சென்னையில் ரஷ்ய இளம் அழகிகளின் பாலே–ஜிம்னாஸ்டிக் விருந்து: வியப்பில் ஆழ்ந்த பார்வையாளர்கள்

சென்னை, ஜன. 23– சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ரஷ்ய இளம் அழகிகள் பங்கேற்ற மாபெரும் ரஷ்ய பாலே நடனம்– அக்ரோபாட்டிக்ஸ்– ஜிம்னாஸ்டிக்ஸ் நிகழ்ச்சி நேற்று மாலை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்திய ரஷ்ய கலாச்சார– நட்புறவுக் கழகமும், ரஷ்ய கலாச்சார மையமும் இணைந்து இந்த பாலே நடன விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. தென் இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக கான்சல் ஜெனரல் டாக்டர் செர்கீ எல். கோட்டோவின் வாழ்த்துக்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய ரஷ்ய […]

டிரினிட்டி ஆர்ட்ஸ் கலை விழா 2 ஆம் நாள் நிகழ்ச்சி பார்வையாளர்களை மகுடிமுன் பாம்பாக்கிய “கொன்னக்கோல்” வி.வி.எஸ்.மணியன்

சென்னை, டிச.28 – ‘மக்கள் குரல்’, ‘டிரினிட்டி மிரர்’ இணைந்து நடத்தும் “டிரினிட்டி ஆர்ட்ஸ் பெஸ்ட்டிவெல் ஆப் இந்தியா” மூன்றாம் ஆண்டு கலைவிழா நேற்று முன்தினம் அடையார் குமாரி ராணி மீனா முத்தையா கல்லூரி அரங்கில் கோலகலமாக துவங்கியது. இவ்விழாவின் 2வது நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாலை 4.30 மணியளவில் வி.வி.எஸ் மணியன், அவரது மாணவர்கள் குழுவினருடன் சேர்ந்து நடத்திய “கொன்னக்கோல்” என்கிற வாய்த்தாளம் கச்சேரி நடந்தது. “கொன்னக்கோல்” எனும் கலை மீது இக்கால மக்களிடம் […]

‘மக்கள் குரல்–டிரினிட்டி மிரர்’ இணைந்து சென்னையில் 3–ம் ஆண்டு ‘டிரினிட்டி கலை விழா’: நாட்டிய மேதை வைஜெயந்தி மாலா துவக்கினார்

சென்னை, டிச. 27– ‘மக்கள் குரல்–டிரினிட்டி மிரர்’ இணைந்து வழங்கும் ‘டிரினிட்டி ஆர்ட்ஸ் பெஸ்ட்டிவெல் ஆப் இந்தியா’ 3–ம் ஆண்டு கலை விழா வழக்கமான எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் அடையாறில் உள்ள  குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று மாலை குதூகலமாகத் துவங்கியது. பிரபல நாட்டிய மேதையும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் வைஜெயந்தி மாலா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இசை– கலை விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றினார். பிரபல பரத நாட்டியக் கலைஞர் ஊர்மிளா […]

லஷ்மன் ஸ்ருதி குழுவினர் அமெரிக்காவில் தொடர் இசை நிகழ்ச்சி

சென்னை, செப். 30– கலாலயா யு.எஸ்.ஏ சார்பாக லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு அக்டோபர்  3–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை வட அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர். பின்னணிப் பாடகர்கள் மற்றும் விஜய் தொலைக்காட்சி புகழ் சூப்பர் சிங்கர்ஸ்  ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.   3–ந்தேதி ஆஸ்டின் நகரில் தொடங்கும் இசை நிகழ்ச்சி 26–ந் தேதி வாஷிங்டன் நகரில் நிறைவடைகிறது. இது சம்பந்தமாக லஷ்மன் ஸ்ருதி குழுவின் இயக்குனர் லஷ்மன் கூறுகையில், பலமுறை […]

9 வயது சிறுவனின் வயலின் கச்சேரி

சென்னை, ஜன.8– 9 வயது சிறுவன் ரிஷப் ரங்கநாதனின் வயலின் கச்சேரி  திருவான்மியூர் ஹரே கிருஷ்ணா அரங்கத்தில் நடைபெற்றது. கர்னாடிகா, பார்த்தசாரதி சுவாமி சபா மற்றும் க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை குழுவினர் இணைந்து வழங்கிய ‘உலக கலாச்சார இசை விழாவில்’, 9 வயது சிறுவன் ரிஷப் ரங்கநாதனின் வயலின் கச்சேரி நடந்தது. அமெரிக்கா கலிபோர்னியாவை சேர்ந்த அஜய் கோபி மிருதங்கம் வாசித்தார். தோடி ராக வர்ணத்துடன் கச்சேரியை தொடங்கிய ரிஷப், சதுஸ்ரம் மற்றும் திஸ்ர நடைகளில் வர்ணத்தை […]

