சென்னை- – கன்னியாகுமரி இடையே கடலோர ரெயில் பாதை திட்டம்: மத்திய மந்திரி சுரேஷ் பிரபு தகவல்

சென்னை- – கன்னியாகுமரி இடையே கடலோர ரெயில் பாதை திட்டம்: மத்திய மந்திரி சுரேஷ் பிரபு தகவல்

சென்னை, ஜூன்.25-– தமிழக அரசு ஒத்துழைப்பு தந்தால் சென்னை -– கன்னியாகுமரி இடையே கடலோர ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு பேசினார். சென்னை எண்ணூர்- – திருவொற்றியூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே 7 கி.மீ. தூரத்துக்கான 4-வது ரெயில் பாதை, சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் ரூ.6.33 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 10 கிலோ வாட் சூரிய மின்சக்தி மையம், பல்லாவரம் ரெயில் நிலையத்தில் மேல்தள பயணச்சீட்டு அலுவலகம், […]

ரூ.8,165 கோடி விவசாய கடன்: கர்னாடக மாநில அரசு தள்ளுபடி

ரூ.8,165 கோடி விவசாய கடன்: கர்னாடக மாநில அரசு தள்ளுபடி

பெங்களூர், ஜூன் 25– கர்னாடகத்தில் வறட்சி நிலவுவதால் விவசாய கடனை மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், கர்னாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 13 நாட்களாக நடந்தது. இந்த கூட்டத்தொடரின் இறுதி நாளான கடந்த 21-ந் தேதி முதல்வர் சித்தராமையா ரூ.8,165 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து அறிவித்தார். இதுபற்றி சட்டசபையில் முதல்வர் சித்தராமையா பேசுகையில், ‘கடந்த 20-ந் தேதி வரை நிலுவையில் உள்ள குறுகிய கால […]

“தங்கப்பறவை” புதிய பட்டுச்சேலை அறிமுகம்

“தங்கப்பறவை” புதிய பட்டுச்சேலை அறிமுகம்

காஞ்சீபுரம், ஜூன் 25– காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் “தங்கப்பறவை” பட்டுச்சேலைகள் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சீபுரம் எம்.பி., மரகதம் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. காஞ்சீபுரம் காந்திரோட்டில் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் இச்சங்கத்திற்கு வந்து தரமான காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். மத்திய அரசின் காஞ்சீபுரம் நெசவாளர் சேவை மையம் மற்றும் காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் இணைந்து காஞ்சீபுரம் […]

போரூர் எம்.ஜி.ஆர். மேம்பாலம்: முதல்வர் எடப்பாடி திறந்தார்

போரூர் எம்.ஜி.ஆர். மேம்பாலம்:  முதல்வர் எடப்பாடி திறந்தார்

சென்னை, ஜூன்.25– முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (25–ந் தேதி) திருவள்ளூர் மாவட்டம், போரூர் சந்திப்பில் நடைபெற்ற விழாவில், கோடம்பாக்கம் – ஸ்ரீபெரும்புதூர் சாலை மற்றும் மவுண்ட் – பூவிருந்தவல்லி சாலை, போரூர் சந்திப்பில் 505 மீட்டர் நீளத்தில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாகனப் போக்குவரத்திற்காக கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, ஜெயலலிதாவை வணங்கி, அவரது நல்லாசியோடு, எம்.ஜி.ஆரை நினைவு கொள்ளும் விதத்திலே, […]

விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ரூ. 4.81 கோடியில் கட்டிடங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்தார்

விளையாட்டு பல்கலைக்கழகத்தில்  ரூ. 4.81 கோடியில் கட்டிடங்கள்:  முதல்வர் எடப்பாடி திறந்தார்

சென்னை, ஜூன். 25– முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 24–ந் தேதி தலைமைச் செயலகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், 4 கோடியே 81 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாகக் கட்டடத்தின் முதல் தளம், மாணவர், மாணவியருக்கான விடுதிக் கட்டடங்களின் முதல் தளம், துணைவேந்தர், பதிவாளர், ஆசிரியர் மற்றும் அலுவலர் குடியிருப்புகளை திறந்து வைத்தார். மேலும், 7 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக […]

