ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் காலியானதால் மரணம் அடைந்த நோயாளி

ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் காலியானதால் மரணம் அடைந்த நோயாளி

திருவனந்தபுரம், மார்ச் 21– ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்ற ஒரு நோயாளிக்கு, ஆக்சிஜன் சிலிண்டர் காலியானதால் அவர் மரணம் அடைந்தார். அவரது பெயர் ஜெபஸ்டியான் (வயது 64). திருவனந்தபுரம் அருகே உள்ள குளத்தோடு பகுதியை சேர்ந்த இவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய நோய் தாக்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். அதற்காக ஜெபஸ்டியானுக்கு சிகிச்சையும் […]

திருப்பதி வனப்பகுதியில் தீ விபத்தை தடுக்க 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள்

திருப்பதி வனப்பகுதியில் தீ விபத்தை தடுக்க 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள்

திருமலை, மார்ச் 21– திருமலை வனப்பகுதியில் தீ விபத்தை தடுக்க 4 இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருப்பதி, திருமலை பகுதியைச் சுற்றி உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் கோடைக்காலத்தில் அடிக்கடி தீ விபத்து சம்பவங்கள் நடப்பது வழக்கம். அதேபோல் சமீபத்தில் இரு முறை திருப்பதி மலைப்பாதையில் தீ விபத்து நடந்தது. சேஷாசலம் வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருமலையில் […]

ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காஞ்சீபுரம், மார்ச் 21– காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓத, வாண வேடிக்கை முழங்க, மங்கள வாத்தியங்களுடன் கொடியேற்றப்பட்டது. பின்னர் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மையார் பவழக்கால் சப்பரத்தில் […]

கனிஷ்க் தங்க நகை நிறுவனம் 14 வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி

கனிஷ்க் தங்க நகை நிறுவனம் 14 வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி

சென்னை, மார்ச் 21– 14 வங்கிகளில் சென்னையை சேர்ந்த தங்க நகை நிறுவனம் கனிஷ்க் ரூ. 824 கோடி மோசடி செய்துள்ளது. இந்த மோசடி குறித்து சிபிஐக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடிதம் எழுதியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் வெளிநாட்டு வங்கிகளை மோசடி செய்து ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி செய்தார் தொழிலதிபர் நீரவ் மோடி என்று பிஎன்பி வங்கி கூறியது. இந்த விஷயத்திலேயே இன்னும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சென்னையில் […]

அரசு மருத்துவமனையில் பணிபுரிய 2 திருநங்கைகளுக்கு ஆணை

சென்னை, மார்ச் 21– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (21–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், மூன்றாம் பாலினர்களான எஸ். நேயா மற்றும் எம்.பி.செல்வி சந்தோசம் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் முறையே ஆய்வக நுட்புணர் நிலை -2 (Lab Technician Grade-II) மற்றும் இயன்முறை சிகிச்சையாளர் நிலை-2 (Physiotherapist Grade-II) பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மூன்றாம் பாலினர் நலனிற்காக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மூன்றாம் பாலினர்களுக்கு ஆயிரம் […]

தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தினால் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தினால் யாராக இருந்தாலும்  பாரபட்சமின்றி நடவடிக்கை

சென்னை, மார்ச் 21– தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தினால், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார். பெரியார் சிலைகள் உடைப்புக்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் புதுக்கோட்டை, வேலூர் மாவட்டங்களில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:– புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி […]

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர்ப்பயிற்சி

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர்ப்பயிற்சி

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர்ப்பயிற்சி ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கும். அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக சற்றே தாமதமாக நடைபெறும் என கடந்த ஜனவரி மாதம் தென்கொரியாவும், அமெரிக்காவும் அறிவித்தன. இந்த நிலையில், இவ்விரு நாடுகளின் கூட்டு போர்ப்பயிற்சி ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இது முந்தைய ஆண்டுகளில் எந்த அளவுக்கு […]

உலகக்கோப்பை தகுதிச்சுற்று: ஆப்கானிஸ்தான் வெற்றி

உலகக்கோப்பை தகுதிச்சுற்று: ஆப்கானிஸ்தான் வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. யுனைடெட் அரபு எமிரேட்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் – யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய அரபு எமிரேட்ஸ் அணி 43 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷீத் கான் 5 விக்கெட்டும், தவ்லத் […]

மொபைல் போன் வெடித்துச் சிதறி இளம் பெண் பலி

மொபைல் போன் வெடித்துச் சிதறி இளம் பெண் பலி

மொபைல் போன் வெடித்துச் சிதறி இளம் பெண் பலியானார். சார்ஜ் போட்ட நிலையிலேயே பேசியதால் போன் வெடித்தது ஓடிசா மாநிலம் கெரியகனி கிராமத்தைச் சேர்ந்த உமா ஓரம் என்பவர் தன் உறவினர்களிடம் போனில் பேசியுள்ளார். அப்போது மொபைல் போனில் சார்ஜ் குறைந்ததன் காரணமாக, உடனடியாக சார்ஜ் போட்ட நிலையிலேயே போன் பேசியுள்ளார். இதனால் போன் திடீரென்று வெப்பம் அதிகரித்து வெடித்துச் சிதறியுள்ளது. இதை அறிந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கைகள் மற்றும் உடலின் சில […]

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு சிறப்பு தபால் தலை

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு சிறப்பு தபால் தலை

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய தபால் துறை வெளியிட்டது. மரணமடைந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவரின் விடாமுயற்சியின் மூலம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். இயற்பியலில் அவர் செய்த ஆராய்ச்சி அவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது. 76 வயதில் தனது வீட்டில் கடந்த வாரம் இறந்தார். அவரது மறைவுக்கு உலகில் உள்ள பல்வேறு தலைவர்கள் […]

1 2 3 260