மதுரை ஹார்விப்பட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை :

மதுரை ஹார்விப்பட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை :

மதுரை,அக்.17– மதுரை ஹார்விப்பட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் ஆகியோர் ஆய்வு செய்த போது பச்சை மற்றும் நீல நிற குப்பை கூடைகள் வைத்திராத கடைக்கு ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். மதுரை ஹார்விப்பட்டி, நெல்லையப்பபுரம் மற்றும் திருநகர் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். மதுரை […]

தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா விழா

தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா விழா

சென்னை, அக். 17– சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா சமிதியின் (தேசப்பிதா மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டது) விழாவில் இன்று காலை (செவ்வாய்) துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பங்கேற்று சிறப்புரையாற்றினார். ‘இளைய தலை முறையினர் தாய்மொழிக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும். என்ன தான் பிறமொழியைக் கற்றாலும், எக்காரணத்தைக் கொண்டும் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது’ என்று அறிவுறுத்தினார். 1932ம் ஆண்டில் தி.நகரில் தேசப்பிதா மகாத்மா காந்தி நிறுவிய நிறுவனம் – அரிசன […]

திருப்பரங்குன்றத்தில் அண்ணா தி.மு.க.வி 46–வது ஆண்டு விழா;

திருப்பரங்குன்றத்தில் அண்ணா தி.மு.க.வி 46–வது ஆண்டு விழா;

திருப்பரங்குன்றம்,அக்.17– அண்ணா தி.மு.க.வின் 46–வது ஆண்டு விழாவையொட்டி மதுரை புறநகர் மாவட்ட அண்ணா தி.மு.க சார்பில் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.ஏல்.ஏ., கழக கொடியினை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். எம்.ஜி.ஆர். கடந்த 1972–ம் ஆண்டு அக்டோபர் 17–ந் தேதி அனைத்திந்திய அண்ணா தி.மு.க என்ற இயக்கத்தை உருவாக்கினார். இன்றைக்கு இந்த இயக்கம் 1 1/2 கோடி தொண்டர்களை கொண்டு நாட்டின் 3–வது பெரிய இயக்கமாக திகழ்ந்து வருகிறது. அண்ணா தி.மு.க […]

அண்ணா தி.மு.க. 46–வது ஆண்டு துவக்கவிழா

அண்ணா தி.மு.க. 46–வது ஆண்டு துவக்கவிழா

சென்னை, அக்.17– அண்ணா தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. அண்ணா தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு இன்று காலை, ஒருங்கிணைப்பாளரும், பொருளாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், தலைமை நிலையச் செயலாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக […]

அப்துல்கலாம் பிறந்த நாள்;மரக்கன்று வழங்கும் விழா

அப்துல்கலாம் பிறந்த நாள்;மரக்கன்று வழங்கும் விழா

பொன்னமராவதி, அக்.16– பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் பொன்னமராவதி சிட்டி லயன்ஸ் சங்கம், அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. கேசராபட்டியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிட்டி லயன்ஸ் சங்கத்தலைவர் பாலமுரளி தலைமைவகித்தார். செயலாளர் பிரவின்குமார், முன்னாள் ஊராட்சித்தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்பு டாக்டர் அப்துல்கலாம் திருவுருவப்படம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. இனிப்புகள் வழங்கினர். […]

தீபாவளி சிறப்பு பேருந்து: கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைச்சர் நேரில் ஆய்வு

தீபாவளி சிறப்பு பேருந்து: கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைச்சர் நேரில் ஆய்வு

சென்னை, அக்.17 போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்றும் தீபாவளி திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கப்படுவதை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவு வரை நேரில் ஆய்வு செய்தார். தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் வகையில் 15, 16 தேதியிலும் (17–ந் தேதி) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று (16–ந் தேதி) நள்ளிரவு வரை ஆய்வு செய்தார். […]

தீபாவளி : கவர்னர்,அரசியல் தலைவர்கள் வாழ்த்துச் செய்தி

தீபாவளி : கவர்னர்,அரசியல் தலைவர்கள் வாழ்த்துச் செய்தி

சென்னை, அக். 17– நாளை (புதன்) தீபாவளி பண்டிகை. இதையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர்  பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள ஒரு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:– ‘‘ தீபாவளி அறியாமை இருளை விரட்டியடிக்கும் அறிவின வெற்றியைக் குறிக்கும், தீமையை ஒழித்து நன்மையை பயக்கும் நாளைக் குறிக்கும், சுயமுன்னேற்றம், ‘தான்’ என்னும் அகந்தையை அழித்தல் வெறுப்புணர்வை அடியோடு விட்டொழித்தல் ஆகியவற்றையும் குறிப்பதாகும் தீபாவளி. இந்தத் தீபாவளித் திருநாளில் சகோதரத்துவம் […]

தீபாவளி பண்டிகை: மதுரை ஆதீனம் வாழ்த்து

தீபாவளி பண்டிகை:  மதுரை ஆதீனம் வாழ்த்து

அனைவரும் ஈகை குணம் கொண்டு வாழ்வோம் என்று மதுரை ஆதீனம் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை ஆதீனம் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- தீபாவளி என்பது பண வசதி கொண்டவர்களுக்கு அல்ல. வறுமையில் வாடுவோரை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் பணக்காரர்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான் தீபாவளி உருவாக்கப் பெற்றது. பணக்காரர்களுக்கு  தினசரி தீபாவளி தான். ஏழைகளுக்கு ஆண்டில் ஒரு நாள் தான் தீபாவளி. மனித உள்ளம் உயர்வான எண்ணங்களைக் கொண்டதாக அமைய […]

இங்கிலாந்தில் இளம் கோடீஸ்வரரான இந்தியா வம்சாவளி மாணவர்

இங்கிலாந்தில்  இளம் கோடீஸ்வரரான இந்தியா வம்சாவளி மாணவர்

லண்டன், அக். 17– இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் அக்‌ஷய் ரூபரேலியா. 19 வயதான இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பள்ளியில் படித்து வருகிறார். தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள இளம் வயது கோடீசுவரர்களில் ஒருவர் ஆகியுள்ளார். இவர் பள்ளியில் படித்துக் கொண்டே ‘ஆன்லைன்’ மூலம் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கிறார். அவர் ஒரு வருடத்தில் ரூ.1000 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளார். அதன் மூலம் ரூ.120 கோடி லாபம் ஈட்டியுள்ளார். தற்போது இவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் […]

11 ஆண்டுகளில் தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு

11 ஆண்டுகளில் தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு

கொல்கத்தா, அக். 17– கடந்த 11 ஆண்டுகளில், பாரதீய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. சொத்து மதிப்பில், பாரதீய ஜனதா முதலிடத்தில் இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், தங்கள் சொத்து மதிப்பை அவ்வப்போது தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, பாரதீய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 7 தேசிய கட்சிகள் […]

1 2 3 1,571