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.1917½ கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.1917½ கோடி ஒதுக்கீடு

சென்னை, ஜூன்.25– நடப்பு நிதியாண்டில்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ரூ.1917  கோடியே 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சரோஜா தெரிவித்தார். சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு அத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– சமூகநலத் துறையை ஓர் சிறப்பான கருவியாகக் கொண்டு சமூகநலத் துறை என்றால், முழுமையான மனிதவள மேம்பாடு” என்ற நிலைக்கு உயர்த்தி […]

கட்டிடங்கள், மனை விற்பனையில் முறைகேடு செய்தால் அபராதம்; 3 ஆண்டு சிறை

கட்டிடங்கள், மனை விற்பனையில் முறைகேடு செய்தால் அபராதம்; 3 ஆண்டு சிறை

சென்னை, ஜூன்.25- கட்டிடங்கள், மனை விற்பனையில் விதிகளை மீறினால் 10% அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–- மத்திய அரசால் இயற்றப்பட்ட கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) சட்டம், 2016–-க்கு இணங்க தமிழக அரசு இதற்கான “தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) விதிகள், 2017” என்ற விதிமுறைகளை உருவாக்கி 22-–ந் தேதியன்று அறிவிக்கை செய்துள்ளது. சென்னை […]

அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.1½ கோடியில் சுகாதார பைகள்: அமைச்சர் சரோஜா அறிவிப்பு

அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.1½ கோடியில் சுகாதார பைகள்: அமைச்சர் சரோஜா அறிவிப்பு

சென்னை, ஜூன்.25– குழந்தைகளிடையே சுவாசத் தொற்று, வயிற்று உபாதைகள் பரவாமல் தடுக்க  54,500 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.1½ கோடியில் சுகாதார பைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் சரோஜா தெரிவித்தார். சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பில் 2017-–2018–ம் ஆண்டிற்கான அறிவிப்புகளை    அமைச்சர் சரோஜா சட்டசபையில் நேற்று வெளியிட்டார். தற்போது, சென்னை கெல்லீஸில் உள்ளஅரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வரும் கட்டிடம் 1972–ம் ஆண்டு கட்டப்பட்டது. 2015–ம் ஆண்டின் இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) […]

ஜெயலலிதா பெயரில் மகளிர் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்

ஜெயலலிதா பெயரில் மகளிர்  பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்

சென்னை, ஜூன். 25– பெண்கள் முன்னேற்றத்துக்காக முழுக்க முழுக்க பாடுபட்ட ஜெயலலிதா பெயரில் மகளிர் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் அண்ணா தி.மு.க. உறுப்பினர் இன்பதுரை கூறினார். சட்டசபையில் சட்டத்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் இன்பதுரை பேசினார் அவர் பேசியதாவது: மகாபாரதத்தின் போரின் முடிவிலே, கர்ணன் மாண்டுபோகிறான். கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரனான கர்ணன் இரத்தச் சேற்றிலே வீழ்ந்து கிடக்கிறான். அவனுடைய ஆவி பிரிந்து மேலோகத்திற்குச் செல்கிறது. மேலோகத்தில் இருக்கிற […]

தி.நகரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்

தி.நகரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்

சென்னை, ஜூன்.24– சென்னை தி.நகர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தி.நகர் சத்தியா கூறினார். தி.நகர் பகுதியில் 6 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் 22 பணிகளை நிறைவேற்றித் தரவேண்டும் என்று பணிகளை பட்டியலிட்டு கூறினார். சட்டசபையில் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் பி.சத்தியா பேசினார். அவர் பேசியதாவது:– அம்மாவின் அரசு, சென்னை மாநகராட்சியில் உலகத்தரத்தில் பிளாஸ்டிக் கலந்த […]

1 2 3 342