புதுமையான கண்டுபிடிப்புகள் தலைப்பில் கருத்தரங்கு: இந்தியத் திறன் பயிற்சி மேம்பாட்டு அமைப்பு ஏற்பாடு

சென்னை, ஜூன். 12–

இந்திய திறன் பயிற்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு புதுமையான கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் 47வது தேசிய கருத்தரங்கை நடத்தியது. இக்கருத்தரங்கில் நிறுவனத்தில் தொடர் வளர்ச்சிக்கு புதுமையான கண்டுபிடிப்புகள் எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவன டைரக்டர் ரஞ்சன் குமார் மகாபாத்ரா இந்த கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

இந்திய திறன் பயிற்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் கார்த்திகேயன், கோழிக்கோடு ஐ.ஐ.எம். டைரக்டர் வினயசில் கவுதம் ஆகியோர் பங்கேற்றனர்.

வினையசில் கவுதம், மனிதவள மேம்பாட்டில் ஆரம்பகால கட்டம் பற்றி பேசினார். மனிதவள மேம்பாட்டில் புதுமை என்பது மனிதவள திட்டம், தகவல் பரிமாற்றம், மனிதவள அலுவலக கணக்கு மற்றும் தணிக்கை, மனிதவள மதிப்பீடு போன்ற அம்சங்களை கொண்டதாகும்.

மனிதவள மேம்பாட்டில் புதுமை என்பது கலாச்சாரம், உயிரியல், உளவில், சூழ்நிலை மற்றும் பொருளாதாரம் ஆகியவை மனித உறவுடன் ஒருங்கிணைந்திருக்க வேண்டுமென்று கூறினார்.

இந்தியன் ஆயில் நிறுவன இயக்குனர் ரஞ்சன் குமார் மகாபாத்ரா பேசுகையில், சமையல் எரிவாயு நேரடி மானியம் பற்றி பேசும்போது, ஒரு சிறிய யோசனை எவ்வாறு இந்திய பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உறுவாக்கியது என்பது பற்றி விளக்கினார்.

அவர் மேலும் பேசும்போது, ஒரு நிறுவனத்தின் வெற்றியை பற்றி பேசினார். ஒரு சிறிய நோய் தீர்வு ஸ்டார்ட் அப் நிறுவனம் எவ்வாறு ஒரு சர்வதேச நிறுவனமாக உருவாகியது என்பது பற்றி விவரித்தார். மருத்துவதுறை தொழில்நுட்பத்தில் புதிய யோசனைகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வெற்றிக்கு வழிவகுக்கின்றன என்று கூறினார்.

இந்த கருத்தரங்கில் அகில இந்தியா முழுவதுமிருந்து 800 தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டனர். பொதுத்துறை நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.