உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்வு அளிக்கும் குடிநீர் வழங்கும் புளு ஸ்டார் நவீன நீர் சுத்திகரிப்பு சாதனங்கள்

சென்னை, ஜூன். 14–

வீட்டு உபயோக சாதனங்கள் தயாரிக்கும் புளு ஸ்டார் நிறுவனம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்வு அளிக்கும் குடிநீர் வழங்கும் புதுமை நவீன நீர் சுத்திகரிப்பு சாதனங்களை தயாரித்துள்ளது. இதன் இணை நிர்வாக இயக்குனர் பி.தியாகராஜன் அறிமுகம் செய்தார்.

புளு ஸ்டார் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநர் பி. தியாகராஜன் பேசுகையில், “வீட்டு உபயோக வாட்டர் ப்யூரிபையர் வர்த்தகத்தில் நாங்கள் நுழைந்தது முதல் பல விலைகளில் பல ரக வாட்டர் ப்யூரிபையர் வழங்கி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளளோம். இந்த நிறுவனம் குறிப்பிடத்தக்க முதலீட்டை செய்து, பொருட்களின் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையில் இந்த துறையில் ஒரு அளவு கோலை நிர்ணயம் செய்ய உதவி கொண்டுள்ளது. எங்களின் இந்த பொருட்களின் ரகங்கள் எங்களின் பிரீமியம் பிராண்டு பிம்பத்துடன் நன்றாக ஒத்து போகிறது மற்றும் எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக 50 ஆயிரம் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த துறையில் இந்நிறுவனம் தனது இருப்பிடத்தை, தனது பல வகையான பொருட்களின் மற்றும் ஆழமான விநியோகம் மூலம் நிதியாண்டு 19-ல் தக்க வைத்து கொள்ள திட்டமிட்டுள்ளது மற்றும் இன்றும் 3 வருடத்தில் 10% சந்தை பங்கை அடைய திட்டமிடடுள்ளது ” என்றார்.

புளு ஸ்டார் நிறுவனம் RO, UV, RO+UV மற்றும் RO+UV+UF தொழில்நுட்பங்களை கொண்ட, பல்வேறு விலை புள்ளிகளில் கண்கவர் மற்றும் தனித்துவ மிக்க வீட்டு உபயோக வாட்டர் ப்யூரிபையர்களை அறிமுகம் செய்கிறது. இவை ‘‘அல்கலைன்’’ புத்துணர்வு தரும் தண்ணீரை வழங்குகிறது. இந்த தண்ணீர் மனித உடம்பில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, ஆரோக்கியமாகவும் சரியாகவும் செயல்பட வைக்கும்.

இம்யூனோ பூஸ்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த சுத்தமான குடிநீரில் தாது மற்றும் நைட்ரஜன் மிகுதியாக காணப்படும். இவை உடம்பு செயல்பாட்டை சீராக வைக்கும். இவை ஒருவரின் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்க உதவும் மற்றும் சுத்தமான, தேவையான தாதுக்களை அளிப்பதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து. pH அளவை உயர்த்தி நீரை ஆண்ட்டி ஆக்ஸிடண்டாக மாற்றும்.

புளு ஸ்டார் இந்த ஆண்டு 75 வருடங்களை பூர்த்தி செய்கிறது. இந்நிறுவனம் வீட்டு உபயோக வாட்டர் ப்யூரிபையர் வர்த்தகத்தில் அக்டோபர் 2016-ல் நுழைந்தது.

தண்ணீர் தரம் மோசம் அடைந்து அதன் மூலம் தண்ணீர் சார்ந்த பல நோய்கள் பாதிப்பு அதிகரித்துள்ளதால், தூய்மையான குடிநீர் வர்த்தகம் வளர்ச்சியடைந்துள்ளது. பெரிதும் சார்ந்துள்ள நிலத்தடி நீரிலும் போதுமான அசுத்தங்கள் கலந்துள்ளது. இந்நாட்டில் வீட்டு உபயோக வாட்டர் ப்யூரிபையர் சந்தை வர்த்தகம் ரூ.4200 கோடி என்று உள்ளது.

புளு ஸ்டார், மின்சார சாதனங்கள் பிரிவில் பல வண்ணங்களில் 35 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இதில் சில மாடல்கள் இம்யூனோ பூஸ்ட் தொழில்நுட்பம் கொண்டது. இதன் வகைகள் 9 தொடர்களை கொண்டது. அவை ஸ்டெல்லா, ப்ரீஸ்மா, எடஜ் இம்பீரியா, எலியநார், மெஜஸ்டோ, கெனியா, அரிஸ்டோ மற்றும் ப்ரிஸ்டினா. இதன் விலை புள்ளிகள், RO மற்றும் பல ரகங்களில் ரூ.10,900 லிருந்து ரூ.44,900 மற்றும் UV வகையில் ரூ.7,900 முதல் ரூ.8,900 வரையிலாகும். இந்நிறுவனம் இந்த வர்த்தகத்தில் நுழையும்போது குறிப்பிட்ட விலைகளில் 13 மாடல்கள் இருந்தன. தற்போது இந்த நிறுவனம் பல்வேறு விலைகளில் தனது ரகங்களை விரிவாக்கம் செய்துள்ளது.