மஹா எச்.டி. பிளஸ் சிமெண்ட் அறிமுகம்

சென்னைஜுன் 14–

மைஹோம் குரூப் கட்டுமான துறைக்கு நீடித்து உழைக்க கூடிய, உறுதியான கான்கிரீட் கலவைக்கு களிமண்கள் கலவையுடன் உயர்தர ‘மகா எச்.டி. பிளஸ்’ சிமெண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிமெண்ட் பூச்சில் விரிசல், அரிப்பு ஏற்படாது. கழிவு நீர் சுத்திகரிப்பு, கடல் பாலங்கள், துறைமுக கட்டிடங்களுக்கேற்ற சிமெண்ட்டாகும். இது ஆண்டுக்கு 1 கோடி டன் சிமெண்ட் உற்பத்தி செய்கிறது. இதற்கு 4வது தொழிற்சாலை தூத்துக்குடியில் நிறுவப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது என்று இதன் நிர்வாக இயக்குனர் ரஞ்சித் ராவ் ஜுபாலி தெரிவித்தார்.

மக்னீசியா, சல்ஃபர், காரங்கள் மற்றும் குளோரைடு போன்ற மிகவும் கெடுதல் குறைந்த சேர்க்கைப் பொருட்களுடன் உயர்தரம் வாய்ந்த எரிசாம்பலைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் மஹா HD+ சிமெண்ட் கட்டுமானத் தொழிலில் நீடித்து நிலைத்த கட்டுமானத்திற்கு உறுதி அளிக்கிறது. இதில் கால்சியம் சிலிகேட் மிகவும்சக்தி வாய்ந்தது. இவை கட்டமைப்பின் வலிமையை மேம்படுத்துவதுடன், கட்டமைப்பிற்கு ஆயுளை கொடுக்கிறது. இது பிரத்யேக கனிம கலவைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப் படுவதால், மற்ற வழக்கமான சிமெண்டுடன் ஒப்பிடும்போது, இதில் உயர்ந்த தொழில்நுட்ப பண்புகள் உள்ளன.

இந்தியாவில் கட்டுமானத் தொழில் வளர்ந்து வருகிறது. எனவே, புதிய மஹா HD+ தகுந்த நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது கட்டுமான துறைக்கும் மற்றும் அதற்கு அப்பாற்பட்டும் அனுகூலமான பயன்களை கொண்டுவரும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று ரஞ்சித் ராவ் ஜுபாலி கூறினார்.

புதிய சிமெண்ட் அறிமுகம் குறித்து மார்க்கெட்டிங் பிரிவு தலைவரான விஜய் வர்தன் ராவ் பேசுகையில், “மஹா HD+ சிமெண்ட் நல்ல நீண்ட ஆயுள் தருகிறது, நீண்டகால வலிமை தருகிறது மற்றும் பாதகமான சுற்றுச்சூழல் கட்டுமானங்களுக்கு உயர் எதிர்ப்புதன்மை தருகிறது. இந்த சிறந்த பண்புகள், அனைத்து வகையான குடியிருப்பு கட்டுமானங்களிலிருந்து பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் விரையிலான மற்றும் கடல்நீர் சுற்றுச்சூழலுக்கு வெளிப்படும் செயல்திட்டங்கள் வரையிலான கட்டுமானங்களுக்கு மிகவும் முன்னுரிமையளித்து விரும்பப்படும் சிமெண்ட்டாக ஆக்கியிருக்கிறது. இது, கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் கடல் பயன்பாடுகள் போன்ற மோசமான சுற்றுச்சூழல்களுக்கு கான்கிரீட் வெளிப்படுபவற்றிற்கு மிகவும் பயனளிக்கக்கூடியதாகும்,” என்று கூறினார்.