பாரதீய ஜனதா ஒரு நபர் காட்சி இருவர் ராணுவமாக சுருங்கியது

பாரதீய ஜனதா ஒரு நபர் காட்சி  இருவர் ராணுவமாக சுருங்கியது

சண்டிகர், மே 22– பாஜக தற்போது மோடி சர்க்காராக மாறி விட்டது என்று தெரிவித்துள்ள சத்ருகன் சின்கா, அக்கட்சியை ஒருநபர் காட்சி, இரு நபர் ராணுவமாக சுருங்கிவிட்டது என்றும் விமர்சித்துள்ளார். சண்டிகாரில், ஜன் கல்யான் மன்ச் என்ற அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பாஜகவின் முன்னாள் அமைச்சரான யஷ்வந்த் சின்காவும், பாஜக எம்.பி. சத்ருகன் சின்காவும் கலந்து கொண்டனர். சத்ருன் சின்கா பேசும்போது, பாஜக என்பது ஒரு நபர் காட்சியாகவும், இரு நபர் ராணுவமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார். […]

கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவியின் கன்னத்தில் அறைந்த குஜராத் போலீஸ்

கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவியின்  கன்னத்தில் அறைந்த குஜராத் போலீஸ்

அகமதாபாத், மே 22– இந்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவை, நடுரோட்டில் அனைவரும் பார்க்கும் வகையில் கன்னத்தில் அறைந்த போலீஸ் கான்ஸ்டபிள் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா. இவர், குஜராத்தில் ஜாம்நகரில் வசித்து வருகிறார். வழக்கம்போல் தன்னுடைய சொகுசு காரில், தாய், குழந்தையை அழைத்துக்கொண்டு நேற்று வெளியே சென்றார். பைக் மீது உரசல் அப்போது, சாலையில் பைக்கில் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அஹிர் […]

ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு  இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

புதுடெல்லி, மே. 22– ஒருநாள் பயணமாக ரஷ்யா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை இந்தியா திரும்பினார். விமான நிலையம் வந்து அதிபர் புதின் பிரதமர் மோடியை கட்டித்தழுவி வழியனுப்பி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ரஷ்யா நாட்டுக்கு சென்றார். கருங்கடல் கடலோர நகரான சோச்சிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், […]

கடல் கன்னியை போன்ற உடலுடன் பிறந்த குழந்தை

கடல் கன்னியை போன்ற உடலுடன் பிறந்த குழந்தை

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடல் கன்னியை போன்ற உடலுடன் குழந்தை பிறந்தது. ஆனால் 15 நிமிடங்களிலேயே உயிரிழந்தது. மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளியான திக்‌ஷா கம்பல் எனும் பெண்ணுக்கு கடல் கன்னியை போன்ற உடல் அமைப்புடன் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த 15 நிமிடங்களுக்குள் அந்த குழந்தை உயிரிழந்தது. 1.8 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தையின் கால்கள் இரண்டும் ஒட்டியவாறும், கைகள் மீனின் துடுப்புக்களை போல் உடலில் ஒட்டியவாறும் […]

குஜராத்தில் தலித் வாலிபர் அடித்து கொலை

குஜராத்தில் தலித் வாலிபர் அடித்து கொலை

குஜராத்தில் தலித் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். குஜராத்தின் ராஜ்கோட் அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியில் முகேஷ் வனியா என்ற தலித் வாலிபர் தனது மனைவியுடன் ரடாடியா கம்பெனி அருகே குப்பை பொறுக்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த கம்பெனியின் உரிமையாளர் ஜெய்சுக் ரடாடியா மற்றும் 4 பேர் சேர்ந்து முகேஷ் வனியாவை பிடித்தனர். பின்னர் அவர்கள், கணவன்–-மனைவி இருவரும் திருட வந்ததாக நினைத்து முகேஷை கட்டி வைத்து கம்பால் […]

