புன்னகை மன்னன் நீர் வீழ்ச்சியில் ஆர்பரித்துக் கொட்டும் வெள்ளம்

வால்பாறை, ஜூன் 13 –

தமிழகத்தில் தென்மேறகு பருவ மழை மிகவும் தீவிரமடைந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமான வால்பாறையில், கடந்த ஒரு வாரமாக பருவ மழை, மிகவும் தீவிரமடைந்த நிலையில் உள்ளது.

வால்பாறை சுற்றியுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து துள்ளிக்குதிக்கின்றன. இது மூலம் மிகவும் பிரசித்திபெற்ற சோலையார் அணையின் நீர் வரத்து, மள மளவென உயர்ந்து, 160 அடி கொள்ளளவுள்ள அணையின் நீர் மட்டம், இன்று காலை நிலவரப்படி 112 அடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல், சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வந்து செல்லும், வால்பாறை கூழாங்கல் ஆற்றில், தண்ணீர் கரைபுரண்டோடுகின்றது. இதைக்காண, ஏராளமான சுற்றுலாவினர் வந்து குவிகின்றனர்.

இதே போல், வால்பாறை அடுத்துள்ள மிகவும் புகழ்பெற்ற புன்னகை மன்னன் நீர் வீழ்ச்சியிலும், சார்ப்பை நீர்வீழ்ச்சியிலும் வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதைக்காண நுற்றுக்கணக்கான சுற்றுலாவினர் இங்கு குவிந்துள்ளனர்.