குரிமைச் செலுத்துவதற்கும் சமுதாய உறவுக்கும் எல்லோரும் உரிமையுடன் கலந்து கொள்ளலாம்; அதுதான் மனித உரிமை! 3. முன்னேற்றம் காண்பதற்கும் முடியாத பேர்களுக்கும் பெண்கள், குழந்தைகள் சிறுபான்மை சமூகத்தினர் அனைவருக்கும் […]

சக்கரை

“தணிகாசலத்திற்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. “உஷ்… உஷ்….என்று மூச்சை உள்ளேயும் வெளியேயும் இழுத்து விட்டுக் கொண்டிருந்தார். “சுகர் சாப்பிடாதீங்க  சாப்பிடாதீங்கன்னு சொன்னோம் கேட்டீங்களா? இப்பப் பாரு எப்படி அவஸ்தைப்படுறோம்னு . நீங்க பாட்டு எச்சிக்கலந்தனமா சாப்பிட்டுட்டு போயிருவீங்க யாருகஷ்டப்படுறது என்று கொஞ்சம் கோபம் தூக்கலாகவே பதில் சொன்னாள் கோமதி – தணிகாசலத்தின் மனைவி. ஏய்… பிரச்சின ஆரம்பிக்கும் போதே சொல்லணும் .இப்ப போயி சொல்லி என்ன பிரயோசனம் .சக்கர உப்புன்னு சொல்லிட்டு “என கடுமையாகத் திட்டினான் […]

முருகன் வழிகாட்டும் ஒளி!

முருகன் வழிகாட்டும் ஒளி! பல்லவி ஓங்காரமே இனிய ரீங்காரமே! – அது உயர்வான வாழ்வுக்கு உபகாரமே!! ஓங்காரமே……. அனுபல்லவி ஆங்காரமே நீக்கும் பரிகாரமே! – என்றும் ஆனந்தம் கொடுக்கும் கந்தன் அலங்காரமே!! ஓங்காரமே……. சரணங்கள் தாங்காதது என்றும் மனபாரமே! – அதைத் தகர்த்திடுமே முருகன் சிருங்காரமே!! அகங்காரமே அழிவின் ஆரம்பமே! – அதை அண்டாமல் செய்வதவன் அருளாகுமே!! ஓங்காரமே…… நீங்காதது என்றும் நிழலாகுமே! – முருகன் நினைவொன்றே தானெங்கும் துணையாகுமே!! பாங்கா அணைக்கின்ற தாயாகுமே! – என் […]

இன்று கொடி நாள்

இன்று கொடி நாள் நாட்டைக் காக்கும் வீரர்களைப் பெருமைப்படுத்தும் தினம்! – வீரர்கள் வீட்டைக் காக்கும் பணிக்காக உதவி செய்யும் தினம்!! முப்படை வீரர்கள் அனைவரையும் – அவர்கள் எப்பொழுதும் மகிழ வைக்கும் தினம்! – அவர்கள் மூவண்ணக் கொடிபோல் இதனையும் கொண்டாடி மகிழும் தினம்!! கொடி நாளன்று கொடிகள் வாங்கி நாட்டுக்கு உதவிடுவோம்! – அந்தக் கொடிகளை வாங்கி நாட்டைக் காக்கும் படைகளை நினைத்திடுவோம்!! ஓய்வுக்குப் பின்பும் வீரர்களை நாம் ஒன்றாக இணைத்திடுவோம்! – அவர்கள் […]

அம்பேத்கர் நினைவு தினம்

அம்பேத்கர் நினைவு தினம்

அம்பேத்கர் நினைவு தினம் 1. அரசியல் சாசனத் தந்தை! சட்ட மேதை !! சமூக சீர்த்திருத்தவாதி! பொருளியல் சமத்துவ போராளி !! சுதந்திரப் போராட்டத் தியாகி!! உயர்கல்வி கற்பதற்கு அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்! உன்னத ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதிய பேரறிஞர்!! 2. எழுச்சியூட்டும் சிந்தனையாளர்! எதற்கம் அஞ்சாத எழுத்தாளர்!! புரட்சிமிக்கப் பேச்சாளர்! பொய்மை அறியா நெறியாளர்!! வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றவர்! வாக்குரிமை அனைவரும் பெறச்செய்தவர்!! காந்தியப் பாதையில் நடைபோட்டவர்!! 3. தீண்டாமை ஒழிப்பைச் சட்டமாக்கியவர்!! […]

இன்று டாக்டர் ஜெயலலிதா நினைவு நாள்

*   சந்தனப் பேழையிலே – ஒரு சரித்திரம் மறைஞ்சது! – அந்த சரித்திரம் நினைக்கையிலே – நம்ப நெஞ்சே உறைஞ்சது!! சந்தியா குலமகளாய் – அம்மா பிறப்பு எடுத்தாங்க! – நம் இந்தியத் திருமகளாய் – அம்மா மரணம் அடைஞ்சாங்க!! * தங்கத் தாரகையாய் – அம்மா திரையிலே ஜொலிச்சாங்க! – அவுங்க எம்.ஜி.ஆர். சொல்கேட்டுத் – தமிழக அரசியலில் தடம் பதிச்சாங்க!! கடமையில் இரும்பாக – அம்மா அரும்பணி செய்தாங்க! – கருணையில் கரும்பாக – […]

இன்று இந்திய கடற்படை தினம்

இன்று இந்திய கடற்படை தினம்

இன்று இந்திய கடற்படை தினம் 1. வலிமை மிக்க படை! – அது கடற்கரை காவல் படை!! கடமை மிக்க படை! – நம்மைக் காக்கும் கடற் படை!! நமது படையின் பெருமை! – அது ஆற்றும் பணியின் அருமை! நாடு உணர்தல் முக்கியம்! – அது டிசம்பர் நான்கின் வாக்கியம்!! 2. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தொன்று – அன்று டிசம்பர் நான்காம் நாள்! இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது–அந்த நாளே கடற்படை நாளானது!! முன்னின்று தாக்கும் […]

1 2 3 15