பெண்கள் கல்லூரி விடுதியில் ராட்சத பல்லி

பெண்கள் கல்லூரி விடுதியில் ராட்சத பல்லி

டெல்லியில் பெண்கள் கல்லூரி விடுதியில் ராட்சத பல்லி நுழைந்து பீதியை ஏற்படுத்தியது. பின்னர் அந்த பல்லி அங்கிருந்து விரட்டப்பட்டது. டெல்லியில் நேதாஜி சுபாஸ் தொழில் நுட்ப கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் நுழைந்த ராட்சத பல்லியின் புகைப்படத்தை கிருத்திகா அனுராகி என்ற மாணவி புகைப்படம் எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். டெல்லியில் கடும் புயல் வீசிய காரணத்தினால் அந்த பல்லி பெண்களின் விடுதியில் நுழைந்துள்ளது. மொத்தம் மூன்று மாடிகளை உடைய பெண்களின் விடுதியின் ஒரு குறிப்பிட்ட அறையில் […]

காந்தி ஜெயந்தி நாளில் ரெயிலில் அசைவ உணவு கிடையாது

காந்தி ஜெயந்தி நாளில் ரெயிலில்  அசைவ உணவு கிடையாது

புதுடெல்லி, மே 20– காந்தி ஜெயந்தி நாளில் ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் அசைவ உணவு அளிக்கப்பட மாட்டாது என்று ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் ஓராண்டுக்கு சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காந்தியடிகள் கடைப்பிடித்த சைவ உணவுக் கொள்கையை முன்னிறுத்தும் நோக்கில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவரது பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி ரெயில்களிலும், […]

‘ஞாயிற்றுக்கிழமைகளில்’ எப்படி இருக்கலாம்? மக்களுக்கு ஹரியானா முதல்வர் ‘அட்வைஸ்’

‘ஞாயிற்றுக்கிழமைகளில்’ எப்படி  இருக்கலாம்? மக்களுக்கு  ஹரியானா முதல்வர் ‘அட்வைஸ்’

குருக்ஷேத்ரா, மே. 21– ‘உலகில் மகிழ்ச்சிகரமான 156 நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 133வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நிலைமை சூழ்நிலையை வளர்த்துக் கொள்ளவேண்டும். இப்பட்டியலில் முன் வரிசைக்கு வரவேண்டும்’ என்று அறிவுறுத்தினார் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ‘ஞாயிற்றுக்கிழமை அதாவது ‘சண்டே’ என்றால் அது ‘ஃபண் டே’ என்று தான் சொல்வோம். உண்மையில் அந்த ஃபண்டேயில் இருக்கும் ‘எப்’ என்ற ஆங்கில எழுத்து பர்குவ்னஸ்சைக் குறிக்கும். அதாவது மறப்போம் மன்னிப்போம், அடுத்த […]

சீக்கிய கலவரத்துக்கு காரணமானவர்களை தண்டிக்க எந்த எல்லைக்கும் செல்வோம்

சீக்கிய கலவரத்துக்கு காரணமானவர்களை  தண்டிக்க எந்த எல்லைக்கும் செல்வோம்

வாஷிங்டன், மே 21– சீக்கியர்களுக்கு எதிரான 1984ஆம் ஆண்டு கலவரத்துக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது எந்த எல்லைக்கும் செல்லத் தயார்” என்று பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார். வாஷிங்டன் மேரிலாண்ட் பகுதியில், சீக்கியர்களின் வைஷாகி திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் சீக்கியர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜகவின் பொதுச் செயலாளர் ராம் மாதவ், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு […]

பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி

பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதல்:  இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு, மே 21, சர்வதேச எல்லையில் போர்நிறுத்தம் கோரிய பாகிஸ்தான் பின் மீண்டும் இரவில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீரில் ரம்ஜான் மாதத்தில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து இதுபற்றிய உத்தரவு பாதுகாப்பு படைகளுக்கு அனுப்பப்பட்டது. எனினும் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் தொடர்ந்து நடந்து வந்தது. நேற்றும் இந்த தாக்குதல் தொடர்ந்தது. இதற்கு இந்திய படையினர் […]

1 2 3 83