பக்தி பரவசப் பாடல் பக்தி ரசம் ததும்பும் விதத்தில் ஒவ்வொரு கடவுள்

பற்றியும், அருமை – பெருமை பற்றியும் ஒரு பாடல் இது. வாசகர்கள் படித்துப் பாடி மகிழலாம். ஆலயம் ஆலயம் மந்த்ராலயம்! பல்லவி ஆலயம் ஆலயம் மந்த்ராலயம்! – ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் அருளாலயம்!! (ஆலயம்) அனுபல்லவி ஞாலம் வேண்டுவதைத் தருமாலயம்! – எழில் கோலமுடன் கண்முன் வருமாலயம்!! (ஆலயம்) சரணங்கள் ஞானம் வழங்கிடும் அறிவாலயம்! – அன்பர் நாளும் வணங்கிடும் தேவாலயம்!! காலமும் துணைவரும் அன்பாலயம்! – ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மந்த்ராலயம்!! (ஆலயம்) துங்கபத்ரா கரையில் […]

சுருளிமலை சுருளி வேலப்பர் திருக்கோவில்

–:எஸ். தீனதயாளன்:– தேனி மாவட்டம், கம்பம் சுருளி மலையில் ஒரு குகையின் மீது அமைந்துள்ள முருகபெருமான் திருக்கோவில்.இதன் அருகில் சுரபி நதி ஓடுகின்றது. இங்குள்ள அதிசயம் என்னவென்றால், இங்குள்ள விபூதிக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி  அது காய்ந்த பின்பு பாறையாக மாறியது. மேலும் இந்த நீர் பட்ட இலை, தழைகள் தொடர்ந்து 40 நாட்கள் நீரில் நனைந்த பின்னர்,பாறையாக […]

பாலகன்-மகன்-பிள்ளை-மைந்தன் என்கிறோமே, அவர்கள் யார்? – சிவத்தமிழ் குகமணி தெ.தனபால்

உலகத்தில் உயிர்கள் ஏதேனும் ஒரு பிறவிகள் மூலமாக இங்கு உயிர் வாழ்கின்றன. உலகத்தில் உயிர்கள் 4 விதமாக தோன்றுகின்றன. ஒன்று முட்டையில் இருந்து உற்பத்தி யாவது, இரண்டாவது விதைகள் மூலம் பூமியை பிளந்துக் கொண்டு வருவது. மூன்றாவதாக காற்றுடன் சேர்ந்த ஈரத்தில் வருவது. கடைசி யாக நான்காவதாக கருப்பையில் வளர்ந்து பின்பு வெளிவருவதாகும். உயிர்கள் தோன்றுவதும், பின்பு ஏதேனும் ஒரு காரணத்தினால் உயிர்கள் மறைவதும் காலத்தின் கட்டாயங்கள் ஆகும். ஒரு உயிர் பல்வேறு பிறவிகள் எடுப்பதாக சைவசமய […]

முருகனின் ஆறெழுத்துண்மை

நாம் பூமியில் பெறுவதற்கு அரிய இந்த மானிடப் பிறவியை எடுத்து விட்டோம். இந்த பிறவியின் பலனை அறிந்து கொள்ளாமல் நாம் நமது வாழ்க் கையை பல விதமான செயல்பாடு களுக்கு ஆட்படுத்தி, கடைசியில் நாம் இதற்காகத் தானா இவ்வளவு துன்பப் பட்டோம்” என்று எண்ணி பல நேரங் களில் நினைவுபடுத்திக் கொள்கின்றோம். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று அவ்வை பிராட்டி இந்த மானிடப் பிறவின் பயனை நமக்கு உணர்த்துகின்றார். நாம் இந்த மானிடப் பிறவியை […]

எழுச்சி நாயகன் சுவாமி விவேகானந்தர்:

இந்தியாவை அகண்ட பாரதமாகவும் ஒரு தேசமாகவும் இந்திய மக்களை இணைத்தவர்கள் என்ற பட்டியலில் மூன்று முக்கியமான சான்றோர்கள் உள்ளனர். ஆதிசங்கரர், மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர். இவர்கள் தான் இந்தியாவை ஒன்றாக பார்த்தனர். ஒரே கலாசாரத்தில் உருவாகிய மக்களை இணைத்தனர். கேரளாவில் காலடியில் இருந்து இந்தியாவின் நான்கு திசைகளிலும் சென்று சமுதாய தர்மத்தை நிலை நாட்டினார் ஆதிசங்கரர். அதன் பின்பு மகாத்மா காந்தி மற்றும் சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று ஒருமைப் பாட்டிற்கு வழிவகுத்தனர். […]

துளசிதாசருக்கு உதவிய ஆஞ்சநேயர்

ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகா லட்சேபம் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ஒரு ஆலமரத்தில் […]