யுகேயின் ஹார்ப்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழகத்துடன் உணவு உற்பத்தியை அதிகரிக்க டாபே நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை, ஜூன். 13–

டாபே நிறுவனம் உலகம் முழுவதும் நிலையான உணவு உற்பத்தியை கொடுப்பதற்கான அதிநவீன தொழில்நுட்ப, வேளாண் மற்றும் கல்வி சார்ந்த தீர்வுகளை உருவாக்குவதற்காக யுகே சார்ந்த ஹார்ப்பர்ஆடம்ஸ் பல்கலைக்கழகத்துடன் சர்வதேச ஒத்துழைப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஹார்ப்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழகம் என்பது, ஐக்கிய முடியரசில் 1901-ல் நிறுவப்பட்ட ஒரு வேளாண் பல்கலைக்கழகம் ஆகும். அக்ரிகல்ச்சர் எஞ்ஜினியரிங் பிரசிஷன் அண்டு இன்னொவேஷன் – எனப்படும் வேளாண் பொறியியல் மையம் ஆகும்.

ஹார்ப்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழக வேளாண் -– இபிஐ மையத்துடனான ஒத்துழைப்பு திட்டத்தில் கூட்டு ஆராய்ச்சி செயல்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், கூட்டு பிரசுர வெளியீடுகள் மற்றும் பணியாளர் பரிமாற்றங்கள் ஆகியவை உள்ளடங்கும். இந்த ஆராய்ச்சியில் வேளாண்மை, பொறியியல் மற்றும் தன்னாட்சி விவசாயம் குறித்த தொழில்நுட்ப மேம்பாட்டுத்திட்டங்கள் மற்றும் ஆற்றல் திறன்மிக்க கருவிகள், ஆளில்லா வான்வழி வாகனம் அமைப்புகள் மற்றும் டாபேயி-ன் ஜெ பார்ம் இந்தியா ஆராய்ச்சி மையத்தில் நடைமுறைப்படுத்தவிருக்கும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஹெக்டேர் செயல்திட்டம் ஆகியவற்றின்மீது முனைப்பு செலுத்தப்படும்.

டாபே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கேசவன் கூறுகையில், குறு மற்றும் பெரிய பண்ணைகள் ஆகிய இரண்டிற்கும் பயன்படக்கூடிய நிலையான விவசாய மாதிரிகளை உருவாக்குவதற்கு ஒருங்கிணைந்த விவசாய நுட்பங்களை துல்லிய வேளாண்மை மற்றும் பொறியியலுடன் ஒன்று சேர்ப்பது நோக்கமாக இருப்பதால், ஹார்ப்பர் ஆடம்ஸ் – அக்ரி- இபிஐ மையத்துடன் டாபே ஏற்படுத்தியிருக்கும் ஒத்துழைப்பு, ‘உலகைப் பண்படுத்தல் என்ற டாபேயின் தொலைநோக்கை மீண்டும் உறுதிப்படுத்துவதாகும். இந்த ஒத்துழைப்பு பலவிதமான அதிநவீன பயிற்சித்திறன்களையும், கற்றலையும் மேம்படுத்துவதற்கும் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப மாற்றுகை மற்றும் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கும் வாய்ப்புகளை வழங்கும்,” என்றார்.

agri-tech innovation hub

18 மாதங்களாக…

டாபே-வைச் சேர்ந்த பொறியாளர்கள், ஹார்ப்பர்ஆடம்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள புதிய வேளாண் – இபிஐ மையத்திற்குள், அம்மையத்தின் முதல் முக்கிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திட்டததில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளனர். இக்குழுவின் வருகை குறித்து ஹார்ப்பர்ஆடம்ஸ் பல்கலைக்கழக பொறியியல் துறை விரிவுரையாளர் கிட் பிராங்க்லின் அவர்கள் கூறுகையில், ஹார்ப்பர்ஆடம்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள நாங்கள் கடந்த 18 மாதங்களாக டாபே உடன் தொடர்புகள் மேற்கொண்டு வருகிறோம். இங்கு யுகே-வில் நாங்கள் தொடங்கவிருக்கும் எங்களுடைய முதல் ஒத்துழைப்பு பொறியியல் செயல்திட்டத்தில் பங்கேற்பதற்காக டாபேயி-ன் சிறப்பு மிகுந்த மேம்பாட்டு மையத்திலிருந்து வந்திருக்கும் இந்த ஆர்வமிகு இளம் பொறியியலாளர்கள் அடங்கிய குழுவினரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இக்குழுவினர் இச்செயல்திட்டத்தை சிறப்பாக பூர்த்தி செய்வதோடு, பிரிட்டிஷ் வேளாண்மை நுட்பங்களுடனும் புதுமையான யோசனைத் திட்டங்களுடன் இந்தியாவுக்குத் திரும்புவார்கள் என்று நான் உறுதிபட நம்புகிறேன்,” என்றார்.

அவர்களை அக்ரி- இபிஐ சென்டருக்கு வரவேற்ற, நியூபோர்டு சென்டர் ஹப் மேனேஜர் லீ வில்லியனம்ஸ் கூறுகையில், இந்த மையத்திற்குள் முதல் முக்கிய ஆர்&டி செயல்திட்டம் வருவது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உலகளவில் ஒரு மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமான டாஃபே, ஹார்ப்பர் ஆடம்ஸ் உடன் இணைந்து ஒத்துழைப்பில் ஈடுபடுவது அதைவிட அதிகமாக மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது,” என்றார்.