பொறியியல் கல்லூரிகளில் புதிய கட்டண நிர்ணயம் தமிழக அரசு பரிசீலனை

பொறியியல் கல்லூரிகளில்  புதிய கட்டண நிர்ணயம்  தமிழக அரசு பரிசீலனை

சென்னை, ஜூலை 6– பொறியியல் கல்லூரிகளில் புதிய கட்டண நிர்ணயம் செய்ய அரசு பரிசீலனை செய்கிறது என்று சட்டசபையில் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, குடியாத்தம் தொகுதி உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் கேள்வி எழுப்பினார். குடியாத்தம் பகுதியில் பொறியியல் கல்லூரி அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்றார். அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பதில் அளிக்கையில், குடியாத்தம் தொகுதியில் பொறியியல் கல்லூரி அமைக்க கருத்துரு எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை. […]

ஆயிரம் மடங்கு வீரியமிக்க ஆண்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்பு

ஆயிரம் மடங்கு வீரியமிக்க ஆண்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்பு

லண்டன், ஜுன்.1 – நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழந்து போவது மனித சுகாதாரத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவாகியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 புதிய தகவல்கள்

சாம்சங் கேலக்ஸி நோட் 8 புதிய தகவல்கள்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிரீமியம் ஸ்மார்ட்போனான நோட் 8 சார்ந்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சாம்சங் கேலக்ஸி நோட் 8 புதிய புகைப்படங்களில் 6.2 இன்ச் கொண்ட டிஸ்ப்ளே 18:5:9 என்ற விகிதம் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற டிஸ்ப்ளே எல்ஜி ஏற்கனவே தனது ஸ்மார்ட்போனில் வழங்கியுள்ளதோடு, ஆப்பிள் நிறுவனமும் தனது ஐபோன் 8 மாடலில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி ஸ்மார்ட்போனினை ஒற்றை கையில் பயன்படுத்த உகந்ததாக இருக்கும். சாம்சங் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி […]

சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க ஏற்பாடுகள்: எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

  சென்னை, ஏப். 27– சென்னைக்கு மாற்று ஏற்பாடுகள் மூலம் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சப்ளை செய்யப்படுகிறது என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:- 142 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சியை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வறட்சியை வைத்து அரசியல் செய்யக்கூடாது. பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் […]

செவ்வாய் கோளில் வாழ்ந்திட அமைக்கப்படும் இக்ளூஸ் வீடு!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் ஒரு நாள் கண்டிப்பாக இக்ளூஸ் (igloos)  வீடுகளில்தான் வாழ்வார்கள். எஸ்கிமோக்களின் குடிசை போன்று காட்சியளிக்கும்  ஐஸ் வீடுகள், விண்வெளியில் உள்ள கதிர்வீச்சில் இருந்து மக்களை  காப்பாற்றுவதற்காக, செவ்வாய் கிரகத்தின் அடியில் இருந்து எடுக்கப்படும்  ஐஸ்-சை வைத்து மேற்பரப்பில் உருவாக்க உள்ளனர். இதனால் எதிர்காலத்தில்  மக்கள் விண்வெளியில் வாழ்வதற்கு பூமியில் இருந்து பொருட்களை எடுத்து  செல்லாமல், செவ்வாய் கிரகத்தின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வீடுகளை  அமைத்துக் கொள்ளலாம். செவ்வாய் கிரகத்தில் ஐஸ் வீடு  வடிவமைப்பு, […]

சர்க்கரை நோயாளிகளுக்கு தனிச்சிறப்பான 3டி காலணி!

சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு காலணிகளை ஆர்டர் கொடுத்து செய்ய வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு பாதங்களில் போதிய அளவுக்கு உணர்ச்சி இருக்காது. இதனால் காலணி கச்சிதமாக பொருந்தாதபோது, காயம் ஏற்பட்டு, அது முற்றி, பாதத்தையே அகற்ற வேண்டி வரலாம். ஜெர்மனியை சேர்ந்த, ‘பிரான்ஹோபர்’ என்ற நிறுவனம், இத்தகைய நீரிழிவு நோயாளிகளுக்கு, ‘3டி பிரின்டிங்’ எனப்படும் முப்பரிமாண அச்சு முறையில் காலணிகளின் அடிப்பகுதியை உருவாக்கி தருகிறது. நீரிழிவு உள்ளவரின் கால்களை ஒரு, ‘ஸ்கேனர்’ மூலம் துல்லியமாக அளவெடுத்து, […]

உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் வழிமுறைகள் என்ன?

உடலில் சேரும் நச்சுக்கள், எடை அதிகரிப்பு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். இதைத் தவிர, தசை வலி, வாய் நாற்றம் மற்றும் கடுமையான சரும எதிர் வினைகளுக்கும் இது வழிவகுக்கும். நம் உடலில் நச்சுக்கள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். நச்சுக்களை எவ்வளவு சீக்கிரம் நீக்குகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்ப முடியும். சோர்வாக உணர்கிறீர்களா? உடலில் உள்ள நச்சுக்கள், உங்கள் சக்தியைக் குறைத்து, உங்களை நாள் முழுவதும் சோர்வாக […]

கொசுவர்த்திச் சுருளின் புகை 75–137 சிகரெட்டுகளுக்கு சமம்!

நாம் வீட்டில் பயன்படுத்தும் கொசுவர்த்தி சுருளின் புகை 75–137 சிகரெட்டுகளுக்கு சமம் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், உட்புற காற்று மாசுபடுதலினால், (indoor air pollution) உலகளாவிய அளவில், ஒரு ஆண்டிற்கு 43 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நமது வாழ்நாளில் நாம் அதிகமாக உட்புற காற்றை சுவாசிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது. உட்புற காற்று எனும் போது, அது வீட்டை மாத்திரம் குறிப்பதல்ல, உதாரணமாக வீடு, அலுவலகம், வாகனம் போன்ற […]

எம்ஆர்ஐ கருவி செயல்படுவது எப்படி?

மனித உடல் பெரும்பாலும் நீர்தான். இந்த நீரில் உள்ள ஹைட்ரஜன் அணுவின் புரோட்டான்களை, எம்.ஆர்.ஐ. கருவியில் மிகுகாந்தப் புலத்தில் ஒரு திசையில் ஒருமுகப்படுத்துவார்கள். உடலின் எந்தப் பகுதியை ஆராய வேண்டுமோ அந்தப் பகுதியை நோக்கி, ரேடியோ அலைகளை அனுப்பி அங்கு புரோட்டான்களின் ஒருமுகத்தன்மையை குலைப்பார்கள். அந்த குறிப்பிட்ட பகுதியில், கலைந்து குலைந்த புரோட்டான்கள் மறுபடி ஏனைய புரோட்டான்களோடு ஒருமுகப்படும் போது, வெளியிடும் ரேடியோ அலைகள் உடலின் அந்தப் பகுதியை ஒளிரச் செய்கிறது. இதை வைத்து அந்தப் பகுதி […]

இருகாந்தப் புலத்தையும் தனியே பிரித்தது எப்படி?

பேராசிரியர் அல்வரோ சான்செஸ் உருவாக்கியது, விண்வெளி பற்றிய விஞ்ஞானக் கதைகளில் வருவதுபோல, அண்டவெளியைத் துளைத்து, ஈர்ப்பு விசையை மறைத்துச் செல்லும் புழுத்துளை அல்ல. இதன் ஊடாக, விண்வெளிக் கப்பல்களைச் செலுத்த முடியாது. ஆனாலும் புழுத்துளை போன்ற சாத்தியங்களை நோக்கிய முதல் அடிதான் இது. இதனை காந்தச் சுரங்கப் பாதை என கூறலாம். பூமிக்கு உள்ளே செல்லும் சுரங்கப்பாதையில், உள்ளே நுழையும் கார் புலப்படும். அதுபோல எதிர் முனையில் வெளிவரும் கார் காட்சிப் படும். இடையே சுரங்கத்துக்குள் உள்ள […]

1 2 3 19