பழனியில் சிலம்பாட்ட போட்டியில் விருது பெற்ற மாணவிக்கு பாராட்டு

பழனி, ஜூன்.13–
பழனியில் சிலம்பாட்ட போட்டியில் காமராஜ் விருது பெற்ற மாணவி கல்பனா குட்டிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் வேல்ஸ் கோர்ட் ஓட்டலில் சிலம்பாட்டம் தனித்திறன் போட்டியில் காமராஜ் விருதை மாவட்ட கலெக்டரிடம் பெற்றும், 2016–2017–ம் ஆண்டு அரசுப் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி க.பா.கல்பனாகுட்டிக்கு பாராட்டு விழா பழனியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட சிலம்பாட்ட சங்கத்தலைவர் கந்தவிலாஸ் என்.பாஸ்கரன் தலைமை வகித்தார்.
சோமசுந்தரம் சிலம்பம் பயிற்சி பள்ளி சோமசுந்தரம், நடராஜன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர் மன்றத்தலைவர் வி.ராஜமாணிக்கம், ஆசிரியர் திருமலைச்சாமி, அரசு பெண்கள் பள்ளி தலைமையாசிரிசர் பழனிச்சாமி, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.சுப்பிரமணி, மாணவியின் தந்தை பாண்டியராஜன், ஜிம் மாஸ்டர் நாகவடிவேல், தோழர் மோகன், பேராசிரியை மோகனா, கே.பி.கருப்பணன், தனபால், கராத்தே மாஸ்டர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவி கல்பனாகுட்டிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.