வசந்தம் வரும் வழி

வசந்தம்!… பருவத்தில் வருவதைவிட வாழ்க்கையில் வரவேண்டும்! இரக்கம்!… பாசாங்கில் வருவதை விட இதயத்தில் வரவேண்டும்! அன்பு!… வார்த்தையில் வருவதைவிட பண்பில் வரவேண்டும்! பாசம்! … வசனத்தில் வருவதைவிட கண்களால் வரவேண்டும்! வைராக்யம்!… நடிப்பில் வருவதைவிட நேர்மையில் வரவேண்டும்! செல்வம்!… அதிர்ஷ்டத்தில் வருவதைவிட உழைப்பில் வரவேண்டும்! நட்பு!… உதட்டில் வருவதைவிட உதவுவதில் வரவேண்டும்! காதல்!… மயக்கத்தில் வருவதைவிட மனதில் வரவேண்டும்! கவிதை!… சுகத்தில் வருவதைவிட! அகத்தில் வரவேண்டும்!

சித்தி விநாயகர் பற்றிய பாடல் அடையாறு சித்தி விநாயகர்

சென்னை, அடையாறு, அனந்த பத்மநாபன் கோயிலில் உள்ள இஷ்ட 1. அடையாறு இஷ்டசித்தி விநாயகர் சன்னிதி! – அது கஷ்டங்களை நீக்கித்தரும் நிம்மதி!! எட்டுத் திக்கும் ஆளுகின்ற கஜபதி! – அவர் அனந்த பத்மநாபன் கோயிலில் உள்ள புஜபதி!! 2.முன்னரங்கில் வீற்றிருக்கும் முழுமதி! – அவரை முதலில் தொழுது செல்பவர்க்கு வளர்மதி!! ஆனந்தம் அள்ளிக் கொடுக்கும் எழில்மதி! – அது அனந்த பத்மநாபன் கோயிலில் உள்ள சன்னிதி!! 3. ஞாலம் முழுதும் ஆளுகின்ற அதிபதி! – அவர் […]

மாங்காடு காமாட்சியம்மன்

1. மாங்காடு கோயிலுக்குச் செல்லு! – அங்கு காமாட்சி அம்மன்முன்பு நில்லு!! அன்போடு பண்போடு சொல்லு!– அவள் அருளாலே நினைத்ததெல்லாம் வெல்லு!! 2. சிவனை வேண்டித் தவமிருந்தாள் பார்வதி! – அந்தத் திருக்கோலம் கொண்டதிந்தச் சன்னிதி!! காஞ்சி சென்று சிவனை மணந்ததங்கே! கல்யாணத் தடை நீங்கும் இங்கே!! 3.தாங்கவொண்ணாத் துன்பங்கள் நீங்கும்! – இன்பம் தளிர்க்கொடிபோல் குடும்பத்திலே ஓங்கும்!! மாங்காடு காமாட்சியின் தரிசனம்! – அதைக் காண்பதுதான் நாம் செய்த புண்ணியம்!! கவிஞர் எஸ்.ராமகிருஷ்ணன் (சிறுமுகை)

ஆனைமலை மாசாணி அம்மன் பல்லவி

1. ஆனைமலை மாசாணி ஆத்தா – அவ அருள்மிகுந்த கண்ணால பார்த்தா அல்லலெல்லாம் பறந்து போகும் ! – தன் அன்பருக்கு உதவிடுவாள் !! 2. அண்ணாந்து படுத்திருப்பா ஆத்தா! – அவ முன்னாடி போயிநின்னு பாத்தா என்னான்னு நம்பகிட்ட கேட்பா! – நாம எதை நினைச்சுக் கேட்டாலும் கொடுப்பா!! 3. மிகுதியாக வீண்பகைகள் வந்தா – அபரி மிதமாகத் தொல்லைகள் தந்தா மிளகாயை பக்தியோடு அரைச்சா போதும் மிச்சமெல்லாம் அவபார்த்துச் செய்வா! 4. குழப்பமெல்லாம் நீக்கிட […]

முயற்சி செய் – முடியாதது இல்லை

முயற்சி செய்தா பலன் கிடைக்கும் உறுதி தம்பி! – நல்லா பயிற்சி செய்தா பயன்கொடுக்கும் உண்மை தம்பி!! உயர்ந்த இடத்தைப் பிடிப்பதற்குக் கஷ்டப்படணும் தம்பி! – நாளும் கஷ்டப்பட்டு உழைப்பதற்கு இஷ்டப்படணும் தம்பி!! முயன்றால் முடியாதது இல்லை தம்பி! – உன் முயற்சிக்கு வந்திடும்பல தொல்லை தம்பி!! தளரா மனமிருந்தால் வெல்லலாம் தம்பி! – உன் தோல்விகள் வெற்றியாகும் ஒருநாள் தம்பி!! முயற்சி திருவினை ஆக்கும் தம்பி! – நம் திருவள்ளுவர் சொன்ன நல்வாக்கு தம்பி!! அயர்ச்சி […]