கைதிகளுக்கு விடுதலை; ரசிகர்களுக்கு சிறை: சுதா ரகுநாதனின் வெற்றி ரகசியம் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆர்.நட்ராஜ் புகழாரம்

சென்னை, ஜன.4- பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பத்மஸ்ரீ சுதாரகுநாதனுக்கு டிரினிட்டி இந்தியக்கலைவிழா- 2012-ல் ‘இசைப்பேரரசி’ பட்டம் வழங்கப் பட்டது. அதனை தமிழ்நாடு அரசுக் தேர்வாணைக் குழுவின் தலைவர் ஆர்.நட்ராஜ் வழங்கி வாழ்த்தினார். இதேபோல கலிபோர்னியாவில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் தமிழரான இசைக் கலைஞர் ஆஷா ரமேஷுக்கு ‘இசை அரசி’ பட்டத்தை திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் மீனா வழங்கினார். ‘மக்கள் குரல் – டிரினிட்டி மிரர்’ ஆசிரியர் ஆர்.முத்துகுமாரைத் தலைவராகவும், முரளிராகவனை ஒருங்கிணைப்பாளராகவும் […]

சுதா ரகுநாதன் பாடலுக்கு பரதம் – யோகா கலந்து குழந்தைகள் நடத்திய புதுமை நிகழ்ச்சி

சென்னை, ஜன.4- யூனித் கிட்ஸ் பிளே ஹோம் அண்ட் யோகா சென்டர் பள்ளியின் மாணவ மாணவியர், சுதா ரகுநாதன் பாடிய ‘போ சம்போ’ பாடலுக்கு பரத நாட்டியம் மற்றும் யோகா நிகழ்ச்சியை சுதா ரகுநாதன் முன்னிலையில் செய்து காட்டி ஏகோபித்த கரகோஷம் பெற்றனர். ஏற்கனவே மலேசியாவில் இந்த நிகழ்ச்சியை நடத்தியபோது, மொத்த பார்வையாளரும் எழுந்து நின்று கைதட்டி இந்த மாணவர்களை பாராட்டினர். ஆனால் சுதா ரகுநாதன் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை. இதற்கு […]

டிரினிட்டி இந்திய கலை விழா 2012 இசைக்கு அதிக முக்கியத்துவம் தருவது என்றும் தமிழ்மொழி மட்டுமே 5-ம் நாள் விழாவில் அபிராமி ராமனாதன் பேச்சு

சென்னை,ஜன.3- டிரினிட்டி இந்திய கலை விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்ட அபிராமி ராமனாதன், இசைக்கு அதிக முக்கியத் துவம் தருவது, என்றும் தமிழ்மொழி மட்டுமே என்று கூறினார். மார்கழி மாத இசைத் திருவிழாவை யொட்டி, சென்னையின் அனைத்து சபாக்களிலும் இசைக் கச்சேரிகள் நடைபெற்று வருகிறது. டிரினிட்டி இந்திய கலை விழா 2012-ன் சார்பாக சென்னை அடையாறில் உள்ள குமார ராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியின் விழா அரங்கில் […]

டிரினிட்டி இந்திய கலை விழா 2012 அக்கரை சகோதரிகளுக்கு ‘இசை அரசி’, ‘இசை செம்மல்’ விருது

சென்னை , ஜன. 1- ‘டிரினிட்டிஇந்திய கலை விழா 2012’ நிகழ்ச்சியில் அக்கரை சகோகதரி களுக்கு ‘இசை அரசி’, ‘இசை செம்மல் விருதை பிரபல எழுத்தாளர் கோவி மணிசேகரன் வழங்கினார். மார்கழி மாதத்தையொட்டி ஆண்டு தோறும் சென்னையில் நடைபெற்று வரும் இசை திருவிழாவில் இந்த ஆண்டு டிரினிட்டி ஆர்ட்ஸ் சார்பாக 6 நாள் இசை விருந்து அடையாறில் உள்ள குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான நேற்று […]

வித்வான் ஓ.எஸ். தியாகராஜனுக்கு விருது

டிரினிட்டி இந்திய கலைவிழாவில் இன்று காலை ‘சங்கீத சூடாமணி’ வித்வான் ஓ.எஸ். தியாகராஜனுக்கு ‘தெய்வீக இசைக்கலைஞர்’ அமரர் சீர்காழி கோவிந்தராஜனின் 80-வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது பெயரிலான விருதையும், ரொக்கப் பரிசையும் நினைவு கேடயத்தையும் பிரபல சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் வழங்கினார். சீர்காழி கோவிந்தராஜனின் மகனும், பிரபல பாடகருமான பத்மஸ்ரீ சீர்காழி டாக்டர் ஜி. சிவசிதம்பரம், இசை விழாவின் தலைவர் ‘மக்கள் குரல்’-‘டிரினிட்டி மிரர்’ ஆசிரியர் ஆர். முத்துக்குமார், கன்வீனர் முரளி ராகவன், ‘மக்கள் குரல்’ […]