எச் – 1பி விசா உள்ளவர்களுக்கு அமெரிக்க அரசு புது சலுகை

எச் – 1பி விசா உள்ளவர்களுக்கு அமெரிக்க அரசு புது சலுகை

வாஷிங்டன், டிச. 14: எச் – 1பி விசா வைத்திருப்பவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றலாம்’ என, அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, எச் – 1பி விசா வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு, 65 ஆயிரம் பேருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது.உலக அளவில் இந்த விசாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், நம் நாடு முன்னணியில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:எச் – […]

கலிபோர்னியா காட்டு தீ:

கலிபோர்னியா காட்டு தீ:

கலிபோர்னியா, டிச. 13– அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தற்போது மிகவும் பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதித்து இருக்கிறது. இந்த வருடத்தின் மிகப்பெரிய காட்டுத் தீ இதுதான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த காட்டுத் தீ இன்னும் அணையாமல் பரவிக் கொண்டே இருக்கிறது. முதலில் ஒரு காட்டுத் தீ மட்டுமே உருவானதாகவும் தற்போது நிறைய காட்டுத் தீ அந்த பகுதியில் பரவிக் கொண்டு இருப்பதாகவும் […]

ஈரான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஈரான் நாட்டில்  இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டெஹ்ரான், டிச. 13– ஈரான் நாட்டில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையொட்டி, தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஈரான் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 என்ற அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சுமார் 57 கி.மீ. ஆழத்தில் இந்த நில […]

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது 13 பேர் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது 13 பேர் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு

நியூயார்க், டிச. 13– அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது இதுவரை 13 பேர் அதிகாரப்பூர்வமாக பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த 13 பேரும் அதிபர் மீது வழக்கு தொடுத்து இருக்கின்றனர். இந்த 13 பேர் இல்லாமல் இன்னும் 4 பேர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் இன்னும் டிரம்ப் மீது வழக்கு தொடுக்கவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் பலரும் டிரம்ப்பின் இந்த மோசமான செயலுக்கு எதிராக பேசியுள்ளனர். இந்த 13 பேரும் […]

மின்சார ஸ்கூட்டர் வெடித்து 5 பேர் பலி

மின்சார ஸ்கூட்டர் வெடித்து 5 பேர் பலி

பீஜிங், டிச. 13: சீனாவின் பீஜிங் அருகே உள்ள கிராமத்தில் மின்சார ஸ்கூட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டில் இருந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனா தலைநகர் பீஜிங் அருகே உள்ள பைகியாசிங் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்த மின்சார ஸ்கூட்டரில் இருந்து இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீ வீடு முழுவதும் பரவியது. இந்த கோர விபத்தில் வீட்டில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு […]

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஈரானில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம்

டெக்ரான், டிச.13: ஈரான் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்ற விவரம் உடனடியாக […]

ஜம்மு –- ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு –- ஸ்ரீநகர்  நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு, டிச. 12– ஜம்மு- காஷ்மீரில் ஜம்முவையும் காஷ்மீரையும் இணைக்கும் முக்கிய சாலையாக ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திகழ்ந்து வருகிறது. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும். முக்கியமாக சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்லும். வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. ஜம்மு – காஷ்மீரில் இந்த வாரம் பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என்றும், பனிமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிமை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று […]

ஐகேன் நிறுவனத்திற்கு உலக அமைதிக்கான நோபல் விருது

ஐகேன் நிறுவனத்திற்கு உலக அமைதிக்கான நோபல் விருது

ஓஸ்லோ, டிச. 11– அமெரிக்கா- வட கொரியாவிற்கு இடை யிலான பிரச்சினையை குறிப்பிடும் வகையில், `காயப்பட்ட பொறாமை யால்`, உலகம் `அணுஆயுத நெருக்கடியை` சந்திக்கிறது என்று, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஐகேன் நிறுவனம் கூறியுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்ட, ஐகேனின் நிர்வாக இயக்குநரான பீட்ரைஸ் பிஹன், `மில்லியன் கணக்கான மக்களின் மரணம் என்பது ஒரு சிறிய எழுச்சிக்கான தொலைவில் தான் உள்ளது` என்று கூறினார். `நமக்கு வாய்ப்புகள் உள்ளது. அணுஆயுதங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் […]

இங்கிலாந்து,-பிரான்சில் கடும் பனிப்பொழிவு: ஜெர்மனியில் 330 விமானங்கள் ரத்து

இங்கிலாந்து,-பிரான்சில் கடும் பனிப்பொழிவு: ஜெர்மனியில் 330 விமானங்கள் ரத்து

பெர்லின்,டிச.11– பிரிட்டன் நாட்டின் சில பகுதிகளில்  கடுமையான பனிப்பொழிவு நிலவுவதையொட்டி ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான  நிலையத்தில் 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்கிவிட்டதால் வட ஐரோப்பிய நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கு  பிறகு தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மைனஸ் 0 டிகிரிக்கும் கீழ்  தட்பவெப்ப நிலை சென்று விட்டதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறிவிட்டது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பனி மழை கொட்டுகிறது. ஜெர்மனியின் வர்த்தக […]

ஜெருசலேம் விவகாரம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுக்கு மேற்கு ஆசிய நாடுகளில் கொந்தளிப்பு

ஜெருசலேம் விவகாரம்;  அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுக்கு  மேற்கு ஆசிய நாடுகளில் கொந்தளிப்பு

ஜெருசலேம்,டிச.11– ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா  அதிபர் டிரம்ப் அறிவித்ததற்கு மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி,  பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் லட்சக் கணக்கான மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த  6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும்  வெடித்தது. 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட  முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் வெடித்தது. லட்சக் […]

1 2 3 127