வக்பு வாரிய கல்லூரியில் உலக நுகர்வோர் தின கருத்தரங்கு

வக்பு வாரிய கல்லூரியில் உலக நுகர்வோர் தின கருத்தரங்கு

மதுரை,மார்ச்.20– மதுரை முகையத் ஷா சாகுரோ வக்பு வாரியக் கல்லூரி மற்றும் தங்கப்பல் அழகர்சாமி லெட்சுமி அம்மாள் சமூக நல விழிப்புணர்வு மையம் இணைந்து “சட்ட கல்வியறிவு விழிப்புணர்வு முகாம் மற்றும் உலக நுகர்வோர் உரிமை பாதுகாப்பு தினம் –2018” என்ற கருத்தரங்கை நடத்தியது. தமிழ்நாடு காந்திமன்ற இயக்க மாநகர் தலைவர் அழ.சிதம்பரம் வரவேற்புரை நிகழ்த்தினர். வக்பு வாரியக் கல்லூரிச் செயலாளர் மற்றும் தாளாளர் என்.ஜாமல் மொய்தீன் தலைமை வகித்து பேசினார். வக்பு வாரியக் கல்லூரி முதல்வர் […]

திருட்டு வாகனத்தை கண்டறிய புதிய கருவி: மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

திருட்டு வாகனத்தை கண்டறிய  புதிய கருவி: மயிலம் பொறியியல்  கல்லூரி மாணவர்கள் சாதனை

விழுப்புரம்,மார்ச்.17- திருட்டை கண்டுபிடிக்கும் நவீன கருவியை விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் செல்வன், தங்கபாண்டியன், ராமு மற்றும் சுதாகர் ஆகியோர் இணைந்து வாகன குறைந்த செலவில் வடிவமைத்துள்ளனர். இன்றைய காலத்தில் வாகனங்களை திருடிச்செல்வது என்பது வழக்கமாகிவிட்டது, இதனை தடுக்கும் விதத்திலும் திருடிச்சென்ற வாகனத்தை மேலும் இயங்காத வகையிலும் வாகனம் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறியவும் இந்த நவீன கருவி உதவுகிறது. வாகனம் திருடிச்சென்று விட்டதையையும் […]

வெஸ்டர்ன் காட்ஸ் சர்வதேச பள்ளியில் கல்வி கண்காட்சி

வெஸ்டர்ன் காட்ஸ் சர்வதேச  பள்ளியில் கல்வி கண்காட்சி

த வெஸ்டர்ன் காட்ஸ் சர்வதேச பள்ளியில், கல்வி கண்காட்சி நடைபெற்றது. கோவை த வெஸ்டர்ன் காட்ஸ் சர்வதேச பள்ளியில், ‘வின்பினிட்டி’ என்ற தலைப்பில், கல்வி கண்காட்சி நடைபெற்றது. பள்ளி செயலர் சசிக்குமார் தலைமை வகித்தார். இந்திய ராணுவ மேஜர் டி.கே.சிங் மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களே சிறப்பு விருந்தினர்களாக, கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தனர். மாணவன் ஏரோன் டைட்டஸ் வரவேற்று பேசினார்.மாண்டிஸோரி கல்வி முறையை, பிரத்யேக உபகரணங்கள் கொண்டு, நர்சரி வகுப்பு குழந்தைகள் முதல், 6ம் வகுப்பு […]

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் வேலை வாய்ப்புகள் குறித்த கண்காட்சி

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில்   வேலை வாய்ப்புகள் குறித்த கண்காட்சி

கோவை குனியமுத்தூரில் உள்ள, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, எஸ்ஏயி அமைப்பு இணைந்து, ” இந்திய பாதுகாப்பு துறையில்” உள்ள வேலைவாய்ப்பு குறித்த கண்காட்சியினை, “ஆயுதா 18” என்றும் பெயரில், கல்லூரியில் உள்ள, ஸ்ரீ கிருஷ்ணா கலையரங்கத்தில் நடத்தியது. கண்காட்சியினை, இந்திய ராணுவத்தின் கர்னல் சமீர் அரோரா, கப்பல் படையின் கேப்டன் அமுதகுமார், விமானப்படையின் குரூப் தலைவர் வேணுகோபால் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, தொடங்கி வைத்தனர். இதில், 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் […]