சிவன்

நமசிவாய நமசிவாய என்று சொல்லுங்கள்! அதைச்சொல்லச் சொல்ல நன்மை சேரும் உணர்ந்து கொள்ளுங்கள்!! பஞ்சாட்சரம் என்கின்ற மந்திரம் அது! – அதில் பரமசிவன் திருநாம மகிமை உள்ளது!! *** அடியார்கள் இதைச்சொல்லி மனம் மகிழ்ந்தார்கள்! – சிவனை அழகாகத் தமிழில் பாடி மகிழ வைத்தார்கள்!! அவனன்றி அணுவுமில்லை எனப் புகழ்ந்தார்கள்! – சிவன் அருள்வேண்டி நமசிவாய நாமம் சொன்னார்கள்!! சக்திமிகுந்த பொருளாகும் நமசிவாயம்! சைவ சமய அருளாகும் நமசிவாயம்!! *** சொல்லச் சொல்ல வாய் மணக்கும் சொல்லிப் […]

சுத்தம் சுகம் தரும்

சுத்தமாக இருக்க வேணும் சுற்றுப்புறச் சூழல்! – அது சுகம் கொடுத்து நலமளிக்கும் சொர்க்கத்தின் வாசல்!! எத்தனைமுறை பார்த்தாலும் கவனத்தை ஈர்க்கும்! – சுற்றம் எழிலாக இருந்தால்தான் கவலைகளைத் தீர்க்கும்!! *** புகை கிளம்ப வாகனங்கள் ஓட்டக் கூடாது! – நல்ல புனிதமான இடங்கள் தன்மை இழக்கக் கூடாது!! பசுமையான வளங்களையோ தகர்க்கக் கூடாது! – நல்ல பலன்கொடுக்கும் மரம் வளர்க்கத் தவறக் கூடாது!! *** கழிவுநீரு வீட்டைச்சுத்தித் தேங்கக் கூடாது! – நாம கண்ட இடத்தில் […]

குழலூதும் கண்ணன்

வா கண்ணா வா கண்ணா விளையாடவா! – புது வண்ணமலர் புன்னகையின் கலையோடு வா!! வா கண்ணா வா கண்ணா குழலெடுத்து நீ இசைத்தால் குதூகலம் வா! – உன் நிழலிருக்கும் இடங்கள் எல்லாம் கோலகலம் வா!! வா கண்ணா வா கண்ணா பாண்டவர்க்குத் துணையாக இருந்தவனே வா! – அன்று பாஞ்சாலியின் துயர்துடைத்தப் பரந்தாமா வா!! பாரதத்தின் போர் முடித்தச் சங்கொலியே வா! – அங்கு பார்த்தனுக்கு கீதை சொன்ன பரம்பொருளே வா!! வா கண்ணா […]

இன்று பெரியார் பிறந்த நாள்

பகுத்தறிவுப் பகலவன் ஈடில்லா மாமனிதர் புரட்சிகரமான பத்திரிகை ஆசிரியர் ஈரோட்டுச் சிங்கம் மனிதனைச் சுயமரியாதையுடன் சிந்திக்க வைத்த மேதை எண்ணில் அடங்கா சீர்திருத்தங்கள் செய்த செயல் வீரர் ஈ.வெ. ராமசாமிப் பெரியார்! பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தவர் சுயமரியாதையை எடுத்துரைத்தவர் கள்ளுக்கடையை ஒழிக்க காந்தி அடிகளின் அறிவுரைப்படி போட்டம் நடத்திய தீரர் கள்இறக்க விட்டிருந்த தன்வீட்டுத் தென்னந்தோப்பின் மரங்களை வெட்டி வீழ்த்திய கொள்கை வீரர் ஒடுக்கப்பட்ட மக்கள் சமுதாயத் தெருக்களுக்குள் சுதந்திரமாக நடமாடப் போராட்டம் நடத்திய வைக்கம் வீரர் […]

இன்று எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த நாள்

இசை உலக மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐக்கிய நாடுகள் சபையில் தமிழில் பாடிய இசைவாணி! அண்ணல் காந்தி விரும்பிய பஜகோவிந்தம் பாடிய இசைத் தேனீ எம்.எஸ்.சுப்புலட்சுமி!! *** தனக்கு என்று வகுத்தார் ஒரு பாதை! தன் இன்குரலால் உலகை ஈர்த்த மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி!! *** அரங்கம் ஏறி பாடத் துவங்கிவிட்டால் மயக்கும் ஞானி! – இந்த அவனி போற்ற பாடிய கலைவாணி எம்.எஸ்.சுப்புலட்சுமி!! *** தாய்நாட்டுக்குப் பெருமை சேர்த்தது இவரது பண்பின் சிறப்பு! – நம் தமிழ்நாட்டுக்குப் பெருமை […]

1 2 3 7