காருண்யா நிகர்நிலை பல்கலையில் தேசிய தொழில்நுட்ப கலைவிழா

காருண்யா நிகர்நிலை பல்கலையில்  தேசிய தொழில்நுட்ப கலைவிழா

கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, தேசிய தொழில்நுட்ப கலைவிழாவில், நிலவொளியிலிருந்து மின்சாசரம் உள்ளிட்ட மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில், ‘மைன்ட்கிராப்ட்’ எனும், தேசிய தொழில்நுட்ப கலை விழா நடைபெற்றது. விழாவில், பாலக்காடு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் சுனில்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மனித குலத்தின் தேடலை பொருத்துதான், இந்த பிரபஞ்சத்தில் உள்ளவற்றை புரிந்துக்கொள்ள முடியும் […]

எஸ்.பாறைபட்டி பள்ளியில் பொது அறிவு மன்றம் துவக்கம்

எஸ்.பாறைபட்டி பள்ளியில்  பொது அறிவு மன்றம் துவக்கம்

சின்னாளபட்டி, மார்ச்.17– செம்பட்டி எஸ்.பாறைபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொதுஅறிவு மன்றம் துவக்கவிழா நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற பொது அறிவு வினாடிவினா போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் தேவஆரோக்கியதாஸ், பள்ளி தலைமை ஆசிரியை மேரி ஜீலியானா பரிசுகளை வழங்கினார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் மன்றம் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு ஆத்தூர் ஒன்றிய […]

சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் சென்னையில் ரத்ததான முகாம்

சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் சென்னையில் ரத்ததான முகாம்

22 ரத்த வங்கிகள் 2027 யூனிட் ரத்தம் திரட்டின சென்னை, மார்ச் 15– மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 19வது ரத்த தான சிறப்பு முகாம் நடைபெற்றதில் சாய் ராம் குழு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்களும், ஆசிரி்யர்களும் கலந்து கொண்டு ரத்தானம் செய்தனர். சாய்ராம் கல்வி குழும நிறுவனங்களின் முதல்வர்கள் சி.வி.ஜெயக்குமார், கே.பழனிச்சாமி சிம்ஸ் டைரக்டர் கே.மாறன் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ குழுக்களையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்தினர். சாய் ராம் கல்வி நிறுவனங்களி்ன தலைமை நிர்வாக […]

சின்னாளபட்டியில் ஆர்வமுடன் தேர்வு எழுதிய 10 ம் வகுப்பு மாணவர்கள்

சின்னாளபட்டியில் ஆர்வமுடன் தேர்வு எழுதிய 10 ம் வகுப்பு  மாணவர்கள்

சின்னாளபட்டி, மார்ச்.16– சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்வகுப்பு தேர்வு எழுதிய பள்ளி மாணவ மாணவியர்களுடன் அருகில் உள்ள முருகன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 156 பேர் தேர்வு எழுதினார்கள். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு மையத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் அருகில் உள்ள முருகன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் திண்டுக்கல், […]

மதுரை கல்லூரியில் புலரி –18 கலை விழா

மதுரை கல்லூரியில் புலரி –18 கலை விழா

மதுரை,மார்ச்.15– மதுரையில் 128 ஆண்டுகளாகக் கல்விப் பணியாற்றி வரும் மதுரைக் கல்லூரியில் புலரி –18 கலை விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரிச் செயலாளர் ஆடிட்டர் எஸ்.நடனகோபால் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.சுரேஷ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.ரத்தினகுமார் அறிக்கை வாசித்தார். மாணவ மாணவியரின் பன்முகக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துணைத் தலைவர் விஸ்வாஸ் எஸ்.சீத்தாராமன், பொருளாளர் என்.ஆனந்த சீனிவாசன், சுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர் கே.எம்.ராஜசேகரன், துணைமுதல்வர் முனைவர் கே.முத்துவேல், […]

மதுரை பாத்திமா கல்லூரியில் 42–வது பட்டமளிப்பு விழா

மதுரை பாத்திமா கல்லூரியில் 42–வது பட்டமளிப்பு விழா

மதுரை, மார்ச்.11– மதுரை பாத்திமா கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில், ஆயிரத்து 492 மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மதுரை பாத்திமா கல்லூரியில் 42–வது பட்டமளிப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தேசிய மதிப்பீட்டுக்குழுவின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.பொன்முடிராஜ் தலைமை வகித்து மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:– பட்டம் பெற்றதோடு கல்வி கற்பது நின்று விடுவதில்லை. சமூக மேம்பாட்டுக்காக மாணவியர் உழைக்க முன்வர வேண்டும். கிராமப் புறங்களுக்கு நகரங்களில் உள்ளது போன்ற வசதிகள் கிடைக்க பாடுபட […]

1 2 3 28